ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

விஸ்வா, “எஸ். இல்லைன்னா இன்னேரம் அவளைப் பத்தி ஊர் முழுக்க பேசி இருக்கும்”

அமுதா, “அது எனக்கும் தெரியும். பிள்ளைகளின் எதிர்காலத்தையும் வனிதாவின் எதிர்காலத்தையும் நினைச்சு இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நீ எடுத்த இந்த முடிவை நான் ரொம்ப பாராட்டறேன் விஸ்வா. இப்போ நான் சில விஷயங்களை சொல்ல விரும்பறேன். சரியா?”

விஸ்வா, “சரி”

அமுதா, “இந்தக் கவுன்ஸிலிங்கின் முக்கிய குறிக்கோள் என்னன்னு இப்போ நான் உனக்கு சொல்லறேன். அதை நீ மனசில் வெச்சுக்கணும். ஓ.கே?”

விஸ்வா, “ஓ.கே”

அமுதா, “இந்தக் கேஸ் டைவர்ஸில் முடிஞ்சாலும் சரி, நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து வாழ்ந்தாலும் சரி, நீங்க ரெண்டு பேரும் செய்த தவறை உணறணும். அந்த மாதிரி தவறுகளை மறுபடி செய்யாம வாழும் வைராக்கியம் வரணும். அந்தத் தவறுகளை மனதார மன்னிக்கும் மனப்பக்குவம் வரணும். வர வெச்சுக்கணும். அதுக்குப் பிறகும் கணவன் மனைவியா வாழ முடியாதுன்னா நல்ல நண்பர்களாத்தான் பிரிஞ்சு போகணும். எதிரிகளா பிரியக் கூடாது”

விஸ்வா, “நான் என்ன தவறு செஞ்சேன்?”

அமுதா, “I don’t know as yet. தவறு செய்யறதைத் தூண்டறதும் தவறுதானே?”

ஒரு கணம் விஸ்வாவின் முகத்தில் தோன்றி மறைந்த பதற்றத்தை அமுதா கவனித்தார் …

விஸ்வா, “நான் எந்த விதத்திலும் அவளைத் தவறு செய்யத் தூண்டலை. எல்லாக் குடும்பத்திலும் இருப்பது மாதிரி தான் எங்க குடும்பத்தில் அவகிட்டே நடந்துகிட்டேன்”

அமுதா, “அது எனக்கு இன்னும் தெரியாது. நான் எதையும் அனுமானம் செஞ்சுக்கவும் விரும்பலை. Please understand Viswa”

விஸ்வா, “சரி, ஏன் மன்னிக்கணும்?”

அமுதா, “இப்போ, அவ மட்டும்தான் தவறு செஞ்சான்னு வெச்சுக்குவோம். நி அவளை மன்னிச்சாத்தான் அவ செஞ்ச தவறை உன்னால் மறக்க முடியும். மறந்தாத்தான் உன்னால டைவர்ஸுக்குப் பிறகு உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்க முடியும். அவளை நீ மன்னித்து அவ செஞ்சதை மறக்கலைன்னா உன் மனசில் இருக்கும் வலி போகாது. வாழ் நாள் முழுவதும் வலிக்கும். உன் மனசில் இருக்கும் வலியினால் உன் வாழ்க்கையை நீயே ஒரு நரகமாக்கிடுவே. Do you agree with me?”

விஸ்வா நீண்ட மௌனத்துக்குப் பிறகு பெருமூச்சுடன், “நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. ஆனா…”

அமுதா, “Hold it right there young man! இப்போ உடனே அவளை மன்னிச்சுட்டேன்னு உன்னால் சொல்ல முடியாது. I know that”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.