ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

விஸ்வா, “இல்லை. அப்போ நாங்க என் பேரண்ட்ஸ் கூட ஜாயிண்ட் ஃபேமிலியா இருந்தோம்”

அமுதா, “உங்க ரெண்டு பேரின் பேரண்ட்ஸும் பக்கத்து பக்கத்து வீட்டில. ரொம்ப ஜாலியா இருந்து இருக்குமே? வனிதாவுக்கு ஒரு வேலையும் இருந்து இருக்காதே?”

விஸ்வா, “அப்படி இல்லை. நாங்க ஹனிமூன் போயிட்டு வந்த அடுத்த நாளில் இருந்து எங்க ரெண்டு பேரின் தேவைகள் முழுக்க வனிதா பொறுப்பு ஏத்துட்டா. சமையலிலும் ப்ரேக்ஃபாஸ்ட் அல்லது டின்னர் அவ செய்வா. அம்மா அத்தை ரெண்டு பேரும் உதவிக்கு வர வேண்டாம்ன்னு தடுத்துடுவா”

அமுதா, “ஓ, நல்லா சமைப்பாளா?”

விஸ்வா, “முதலில் கொஞ்சம் சுமாராத்தான் சமைப்பா. பட், சீக்கிரம் கத்துகிட்டா”

அமுதா, “எப்போ தனிக் குடித்தனம் போனீங்க?”

விஸ்வா, “கல்யாணம் ஆகி நாலு மாசத்துக்குப் பிறகு”

அமுதா, “எதுக்கு?”

விஸ்வா முகத்தில் சோர்வு படற, “நான் தான் அதற்குக் காரணம்”

அமுதா, “ஏன் விஸ்வா? கொஞ்சம் விளக்கித்தான் சொல்லேன்”

விஸ்வா, “It all started with Ram coming back … அவன் சரியா எங்க கல்யாணம் ஆன சமயத்தில் திரும்பி வந்தான். அவன் திரும்பி வர்றதுக்கு முன்னாடியே அவன் யூ.கேல இருந்தப்ப செய்த ரிஸர்ச் அவன் பப்ளிஷ் பண்ணின பேப்பர்ஸ் இதைப் பத்தி அடிக்கடி பேச்சு வரும். அவன் திரும்பி வந்தப்ப அவனுக்கு ரொம்ப வரவேற்பு. பெரிய பெரிய ஆஸ்பத்திரிகளில் அவனை கன்ஸல்டண்ட் ஆக கூப்பிட்டாங்க.”

அமுதா, “ஆனா, பணத்தைப் பத்தி கவலைப் படாம மறுபடி NIMHANSஇல் சேர்ந்ததைப் பத்தி பேப்பரில் கூட நியூஸ் வந்தது. இல்லையா?”

விஸ்வா, “ஆமா. திரும்பி வந்து வேலையில் சேர்ந்த பிறகும் அல் மோஸ்ட் வாரத்தில் ரெண்டு மூணு தடவையாவுது எதாவுது அவனை பாராட்டி பேச்சு வந்துட்டே இருக்கும்” என்ற பிறகு அவன் தலை குனிந்து சிறிது நேரம் மௌனம் காத்தான்.

அமுதா, “So you were feeling jealous. Am I right?”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.