ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

விஸ்வா, “ஆனா, வீட்டுக்குப் போன பிறகு அப்படி எல்லாம் இருந்த என் மனைவியா இப்படின்னு மறுபடி மனசு வேதனைப் படும்”

அமுதா, “True, நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா நேத்து நைட்டு உன் மனசில் இருந்த வேதனையை விட இன்னைக்கு கொஞ்சம் குறைஞ்சு இருக்கும். அதுக்கு நான் கியாரண்டி”

விஸ்வா, “ஓ.கே”

அமுதா, “சோ, சொல்லு … ”

விஸ்வா, “2002, ஃபெப்ரவரி பத்தாம் தேதி எங்க கல்யாணம் நடந்தது. அதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நான் ஆர்மில இருந்து ரிஸைன் பண்ணிட்டு” என்றபின் ஒரு பப்ளிக் செக்டார் நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அதில் சேர்ந்து இருந்ததாகச் சொன்னான்.

அமுதா, “சோ, From a governtment employee you became a public sector employee. ஏன், தனியார் நிறுவனங்களில் முயற்சி செய்யலையா?”

விஸ்வா, “செஞ்சேன் … கிடைக்கலை. More over, இந்தக் கம்பெனியில் என் ராணுவ அனுபவத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதுக்குத் தகுந்த மாதிரி கொஞ்சம் அதிகமான க்ரேடில் செலக்ட் பண்ணினாங்க. ஸோ, அதில் சேர்ந்தேன். ஆனா சேர்ந்து ஆறு மாசத்தில் ஏண்டா அந்த வேலையில் சேர்ந்தோம்ன்னு ஆயிடுச்சு. ரொம்ப வருத்தப் பட்டேன்”

அமுதா, “என்னது இது விஸ்வா? நான் கதை கேட்டுட்டு இருக்கேன். நீ வெறும் அவுட்லைன் கொடுப்பேன்னு சொன்னா எப்படி” என்று சிலாகித்து, “இப்போத்தான் கல்யாணம் ஆனதைப் பத்தி பேசினோம். அதுக்குள்ளே ஆறு மாசம் ஜம்ப் பண்ண வேண்டாம். ஹனிமூனுக்கு எங்கே போனீங்க?”

விஸ்வா, “மால்டீவ்ஸ். அந்த ட்ரிப் எங்க ரெண்டு பேர் பேரண்ட்ஸும் சேர்ந்து எங்களுக்குக் கொடுத்த கிஃப்ட்”

அமுதா, “வாவ், What a lovely place isn’t it? நல்லா சுத்திப் பாத்தீங்களா? நிறைய பொழுது போக்கு விளையாட்டுக்கள் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்து இருப்பாங்களே?”

விஸ்வா, “எஸ், ரொம்ப அழகான ரிஸார்ட். ஆனா, நாங்க சாயங்காலம் கடற்கரையில் நடப்பதைத் தவிற எந்த பொழுது போக்கு விளையாட்டிலும் கலந்துக்கலை”

அமுதா, “ஏன்?”

விஸ்வா, “Most of the time we were in bed”

அவனையும் அறியாமல் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் விலகி உதட்டோரம் சிறு புன்னகை மலர்ந்தது

வாய்விட்டுச் சிரித்த அமுதா, “அதுக்கு இங்கேயே எதாவுது ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி இருக்கலாம்னு உங்க பேரண்ட்ஸ் சொல்லலையா?”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.