ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

அமுதா, “ஓ, ராம் ஃபோன் பண்ணினாரா?” என்ற பிறகு சிரித்தபடி “ஐ மீன் ராம் ஃபோன் பண்ணினானா?”

புன்னகைத்த வனிதா, “ம்ம்ம் .. உக்காருங்க. என்ன சாப்பிடறீங்க? காஃபி or some ஜூஸ்?”

அமுதா, “ம்ம்ம் .. ஜூஸ் கலக்கணுமா?”

வனிதா, “இல்லை. ட்ராபிகானா”

அமுதா, “அப்படின்னா ஜூஸ் கொடு” என்று அவளை சமையல் அறைக்கு அனுப்பிய பிறகு குழந்தைகளின் பக்கம் தன் கவனத்தை செலுத்த அந்தப் பிஞ்சுகள் ஏதோ கிசு கிசுத்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தார்

அமுதா, “என்ன ரகஸியம் ஆண்டிக்கு சொல்ல மாட்டீங்களா?”

விக்ரம், “பெரியவங்களை நீ வா போ சொல்லக் கூடாது”

வசி, “இந்த ஆண்டி ராம் அங்கிளைவிட பெரியவங்க விக்கி”

மண்டியிட்டு அமர்ந்து இருவரையும் இழுத்து அணைத்த அமுதா, “ஸோ ஸ்வீட். எந்த ஸ்கூலில் படிக்கறீங்க?”

விக்ரம், “ஃப்ராங்க் ஆண்டனி”

வசி, “எங்க டாடி மம்மி படிச்ச அதே ஸ்கூல். ஆனா அவங்களோட டீச்சர்ஸ் யாரும் இப்போ இல்லை”

அமுதா, “இஸ் இட்? இப்போ நான் வரும் போது என்ன செஞ்சுட்டு இருந்தீங்க ரெண்டு பேரும்?”

வசி, “ஹோம் வொர்க் … ஒன்லி ஒன் பேஜ் எழுதினோம். அப்பறம் ..”

விக்ரம், “நான் சொல்றேன். அப்பறம் அம்மாகூட ட்ரெஸ் மடிச்சு வெச்சுட்டு இருந்தோம்”

அமுதா “ஓ, அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருந்தீங்களா?”

உள்ளிருந்து வந்த வனிதா, “Something to keep them occupied. எப்ப டி.வி போட அலவ் பண்ணுவேன்னு ரெண்டு பேரும் வெய்ட் பண்ணிட்டு இருந்தாங்க”

வனிதா கொடுத்த ஜூஸை வாங்கியபடி சோஃபாவில் அமர்ந்த அமுதா, “What about you?”

வனிதா, “நான் நீங்க வரதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் காஃபி குடிச்சேன்” என்றபடி அவளும் அவரருகே அமர்ந்தாள்.

வசி, “மம்மி, can we watch TV now?”

விக்ரம், “இந்த ஆண்டி போனதுக்கு அப்பறம் ஆஃப் பண்ணிடறோம்”

வனிதா எதுவும் சொல்வதற்கு முன் அமுதா, “சரி போய் பாருங்க ஆனா அப்பறம் அம்மா சொன்னதும் ஆஃப் பண்ணிடணும். ஓ.கே?”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.