ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

அமுதா, “அன்னைக்கு மட்டும் டே கேர் சென்டரில் இருந்து குழந்தைங்களை கூட்டிட்டுப் போங்க நேரமாச்சுன்னு அவளுக்கு ஃபோன் வந்து இருக்கலைன்னா அவளை நீ உயிரோட பாத்து இருக்க மாட்டே”

விஸ்வாவின் முகத்தில் குழப்பம் ..

விஸ்வா, “அவளுக்கே அது அப்படிப்பட்ட தப்புன்னு தெரியும்போது Why did she do it?”

அமுதா, “ஏன்னா அவ கண்ணோட்டத்தில் தப்புன்னு நினைச்சது வேற. At least in the beginning (தொடக்கத்தில் அப்படித்தான் நினைத்தாள்)”

விஸ்வா, “அது என்ன அவ கண்ணோட்டத்தில்?”

அமுதா, “நான் உன்கிட்டே ஒண்ணு கேட்பேன். உண்மையா அதுக்கு பதில் சொல்லணும். ஓ.கே?”

விஸ்வா, “ஒ.கே?”

அமுதா, “கொலை செய்யறது தவறா சரியா?”

விஸ்வா, “Of course it is wrong”

அமுதா, “மெட்ராஸ் ஸாப்பர்ஸில் இருக்கும் சைக்கியாட்ரிஸ்ட் எனக்குத் தெரிஞ்சவர்தான். உன் ஆர்மி கேஸ் ஃபைலை முழுசும் படிச்சுட்டுத்தான் இதைக் கேட்கிறேன். Of course, நான் அந்தக் கேஸ் ஃபைலைப் படிச்சது யாருக்கும் தெரியாது. உன்னால் ப்ரூவ் பண்ணவும் முடியாது. Please think as an army man who was in Kargil combat and tell me (கார்கில் போரில் கலந்து கொண்ட ஒரு போர் வீரனாக நினைத்து இதற்கு பதில் சொல்)”

ஒரு கணம் திகைத்த விஸ்வா அமுதாவுக்கு வெளி உலகில், ராணுவம் உட்பட எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை உணர்ந்து வியந்தான் .. மௌனம் காத்தான் ..

அமுதா, “ம்ம்ம் .. Come on answer me”

விஸ்வா, “நான் என் கடமையை செஞ்சேன்”

அமுதா, “ஓ! கடமைக்காக செஞ்சா அது பரவால்லையா? பாக்கிஸ்தானைப் பொறுத்த வரை நீ ஒரு கொலைகாரன். உன் கூட வந்த எஞ்சினியரைக் காப்பாத்த பாக்கிஸ்தானிய கேப்டன் ஒருத்தரை நீ சுட்டுக் கொன்னே. அவரோட மனைவியின் கண்ணில் நீ மகா பாதகன்” என்று ஆணித்தரமாக முடித்தார்

விஸ்வாவின் முகம் வெளுத்தது …

அமுதா, “சாரி, உன்னை கஷ்டப் படுத்தணும்ன்னு நான் இதை சொல்லலை. But do you now understand that there are two sides to a coin?”

விஸ்வா, “Yes, இருந்தாலும் அவ கண்ணோட்டத்தில் அவ செஞ்சது சரின்னு நினைக்கறாளா?”

அமுதா, “இல்லை. அவ செஞ்சதை ரெண்டு ஸ்டேஜா பிரிக்கலாம் உங்க கல்யாணம் ஆன இரண்டாம் வருஷத்தில் அவ செஞ்சதை சரின்னு நினைச்சு செஞ்சா. இப்போ ஆறு மாசமா செஞ்சதை தப்புன்னு நினைக்கறா. எனக்கு என்னவோ முன்னாடி செஞ்சதையும் தவறுன்னு கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் உணர்ந்து இருப்பான்னு தோணுது”

விஸ்வா, “எப்படி அவ சரின்னு நினைச்சு செய்யலாம்?”

அமுதா, “அதையும் பார்க்கத்தான் போறோம். சரி, உன்னால் உடனே மன்னிப்பு கொடுக்க முடியாது. அதுக்கு நாள் ஆகும்ன்னு சொனேன்இல்லையா? எப்படி மன்னிப்புக் கொடுக்கும் மனப் பக்குவம் உனக்கு வரும்ன்னு பார்க்கலாமா?”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.