ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

அமுதா, “அப்போ இந்த விவாகரத்து?”

அதற்கு பதிலேதும் சொல்லாமல் வனிதா மௌனம் காத்தாள்.

ஒரு அளவுக்கு தன்னுடன் சகஜமாக பேசும் நிலைக்கு அவளைக் கொண்டு வந்ததை உணர்ந்த அமுதா மேலும் எதுவும் அன்று பேச விரும்பாமல், “சோ, இதுவரைக்கும் என்னுடன் பேசிய விதம் உனக்கு ஓ.கே தானே?”

வனிதா, “எஸ்”

அமுதா, “அடுத்த சிட்டிங்க் விஸ்வாகூட பேசலாம்ன்னு நினைச்சேன். பட், உன் கூட இன்னும் கொஞ்சம் பேசணும். ஸோ, அடுத்த சிட்டிங்க்கும் உன் கூடத்தான். நாளன்னைக்கு மதியம் மூணறை மணிக்கு. உனக்கு ஓ.கேதானே?”

வனிதா, “ஓ.கே”

அமுதா, “நான் விஸ்வாகிட்டே சொன்னது மாதிரி நீயும் ரெண்டு லிஸ்ட் எழுதிட்டு வரணும். ஒண்ணில் இந்த விவாகரத்து எதுக்குங்கறதுக்கான காரணங்கள். இன்னொரு லிஸ்டில் எதுக்கு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்ங்கறதுக்கான காரணங்கள். ஓ.கே?”

அடுத்த நாள் மாலை ஆறு மணியளவில் விஸ்வா-வனிதா தம்பதியரின் ஃப்ளாட் வாசல் மணி ஒலித்தது ..

வனிதா, “Hey kids… யார் வந்து இருக்காங்கன்னு பார்க்கலாம் வாங்க”

வசி என்று அழைக்கப் படும் வசுந்தரா, “டாடி வந்தாச்சு” என்க …

அவளுக்கு ஐந்து நிமிடங்கள் மூத்த விக்ரம், “இல்லை டாடி வர லேட் ஆகும்” …

கண்கள் பனிக்க அந்தப் பச்சிளம் பிஞ்சுகளை ஒரு கணம் வெறித்துப் பார்த்தவள், “போய் பார்க்கலாம்”

கதவைத் திறக்க டாக்டர் அமுதா கையில் ஒரு பெரிய ஃபெரெரோ ரோசர் சாக்லேட் பெட்டியுடன் நின்று இருந்தார்.

வனிதா, “ஹல்லோ டாக்டர் வாங்க. Its a nice surprise”

அமுதா, “இந்தப் பக்கம் வர்ற வேலை இருந்தது. உன் ஃப்ளாட் இங்கேதான் இருக்குன்னு தலையைக் காட்டிட்டுப் போகலாம்ன்னு வந்தேன். அதுவும் இல்லாம உன் குழந்தைகளைப் பார்க்கணும்ன்னு ஆசையா இருந்தது” என்ற படி கையில் இருந்த சாக்லேட் பெட்டியை நீட்டினார்.

குழந்தைகள் இருவரின் கண்களும் பிரகாசித்தாலும் அவர்களின் மௌனத்தில் இருந்து அவர்களை வளர்க்கும் விதம் தெரிந்தது.

வனிதா, “ஐய்யோ எதுக்கு டாக்டர் இதெல்லாம்?”

அமுதா, “ஏன் சாப்பிடமாட்டாங்களா?”

வனிதா, “நல்லா சாப்பிடுவாங்க. நேத்து ராம் ஃபோன் பண்ணினார் அவர்கிட்டே அங்கே இருந்து என்ன ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வரணும்ன்னு ரெண்டும் ஒரு லிஸ்ட் கொடுத்து இருக்குங்க”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.