இடை அழகி மேடம் சங்கீதா 10 70

ராகவ் ஒரு நொடி எழுந்து நின்று அனைவரையும் பார்த்து “Gentlemen I am glad to introduce sangeethaa to you all, a true banking expert, since this is our finance related meeting, I requested her to join with us all” என்று சொல்ல ஹலோ, வெல்கம், ஹாய் என்று பலதரப்பட்ட வார்த்தைகள் கதம்பமாக வந்து விழுந்தது சங்கீதாவின் காதில். ராகவ் தன் இருக்கைக்கு அருகே வந்து அமருமாறு முக பாவனை செய்ய, அடக்கமாக சென்று ராகவின் பக்கத்தில் அமர்ந்தாள் சங்கீதா. மீண்டும் பேச்சுகள் தொடர்ந்தன. பேச்சுகளுக்கு இடையே ராகவ் ஒரு நொடி ஏதோ காகிதத்தில் பேனாவால் எழுதி கசக்கி சங்கீதாவின் காலருகே போட, அதை அவள் எடுத்து பிரித்து பார்த்தாள். அதில் “Sara, you are so gorgeous” என்று எழுதியதைப் பார்த்து சிரிக்காமல் மிக அழகாக வெறும் கண்களால் கூட வெட்கப் பட முடியும் என்று ராகவ்க்கு காண்பித்தாள் சரா.

மீட்டிங் முடியும் நேரம் நெருங்கியது, அனைவருக்கும் கை குலுக்கிவிட்டு ராகவ் சங்கீதாவை தனது BMW காரில் அமரவைத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பக்கத்தில் உள்ள coffee day கடைக்கு கூட்டி சென்று இரு cold coffee ஆர்டர் செய்தான். ராகவின் கண்கள் சங்கீதாவின் கண்களை ஊடுருவியது. இருவரும் இதற்கு முன்பு முதல் முதலாக ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும்போது இந்த இடத்தில் அமர்ந்ததை எண்ணி மகிழ்ந்தார்கள். “ஏய்…. என்ன அப்படி பார்க்குற?” ‘என் தேவதைய நான் பார்க்குறேன்.” “தொடர்ந்து அப்படி உத்து பார்க்காத ராகவ், ஒரு மாதிரி இருக்கு.” “சார், ரென்டு cold coffee” – ஆர்டர் செய்த ஐடம் வந்தது. ராகவ் அவனது coffeeயை குனிந்து குடிக்கும்போது சங்கீதா ராகவைப் பார்ப்பதும், அவள் coffeeயைக் குடிக்கும்போது ராகவ் விடாமல் அவளுடைய தலை முடி, வளையல், புடவை ஆகியவற்றை கவனிப்பதும் தொடர்ந்து இருவருடைய coffee முடியும்வரை நடந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் கண்ணும் கண்ணும் வைத்து பார்க்க, அப்படியே சில நொடிகள் திரும்பாமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் சந்கீதாவால் முடியாமல் குனிந்துவிட்டாள். “நீ ரொம்ப மோசம் ராகவ்.” “நான் என்ன செஞ்சேன்?” “உக்கும்…. ஒன்னும் செய்யல..

3 Comments

  1. Next post please…

Comments are closed.