ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

வனிதா லேடீஸ்கூட பேசிட்டு இருந்தால அது அவளுக்கு தெரியலை. அவ என்னை கவனிக்கும் போது அப்பா என்னை அங்கே இருந்து வெளியே இழுத்துட்டு வந்துட்டு இருந்தார். அப்பாவை தடுத்து அப்பாகூட வனிதா பெரிசா சண்டை போட்டா … God! when she wants to, she can make people just shut up and listen to her … அப்பா வாயடைச்சுப் போயிட்டார். அடுத்த நாளே நாங்க தனிக் குடித்தனம் போக நாங்க முடிவெடுத்தோம். வீட்டில் எல்லோருக்கும் வருத்தம். பட், we did it”

அமுதா, “சோ, உனக்காக அவ பழியை வாங்கிட்டாளா?”

விஸ்வா, “எஸ்”

அமுதா, “பட், நான் அவகூட பேசினப்போ நீயும் ராமும் ரொம்ப நெருக்கம்ன்னு சொன்னாளே?”

விஸ்வா, “அதுக்கும் வனிதாதான் காரணம். தனிக் குடித்தனம் வந்த பிறகு .. தன்னால் தான் நாங்க பிரிஞ்சு வந்துட்டோம்ன்னு ராம் ரொம்பவே கஷ்டப் பட்டான். நானும் ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். எங்க ரெண்டு பேரையும் ஒண்ணா உக்கார வெச்சு அவதான் எங்க ரெண்டு பேரின் தப்பையும் சுட்டிக் காட்டி மறுபடி எங்க ரெண்டு பேருக்கு நடுவில் க்ளோஸ்னஸ் வர வெச்சா. From that point we never looked back. நான், வனிதா, ராம் மூணு பேரும் ஒரு டீம். அவங்க ரெண்டு பேருமா சேர்ந்து … they made me feel better”

அமுதா, “வாவ்! என்ன செஞ்சாங்க?”

விஸ்வா, “நிறைய … அதற்குப் பிறகு எந்த அக்கேஷனா இருந்தாலும் ராமோ வனிதாவோ என் பக்கத்திலேயே இருப்பாங்க. எல்லார்கிட்டேயும் ராம் என்னைப் பத்தி ரொம்ப பெருமையா வார் ஹீரோன்னு இன்ட்ரொட்யூஸ் பண்ணுவான். He used to always make me feel good. .. எனக்கு தன்னம்பிக்கை வரணும்ன்னு இன்னொரு காரியமும் செஞ்சாங்க”

அமுதா, “என்ன?”

விஸ்வா, “வார்ல அடிபட்டு மூணு வருஷம் ஆகி இருந்தாலும் என்னால் முன்ன மாதிரி ஸ்ட்ரெயின் எடுத்துக்க முடியலை. எனக்கு முன்ன மாதிரி ஸ்போர்ட்ஸில் கலந்துக்க முடியலைன்னு ரொம்ப வருத்தமா இருக்கும். அதே சமயம் டாக்டர் சொன்னபடி ஃபிஸியோ தெரபி எக்ஸர்ஸைஸ் பண்ணவும் சோம்பேறித்தனம். என்னை இம்ப்ரூவ் பண்ணறதை அவங்க ரெண்டு பேரும் ஒரு ப்ராஜெக்டா எடுத்துட்டாங்க. 2003 மே மாசம் நடந்த மாரத்தானில் ஹாஃப் மாரத்தான் 21 கிலோ மீட்டர் ரெண்டு மணி நேரத்தில் ஓடி கம்ப்ளீட் பண்ணினேன். That really boosted my morale. I really owe that to Vanitha and Ram”

அமுதா, “என்ன செஞ்சாங்க?”

விஸ்வா, “2002 அக்டோபர் மாசத்தில் இருந்து … அப்போதான் நாங்க மறுபடி ஒண்ணு சேர்ந்தோம் .. அப்ப இருந்து அல்மோஸ்ட் தினமும் என் ஃபிஸியோ தெரபி எக்ஸர்ஸைஸுக்கு ராம் பொறுப்பு எடுத்துட்டான். கூட தினமும் சைக்கிளிங்க் அல்லது ஸ்விம்மிங்க். அதுக்கு வனிதா பொறுப்பு எடுத்துட்டா”

அமுதா, “இதுக்கெல்லாம் உனக்கும் அவங்களுக்கும் நேரம் இருந்ததா?”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.