நல்லா இருக்குடி உன்னை விட சின்ன பொண்ணு அவளே கைலயும் காலுளையும், கழுத்துலயும் போட்டுக்கிட்டுதானே வந்துருக்கா?
அப்புறம் உனக்கு மட்டும் என்ன? உன் அம்மா போயிட்டாலும் நான் இன்னும் உயிரோடுதான் இருக்கேன்.
என் கட்டை வேகுற வரைக்கும் நீ மங்கள கரமா இருக்குறதை கண்ணார பாக்கணும்.
பாட்டி அறைக்குள் வைத்து பேசினாலும் சித்திக்கும் கேட்டுதான் இருக்கும்.
ஆம் என்று அவர் முகமே சொன்னது. ஒரு வழியாக சமாளித்துக்கொண்டார். மதிக்குட்டி நீ அனுப்புன பணம் கிடச்சுது
மாப்பிள்ளை வீட்டுல பேசிட்டேன், எண்ணி ரெண்டாம் மாசத்துல கல்யாணம் வேசுக்கலாம்ன்னு சொல்லிடாங்க.
நானும் குளித்து பாட்டி சொன்ன நகைகள் அணிந்து கோவில் செல்ல தாயாரானேன். வெளியில் வந்து கோவிலுக்கு கிளம்பினோம்.
அம்மன் தரிசனம் தை ஒன்னாம் நாள் சிறப்பு பூஜையில் கலந்து எல்லோரும் வெளியில் வந்தோம்.
அங்கே ஒரு அம்மாளின் முகம் கண்டு சித்தியின் முகம் பேயறைந்தது போல ஆனது.
மதிக்குட்டி சீக்கிரம் வா போகலாம். சித்தியின் முகத்தை நான் கவனித்து விட்டதால் அந்த அம்மாள் யார் என்று பார்த்தேன்.
அவர் என்னை பார்த்து சிநேகமாக புன்னகைத்தார்.
எங்கேயோ பார்த்த முகம் நானும் பதிலுக்கு முறுவலித்து சித்தியுடன் வீடு திரும்பினேன். அங்கேயும் அந்த அம்மாள் நின்று இருந்தார்.
சித்தி பதட்டம் மாறாமல் என் முகம் பார்த்தார்.
பாட்டி அந்த அம்மாவை வீட்டினுள் அழைத்து சென்றார்.
எனக்கு ஏனோ அந்த அம்மாவை மிகவும் பிடித்து இருந்தது.
சித்தியின் கலவரம்தான் ஏன் என்று புரியவில்லை ?????
வீட்டுக்குள் நுழைந்த பொது அந்த அம்மாளுடன் இன்னும் சில பெண்கள் இருந்தார்கள். அப்போதுதான் கவனித்தேன் வெளியில் ஓரத்தில்
பத்து ஆண்கள் சேரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஒன்றுதான் வித்தியாசமாக இருந்தது “எதற்க்காக இங்கே பழங்கள் தட்டில் வெய்க்கபட்டு உள்ளது.”
பாட்டி என்னை ஒரு ஓரத்தில் அமர வெய்த்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை!
பாட்டியையும் சித்தியையும் மாறி மாறி பார்த்தேன்.
பாட்டியின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.
பொன்னை முதல்ல கோவில்ல வெச்சு பார்க்கனும்ன்னு சொன்னதாலதான் வெளியே அனுப்பினேன்
இல்லனா இங்கயே வெச்சு பார்த்து இருக்கலாம்
அதனால என்ன பாட்டிம்மா எங்களுக்கு பொன்னை ரெம்ப பிடிச்சுருக்கு.
Super stroy . இது போன்று கதை எழுத ங்கள் ஆசிரியரே. இந்த கதை அருமை…
Ex a lent, supper
Hi
Super
Super
Cont..mannichudunaga ram story
Nice 👍
அருமையான கதை ! காம கதை என நினைத்து படிக்கையில் ! அழகான காதல் கதையை உணர தேர்ந்தது! சிறு வயது காதலை நினைவு கூற வைத்தது !
Nice story
story touch my heart
Hi
Woooow excellent story…vaasiththu kondirukkumbothu neraya edangalil kan kalangi vidden…❤❤❤