ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 2 47

விஸ்வா, “அப்பறம் எப்படி?”

அமுதா, “விஸ்வா, இந்த கவுன்ஸிலிங்கில் மொத்தம் நாலு ஸ்டேஜஸ் (கட்டங்கள்) இருக்கு” என்று தொடங்கி ஒவ்வொரு கட்டத்தையும் விளக்கினார் …

“முதல் கட்டம் ரெண்டு பேருக்கும் இருக்கும் கடும் மன வேதனையைக் குறைக்க நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள். இப்போ நாம் அந்தக் கட்டத்தில் இருக்கோம்.

இரண்டாவது கட்டம் நடந்த தவறுக்கான காரணங்களை, அதை நீ வனிதாவின் கண்ணோட்டத்திலும் வனிதா உன் கண்ணோட்டத்திலும் பார்த்துப் புரிஞ்சுக்கறது.

மூணாவுது கட்டம்தான் மன்னிப்பது.

நாலாவுது கட்டம் கடந்தவைகளையும் எதிர்காலத்தையும் மனசில் வெச்சுட்டு கணவன் மனைவியா சேர்ந்து வாழறதா இல்லை நல்ல நண்பர்களா பிரிஞ்சு போறதான்னு முடிவு எடுக்கறது”

விஸ்வா மௌனம் காத்தான் ..

குரலை உயர்த்தி கண்களில் உக்கிரத்தைக் காட்டி அமுதா, “இதில் உனக்கு உடன் பாடு இல்லைன்னா You may go now”

விஸ்வா, “I agree with you”

மறுபடி முகத்தில் சாந்தம் குடிபுக அமுதா, “Now, மன்னிப்பு அப்படின்னா என்ன விஸ்வா?”

விஸ்வா, “மன்னிக்கறதுன்னா … மன்னிப்பு கொடுக்கறது. I mean அவ செஞ்ச தவறை ஓ.கேன்னு ஒத்துக்கறது. Like accepting that it was right”

அமுதா, “ம்ம்ஹூம் … மன்னிப்பு அப்படிங்கறது மன்னிப்பு கொடுப்பவர்களின் மனம் சம்மந்தப் பட்ட விஷயம். அவ செஞ்ச தவறினால் உன் மனம் பாதிக்கப் பட்டு இருக்கு. உன் சொத்தை மத்தவன் அனுபவிச்சுட்டானேன்னு ஒரு மன வேதனை. உனக்கு மட்டும் சொந்தம்ன்னு நீ நினைச்சதை இன்னொருத்தனுக்கு எடுத்துக் கொடுத்துட்டாளேன்னும், நீ கொடுக்க வேண்டிய சுகத்தை இன்னொருத்தன்கிட்டே வாங்கிட்டாளேன்னும் வனிதா மேல கோபம், வெறுப்பு. அதனால் உன் மனசில் அவளை பழி வாங்கணும்ன்னு, அவள் மனசில் அதே அளவுக்கு வலியை ஏற்படுத்தணும்ன்னு ஒரு negative thought இருக்கும் இல்லையா? அப்படிப் பட்ட எண்ணங்களையும் அவள் மேல் இருக்கும் கோபத்தையும் வெறுப்பையும் விட்டுடறதுதான் மன்னிப்பு. நீ அவளை மன்னிச்சுட்டேன்னா அதற்குப் பிறகு அவளை நீ வெறுக்கலைன்னு அர்த்தம். அவளுக்கு மேலும் நீ மன வலியை கொடுக்க விரும்பலைன்னு நீ உண்மையா நினைக்கறதுதான் மன்னிப்பு”

விஸ்வா, “அவளுக்கு என்ன மன வலி? All she has is guilty conscience (அவளுக்கு இருப்பது குற்ற உணற்வு மட்டும்தான்)”

அமுதா, “அவளுக்கு மன வலி இல்லைங்கறயா? நிறைய இருக்கு. அதுக்கு குற்ற உணற்வு மட்டும் காரணம் இல்லை. உன் மனசை, உன் ஃபீலிங்க்ஸை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டதை நினைச்சுக் கவலைப் படறதும் ஒரு காரணம். அன்னைக்கு உனக்கு விஷயம் தெரிஞ்சதுக்கு பிறகு அவ தற்கொலை செஞ்சுக்கலாம்ன்னு நினைச்சா. அது உனக்குத் தெரியுமா?”

பேரதிர்ச்சியால் கண்கள் விரியா விஸ்வா, “என்னது? தற்கொலை செஞ்சுக்க இருந்தாளா?”

3 Comments

  1. Really a good one.

  2. Really this story is like a psychological episode of lovers who cum married after, in other words perceptional analysis. Rally impressive story.. keep up this good work

  3. நான்ஷிரிக் தாரா

    தளத்தில் படித்தவற்றுள் மிகச் சிறந்த மனோதத்துவக் கதை. திருமண முறிவுகள் எங்கே தொடங்குகின்றன என்பதில் தொடங்கித் தெளிவான சிந்தனைகளை மனதில் விதைத்து நல்ல சமூகத்தைக் கட்டமைக்கக் கூடிய கதை. பதியப் பட்ட தளம் சரியில்லையோ என்று ஒரு சந்தேகம். வாழ்த்துக்கள்!

Comments are closed.