ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

விஸ்வா, “ம்ம்ம்”

அமுதா, “நாம் எல்லோருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு பாத்திரங்கள் (roles) இருக்கு. இப்போ உன்னை எடுத்துக்கோ. விஸ்வா ஒரு எக்ஸ்-ஆர்மி மேன். விஸ்வா ஒரு ஜெனரல் மேனேஜர். விஸ்வா ஒரு காதலன். விஸ்வா ஒரு கணவன். விஸ்வா ஒரு தந்தை இப்படி பல ரோல்ஸ் இருக்கு. இல்லையா?”

விஸ்வா, “எஸ்”

அமுதா, “வனிதாவுக்கும் அதே மாதிரி பல ரோல்ஸ் இருக்கு. எல்லாம் நீ அவகிட்டே இருந்து எதிர்பார்த்த மாதிரி ரோல்ஸ். ஒண்ணே ஒண்ணைத் தவிற. அது வனிதா ஒரு நடத்தை தவறியவள் அப்படிங்கற பாத்திரம். அடுத்த சில சிட்டிங்க்ஸில் அவளை உன் காதலியா, உன் மனைவியா, உன் குழந்தைகளுக்கு அம்மாவா மட்டும் பார்க்கணும்”

விஸ்வா, “பட் …”

அவன் மனத்தில் இருக்கும் வலி அவனை அந்தக் கோணத்தில் காணத் தடுப்பதை உணர்ந்த அமுதா, “விஸ்வா, ஒண்ணு சொல்லு. நீ கஷ்டப் படுணும், நீ அவமானப் படுணும். அப்படிங்கற குறிக்கோளோட, குரோதத்தோட வனிதா இந்த தப்பை செஞ்சாளா?”

விஸ்வா, “இல்லை. எனக்கு தெரியாம என்னை ஏமாத்தி செஞ்சா. எனக்குத் தெரியக் கூடாதுன்னு குறிக்கோளா இருந்தாளாம்”

அமுதா, “ஸ்டில், உன்னை அவ வெறுத்தாளா. உன் மேல கோவமா இருந்தாளா?”

விஸ்வா, “I don’t think so. ஆனா என்னைப் பத்தி, எங்க கல்யாணத்தின் புனிதத்தைப் பத்தி அவ மனசில் உயர்வா நினைக்கலை”

அமுதா, “இப்போ அது அவளுக்குத் தெரியும். அது அவளுக்கு ரொம்ப மனக் கஷ்டத்தைக் கொடுத்துட்டு இருக்கு. கூட உன்னைக் கஷ்டப் படுத்தினதுக்காக அவ ஒவ்வொரு நாளும் அழுதுட்டு இருக்கா. அந்தக் காரணத்தினால்தான் தற்கொலை செஞ்சுக்கலாம்ன்னு நினைச்சா”

விஸ்வா, “அவமானத்தில் செஞ்சுக்க நினைச்சு இருப்பா”

அமுதா, “நீயே இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்ன்னு சொன்னதுக்குப் பிறகு என்ன அவமானம்?”

விஸ்வா, “ம்ம்ம் .. தெரியலை”

அமுதா, “சில விஷயங்கள் உனக்குத் தெரியாதுன்னு நினைக்கறேன். எனக்கும் இன்னும் முழுசா தெரியாது. But I am going to find out. இப்போதைக்கு அவ செஞ்ச தப்பை ஒரு பக்கம் வெச்சுடுவோம். மத்த விஷயங்களில் கவனம் செலுத்தலாமா? ப்ளீஸ் இது உன் மனசுக்கும் ஆறுதலா இருக்கும்”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.