ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

விஸ்வா, “ராம் காலைல ஆறு மணிக்கு எங்க வீட்டுக் கதவைத் தட்டுவான். அரை மணி அல்லது முக்கால் மணி நேரம் ஃபிஸியோ தெரபி எக்ஸர்ஸைஸ். அதற்குப் பிறகு சில நாள் வனிதாவுடன் சைக்கிளிங்க் போவேன். இல்லைன்னா, சாயங்காலம் … லேட் ஈவினிங்க் .. வனிதா சீக்கிரமா டின்னர் ரெடி பண்ணி வெச்சதுக்குப் பிறகு ரெண்டு பேரும் ஸ்விம்மிங்க் போவோம்”

அமுதா, “No wonder she still has her hour-glass figure (இன்னமும் அவளது உடல் மணல் கடிகார வடிவில் இருப்பதில் வியப்பேதும் இல்லை)”

விஸ்வா, “அது அவளுக்கு ஒரு சைட் பெனிஃபிட் அப்படின்னு ஜோக் அடிப்பா”

அமுதா, “அப்பறம் நீ மாரதான் ஓட ஹெல்ப் பண்ணினாங்களா?”

விஸ்வா, “நிறைய … 2003 தொடக்கத்தில் என்னால் ஒன்றரை மணி நேரம் வரை தொடர்ந்து ஸ்ட்ரெயின் பண்ண முடியற அளவுக்கு என முட்டியில் பலம் வந்து இருந்தது. சில சமயம் தொடர்ந்து ரெண்டு மணி நேரம் ஸ்ட்ரெயின் பண்ணுவேன். ஆனா அடுத்த சில நிமிடங்களில் கால் முட்டி பலூன் மாதிரி வீங்கிக்கும். ஐஸ் வெச்சு க்ரேப் பாண்டேஜ் போடணும். எனக்கு மாரத்தான் ஓட ஆசையா இருந்தது. நான் ஆர்மில இருந்த சமயம் மணிக்கு பதினாலு கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து இருபது கிலோ மீட்டர் ஓடுவேன். நிறைய சமயம் ஒன்றரை மணி நேரத்தில் முடிச்சு இருக்கேன். சோ, என்னால் வேகமா ஓட முடியும் ஆனா, ரெண்டு மணி நேரத்தில் ஹாஃப் மாரத்தான் ஓடி கம்ப்ளீட் பண்ண முடியுமான்னு கொஞ்சம் மனசில் பயமா இருந்தது. ராமும் வனிதாவும் என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணினாங்க. ஒரு டைம் டேபிள் போட்டு ப்ராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சேன். மூணு மாசம் ப்ராக்டீஸ் பண்ணினேன்”

அமுதா, “அமேஸிங்க்! ரேஸ்ல உன்கூட ஓடினாங்களா?”

விஸ்வா, “வனிதா லாஸ்ட் லெக்ல மட்டும் எனக்கு கம்பெனி கொடுக்க கூட ஓடி வந்தா. ராம்னால சுத்தமா ஓட முடியாது. But that guy did an amazing thing. அந்த ரேஸ் தொடங்கினதில் இருந்து ஒவ்வொரு ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தையும் நான் கடக்கும் போது ரோட் சைடில் நின்னுட்டு கை தட்டி ‘கம் ஆன் விஸ்வா’ன்னு சத்தம் போட்டு சியர் பண்ணினான். கரெக்டா ஒவ்வொரு இடத்துக்கும் நான் அங்கே போறதுக்கு முன்னாடி எப்படிப் போனான்னு இன்னமும் எனக்குத் தெரியாது. ஐ திங்க் அன்னைக்கு எங்க அப்பா, அம்மா, மாமா அத்தை எல்லாரும் அவனுக்கு ட்ரைவர் வேலை செஞ்சாங்க”

அமுதா, “வாவ், கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு விஸ்வா. என்ன ஒரு க்ளோஸ்னஸ் இருந்தா அப்படி பண்ணி இருப்பார். உங்க ஃபேமிலி மெம்பர்ஸும்தான்” என்றவர் முகத்தில் கேள்விக் குறியுடன் தொடர்ந்து “வனிதா லாஸ்ட் லெக்கில் மட்டும் கூட வந்தான்னு சொன்னியே? எப்படி? ரோட் சைடிலா?”

விஸ்வா, “ம்ம்ம்ஹூம் .. அவளும் ரேஸ்ல பேர் கொடுத்து இருந்தா. ரேஸ் தொடங்கினதுக்குப் பிறகு நின்னுட்டு எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தா. திரும்ப வரும் போது எனக்கு ரொம்ப ஸ்ட்ரெயினா இருக்கும்ன்னு லாஸ்ட் மூணு கிலோ மீட்டர் மட்டும் நான் ஓடும் அதே வேகத்திலே அவளும் ஓடி வந்தா. அந்த வேகத்தில் மூணு கிலோ மீட்டர் ஓடறதை ஒரு மாசம் ப்ராக்டீஸ் பண்ணினாளாம். They really made me feel great. அதற்குப் பிறகு ஒவ்வொரு வருஷமும் நான் ஓடிட்டு இருக்கேன். ஒவ்வொரு வருஷமும் ரெண்டு பேரும் அதே அளவுக்கு இல்லைன்னாலும் ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க”

அமுதா, “ம்ம்ம் .. உன்னை அவ எவ்வளவு லவ் பண்ணி இருக்கணும்?” என்று கேட்ட பின் .. அவன் அதற்கு பதிலளிக்க அவகாசம் கொடுக்காமல் தொடர்ந்து, “ஒரு சுவாரஸியமான விஷயம். நான் இதை உனக்கு சொல்லியே ஆகணும். நான் வனிதா கூட பேசும் போது உன்னை அவன் இவன்னு சொல்லிட்டு ராமை அவர் இவர்ன்னு சொன்னேன். My goodness! She really got upset you know? ரெண்டு பேரும் ட்வின்ஸ் ராமுக்கு மட்டும் தனி மரியாதை தேவையில்லைன்னு என்னை ஒரு பார்வை பாத்தாளே? அப்பா. நான் ஆடிப் போயிட்டேன். அப்பறம் அம்மா தாயே ராமை இதுவரைக்கும் எனக்கு ஒரு டாக்டராத்தான் தெரியும் இனிமேல் அந்த மாதிரி தப்பை செய்ய மாட்டேன்னு மன்னிப்பு கேட்க வேண்டியதாச்சு!”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.