ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

அவமானத்தில் தலை குனிந்த விஸ்வா, “Yes!”

அமுதா, “சின்ன வயசில் இருந்து உங்க ரெண்டு பேருக்கும் இடையே எப்படிப் பட்ட உறவு இருந்தது?”

விஸ்வா, “சின்ன வயசில் இருந்து .. We had sibling rivalry … நாங்க ரெண்டு பேருமே நல்லா படிப்போம். ஆனா நான் ஒரு ஆல்-ரவுண்டர். அதனால அவனுக்கு என் மேல் ரொம்ப பொறாமை இருந்தது. அவன் வெளியில் சொல்லலை. ஆனா, I sort of could feel it. அவனுக்கு AIMSஇல் இடம் கிடைச்சு எனக்கு ஐ.ஐ.டியில் இடம் கிடைக்காம போனப்போ நான் அவனைப் பாத்து பொறாமைப் பட ஆரம்பிச்சேன். ஆனா ஒன்ஸ் நான் என்.டி.ஏவில் சேர்ந்ததும் … I became alright. ஆனா, எங்க கல்யாணம் ஆன புதுசில் என் வேலையும் எனக்கு பிடிக்காம இருந்தது. சேர்ந்த உடனே ரிஸைன் பண்ணிட்டு வேற வேலை தேடவும் முடியாத நிலை”

அமுதா, “ஏன்?”

விஸ்வா, “அடிக்கடி வேலையை மாத்தறது சரியில்லைன்னு அப்பா சொன்னார். எனக்கும் அவர் சொல்லறது சரின்னு பட்டது. அந்த பொஸிஷனில் பொதுவா ரெண்டு வருஷம் அல்லது அதிக பட்சம் மூணு வருஷத்தில் ப்ரொமோஷன் கிடைக்கும். அதனால் ப்ரொமோஷன் கிடைக்கும் வரை பல்லைக் கடிச்சுட்டு இருக்கலாம்ன்னு நானும் வனிதாவும் முடிவு எடுத்தோம்”

அமுதா, “ஓ, நீ வனிதாகூட உன் வேலையைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவியா?”

விஸ்வா, “Of course! She knew me better than myself (என்னைப் பத்தி என்னைவிட அவளுக்கு நல்லா தெரியும்)” சொல்லி முடித்த பின்னரே தான் என்ன சொன்னோம் என்று அவன் உணர்ந்ததை அவன் முகம் காட்டியது. தலை குனிந்தான்

அமுதா, “ம்ம்ம் … அப்போ என்ன நடந்தது?”

விஸ்வா, “ராமைப் பத்தி அடிக்கடி வீட்டில் பேசிக்கும் போது எனக்கு கொஞ்சம் எரிச்சலா இருக்கும். வெளியே காட்டிக்க மாட்டேன். ஆனா வனிதா … She spotted my discomfort very early .. அடிக்கடி வெளிப்படையா இல்லாம எனக்கு ஹர்ட்டிங்கா இல்லாத மாதிரி ரொம்ப நாசூக்கா எனக்கு அட்வைஸ் பண்ணுவா. ஒன்ஸ், வீட்டில் எல்லாம் ஒண்ணா உக்காந்து சாப்பிடும் போது போது ராமைப் பத்தி பேச்சு வந்தது. உடனே அவ வேலையைப் பத்தி சாப்பிடும் போது வேண்டாம் வேற எதாவுது பேசலாமேன்னு எல்லாருக்கும் மூஞ்சியில் அடிக்கற மாதிரி சொன்னா. மத்தவங்க அவளுக்கு ராம் மேல பொறாமைன்னு நினைச்சாங்க. ஆனா நான் தான் ராம் மேல பொறாமையா இருந்தேன். ஒரு நாள் க்ளப்பில் ஒரு பார்ட்டி இருந்தது. அப்பாவின் ஃப்ரெண்ட்ஸ், அதில் நிறையப் பேர் டாக்டர்ஸ், வந்து இருந்தாங்க. அந்த பார்ட்டி முடியற வரைக்கும் அடிக்கடி ராமைப் பத்தி யாராவுது பேசிட்டே இருந்தாங்க. நான் அன்னைக்கு கொஞ்சம் அதிகம் குடிச்சுட்டு ஏதோதோ பேசிட்டேன்.

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.