ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

விஸ்வா, “ஓ.கே”

விரக்தி படிந்த அவன் முகத்தை கூர்ந்து நோக்கிய அமுதா, “விஸ்வா, போன வாரம் வனிதா என்கிட்ட நடந்த உண்மைகளை சொன்னா … ” என்று சொல்லச் சொல்ல விஸ்வாவின் முகத்தில் சிறு வியப்பும் பிறகு கோபமும் படறுவதைக் கவனித்தவர், “ப்ளீஸ் விஸ்வா, நான் முதலில் சொன்ன மாதிரி எந்த விஷயமும் இந்த நாலு சுவத்துக்கு வெளியே போகாது. You can rest assured of that”

விஸ்வா தலையசைக்க …

அமுதா, “விஸ்வா, அடுத்த சில சிட்டிங்க்ஸில் உங்க கல்யாணம் ஆனதில் இருந்து நடந்ததை எல்லாம் உன் கண்ணோட்டத்தில் நீ எனக்கு சொல்லணும்”

விஸ்வா, “அதை சொல்லற மன நிலையில் நான் இல்லை. நீங்க எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லறேன்”

சில கணங்கள் அவனை கூர்ந்து நோக்கிய அமுதா, “விஸ்வா, நீ படும் மன வேதனை எனக்கு புரியுது. மனசில் அப்படி ஒரு வேதனையோட, வலியோட ஒரு முடிவு எடுத்தா அது சரியா இருக்குமான்னு நீயே ஆராய்ந்து பார்க்கணும். அதுக்கு நான் உனக்கு ஹெல்ப் பண்ணப் போறேன்”

விஸ்வா, “நான் எடுத்த முடிவை மட்டும் நீங்க பார்க்கற மாதிரி தெரியுது”

அமுதா, “No. Let me make something clear about myself. I do not approve of Infidelity (முறை கேடான உறவை நான் எப்போதும் ஆதரிக்க மாட்டேன்) அதற்கு நான் சொல்லும் காரணங்கள் நீ நினைப்பதை விட முற்றும் மாறுபட்டு இருக்கும். நீ போகப் போக புரிஞ்சுக்குவே”

விஸ்வா மௌனம் காக்க …

தொடர்ந்த அமுதா, “தவறு செஞ்ச ஒரு ஆணையும் பெண்ணையும் நம் சமுதாயம் பார்க்கும் விதம் வேற வேற. கணவன் வேற ஒருத்தி கூட தொடர்ந்து உறவு வெச்சுட்டா பெரியவங்க எல்லாம் சேர்ந்து எப்படியாவுது கணவன் மனைவியை சேத்து வெச்சுடுவாங்க. அப்படி இல்லாம அவன் விபசாரிகூட படுத்துட்டு வந்ததை மனைவி பெரியவங்ககிட்டே முறையிட்டா அவங்க ‘நீ உன் புருஷனை நல்லா கவனிச்சுட்டா அவன் ஏன் வெளியில் போறான்?’ அப்படி அறிவுரை சொல்லுவாங்க. ஆனா மனைவி தப்பு செஞ்சா அது சின்னத் தப்போ பெரிய தப்போ எல்லோரும் எடுக்கும் முடிவு அவளை வீட்டை விட்டு துரத்தறதுதான் …”

இடைமறித்த விஸ்வா, “எனக்கு ஒரு ஞாயம் அவளுக்கு ஒரு ஞாயம்ன்னு நினைக்கறவன் நான் இல்லை. என் பேரண்ட்ஸ் என்னை அப்படி வளர்க்கலை”

அமுதா, “தெரியும் … நான் சொல்ல வந்ததை சொல்லி முடிச்சுடறேன். ஓ.கே?”

விஸ்வா, “ஓ.கே”

அமுதா, “என்னப் பொறுத்தவரை அந்த தவறில் கணவன் மனைவி இவங்க ரெண்டு பேரில் யார் ஈடுபட்டாலும் அதை நான் பார்க்கும் விதம் ஒண்ணுதான். தவறுக்கு மன்னிப்பு பெற கணவனுக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கோ அதே அளவுக்கு உரிமை மனைவிக்கும் இருக்கணும்ன்னு நினைக்கறேன்”

மறுபடி இடைமறித்த விஸ்வா, “நான் இந்த மாதிரி ஒரு தப்பு பண்ணி இருந்தா வனிதா என்ன தண்டனை கொடுத்தாலும் நான் நிச்சயம் ஏத்துட்டு இருப்பேன்”

அமுதா, “ப்ளீஸ், நான் சொல்ல வந்ததை சொல்ல விடு. ஓ.கே? நான் கேள்விப் பட்டவரைக்கும் எதையும் தீர்க்கமா ஆராய்ந்து செயல் படுவே. இல்லையா?”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.