ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

இரு குழந்தைகளும் அடுத்து இருந்த அறைக்குச் செல்ல …

வனிதா, “பரவால்லை நானே டின்னர் ரெடி பண்ணறவரைக்கும் பார்க்கட்டும்ன்னு தான் இருந்தேன்”

அமுதா, “நல்ல பெரிய அப்பார்ட்மெண்டா இருக்கும் போல இருக்கே?”

வனிதா, “அமா, மூணு பெட்ரூம்ஸ், ட்ராயிங்க் ரூம் அப்பறம் லிவிங்க்-கம்-டைனிங்க் தனியா”

அமுதா, “எப்போ வாங்கினீங்க?”

வனிதா, “ஒரு வருஷம் ஆச்சு”

இருவரும் அந்த குடியிருப்பைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் சிறிது நேரம் உரையாடியபின் ..

அமுதா, “விஸ்வா எங்கே?”

வனிதா தலை குனிந்தபடி, “அவர் இன்னும் ஆஃபீஸில் இருந்து வரலை”

அமுதா, “குட். இன்னும் ஒண்ணா இருக்கீங்க. I appreciate that”

வனிதா தலை குனிந்தபடி “ஆனா வேற வேற ரூமில் இருக்கறோம். வீட்டில் அவர் எதுவும் சாப்பிடறது இல்லை” என்று அவள் சொல்லச் சொல்ல தொண்டை கரகரத்து விக்கினாள்.

அமுதா, “சாரி, இந்த விஷயம் எல்லாம் கவுன்ஸிலிங்கில் கேட்டு இருக்கணும். சரி, நான் புறப்படுட்டுமா?”

பனித்த கண்களைத் தன் துப்பட்டாவால் துடைத்த வனிதா, “இருந்து டின்னர் சாப்பிட்டுட்டு போங்களேன்?”

அமுதா, “I would love to. ஆனா, என் வீட்டுக்காரர் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பார். இன்னொரு நாள் அவரையும் கூட்டிட்டு வரேன். உன் குழந்தைகளைப் கூப்பிடு பை சொல்லிட்டு கிளம்பறேன்”

வனிதா, “கிட்ஸ்! வாங்க ரெண்டு பேரும் ஆண்டிக்கு பை சொல்லுங்க. You can watch TV after she leaves”

மேலும் டிவி பார்க்க அனுமதி கிடைத்த மகிழ்ச்சி முகத்தில் ஜொலிக்க இருவரும் வந்து ஒன்று சேர, “பை ஆண்டி”

மறுபடி அவர்களை அணைத்த அமுதா இருவர் கன்னத்திலும் முத்தமிட்டார்.

மண்டியிட்டு அமர்ந்து இருந்த அமுதாவின் மேல் சாய்ந்தபடி வசி, “உங்க நேம் என்ன சொல்லவே இல்லையே?”

அமுதா, “மை நேம் இஸ் அமுதா”

விக்ரம், “ஹே, எங்க க்ளாஸ்ல ஒரு அமுதா இருக்கா. அவ சரியான க்ரை பேபி”

அமுதா, “அப்படியா? நீங்க ரெண்டு பேரும் அழமாட்டீங்களா?”

வசி, “ம்ம்ஹூம் ..”

அமுதா, “சரி, ஆண்டி போயிட்டு வர்றேன். ஓ.கே?”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.