ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

வனிதா, “ம்ம்ம்”

அமுதா, “ரெண்டு பேரும் எம்.பி.ஏ ஒரே சமயத்தில் முடிச்சீங்கன்னு சொன்னே. அதுக்குப் பிறகும் நீ PMLஇல் கண்டின்யூ பண்ணினியா?”

வனிதா, “என்னை மிஸ்டர் சந்திரசேகருக்கு எக்ஸிகியூடிவ் அஸிஸ்டண்ட்டா ப்ரொமோட் பண்ணினாங்க”

அமுதா, “ஓ! அதுக்குத் தான் நீ அன்னைக்கு அவர் சாவைப் பத்தி சொன்னப்ப ரொம்ப அப்செட் ஆயிட்டியா?”

வனிதா, “ம்ம்ம் … ஆனா ரெண்டு வருஷம்தான் அவரோட எக்ஸிகியூடிவ் அஸிஸ்டெண்டா இருந்தேன். அதுக்கு அப்பறம் சேல்ஸ் அக்கௌண்ட்ஸ்ஸுக்கு ஷிஃப்ட் ஆயிட்டேன்”

அமுதா, “விஸ்வா என்ன பண்ணிட்டு இருந்தான்?”

வனிதா, “விஸ்வாவுக்கு ஆர்மில கண்டினியூ பண்ணப் பிடிக்கலை. எம்.பி.ஏ ரிஸல்ட் வர்றதுக்கு முன்னாடியே வெளியில் வேலைக்கு ட்ரை பண்ண ஆரம்பிச்சார். ரிஸல்ட்ஸ் வந்த ஒரு மாசத்தில் ஒரு பெரிய கம்பெனியில் சேல்ஸ் எஞ்சினியரா வேலைக்கு சேர்ந்தார். அவர் ஜாபில் சேர்ந்த அடுத்த மாசம் எங்க கல்யாணம் ஆச்சு”

அமுதா, “அட் லாஸ்ட் உங்க மேரீட் லைஃபுக்கு வந்துட்டோம். எந்த வருஷம் உங்க கல்யாணம் நடந்துச்சு?”

வனிதா, “2001இல்”

அமுதா, “ஓ! அதுக்குப் பிறகும் ரெண்டு வருஷம் கன்ஸீவ் ஆகறதை தள்ளிப் போட்டீங்களா?”

வனிதா, “நாங்க எம்.பி.ஏ தொடங்கின சமயம் ராம் இங்கிலாந்துக்குப் மேல் படிப்புக்குப் போனார். நாங்க முடிச்சப்ப அவர் திரும்பி வந்தார். அவருக்கு ரொம்ப பெரிய வரவேற்பு. பெரிய பொசிஷனில் Nimhansஇல் திரும்ப ஜாயின் பண்ணினார். விஸ்வா தன் வேலையில் ஒரு நல்ல நிலைமைக்கு வந்தப்பறம் குழந்தை பெத்துக்கலாம்ன்னு சொன்னார்”

அமுதா, “நீ கருத்தடை மாத்திரை உபயோகிச்சியா?”

வனிதா, “இல்லை. In fact I came forward. விஸ்வாதான் side effects இருக்கும்ன்னு வேண்டான்னுட்டார். We used to follow the dates. Fertile cycle இருக்கும் போது அவர் காண்டம் உபயோகிப்பார்”

அமுதா, “You mean, முதல் ஏழு நாள் கடைசி ஏழு நாள் தவிற மத்த நாளில் எல்லாமா?”

வனிதா, “ஆமா”

அமுதா, “How was your sex life?”

அடுத்த கணம் வனிதாவின் முகம் வெளுத்தது … பிறகு சுதாரித்தபின் வெட்கப் புன்னகையுடன், “You mean our love life? Really amazing”

அமுதா, “செக்ஸில் உங்க ரெண்டு பேரில் யாருக்கு இன்டரெஸ்ட் அதிகம்?”

முகத்தில் எரிச்சலைக் காட்டி வனிதா, “We never had sex. We made love” என்ற அவள் ஆணித்தரமாக சொன்னதைக் கேட்ட அமுதா சற்று துணுக்குற்றார்.

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.