இடை அழகி மேடம் சங்கீதா 10 70

“நான்தானே முதல்ல கேட்டேன்?” “சரி சரி, ladies first ஒகவா? ப்ளீஸ்….” “நீ கண்ணை மூடு..” “எதுக்கு?” “சப்.. மூடுன்னா மூடு…” “சரி சரி.. மூடிட்டேன்… ” ராகவின் காதுகளில் சரா தனது கைகளை லேசாக உயர்த்துகிறாள் என்பதை அவளின் வளையல் ஓசை தெரிவித்தது. “கண்ணைத் திற.. என்றாள் அவனின் தேவதை.” திறந்தான், பார்த்து வியந்தான். “wow..so beautiful. எப்படி சரா?” – அவளது இரு கைகளின் உள்ளங்கையில் ராகவ் என்று பெயரை எழுதி அதை சுத்தி பூக்கள் போன்ற designs வரைந்து அந்த பெயரே தெரியாத வண்ணம் மருதாணி வைத்திருந்தாள். இருந்தும் ராகவ் அதை கண்டு பிடித்துவிட்டான். “பிடிச்சி இருக்கா?” – ராகவின் முகத்தை நேராக பார்த்து கேட்காமல் தனது கரங்களை மட்டுமே வெட்கத்துடன் பார்த்து கேட்டாள் சங்கீதா. ராகவின் கண்ணில் அவள் மீதிருக்கும் காதல் அப்பட்டமாக தெரிந்தது. பாராட்ட வார்த்தைகள் வரவில்லை அவன் வாயில் இருந்து. நேராக அவளது உள்ளங்கையில் அவனது பெயரின் மீது மென்மையாக ஒரு முத்தம் குடுத்தான். அவனது மீசை அவளது உள்ளங்கையில் உரச, டக்கென முகத்தை வேறு பக்கம் திருப்பி உததுகளை உள்ளே இழுத்து பற்களால் கடித்து கண்களை மூடி வெட்கத்தில் மிக அழகாக மென்மையாக சிரித்தாள் ராகவின் தேவதை சரா. “north ல பொம்பளைங்க அவங்க மணசு விரும்பின ஆம்பளைங்களோட பெயரை இப்படிதான்..” – சங்கீதா முடிப்பதற்குள் ராகவ் குறுக்கிட்டு “தெரியும் சரா…. நான் அவ்வளோ மக்கு இல்ல..” – என்று சொல்ல இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்தார்கள் – அவர்களின் சிரிப்பு சத்தம் இருவருடைய காதுகளுக்கும் இனிமையான சங்கீதமாக இருந்தது.

“என்னோட surprise என்ன தெரியுமா?” என்றான் ராகவ் “waiting to listen… சீக்கிரம் சொல்லுடா ப்ளீஸ்.” ராகவ் அருகினில் வந்தான். அவனுடைய ஒரு ஒரு அடியும் முன்னுக்கு வர சாராவின் பாதங்கள் ஒவ்வொரு அடியாக பின் நோக்கி நகர்ந்தது. கடைசியாய் ஒரு கட்டத்தில் சுவரில் சாய்ந்தாள். ராகவ் அவளுக்கு முன்பாக நெருங்கி நின்று அவளது கண்களைப் பார்த்தான். சந்கீதாவே நல்ல உயரம், ஆனால் அவளே நிமிர்ந்து பார்க்கும் விதம் ஆண்மையுடன் கம்பீரமாக அவள் முன் நின்றான். மனதில் சற்று தைரியம் வர வைத்து சங்கீதாவும் ராகவின் பார்வையைப் பார்க்க முயன்றாள். ஆனால் ஏனோ தெரியவில்லை சில நொடிகளுக்கு மேல் அவனுடைய ஊடுருவும் அந்த பார்வையை அவளாள் பார்க்க முடியவில்லை. என்னதான் அவன் கண்கள் இவளது கண்களை மட்டுமே பார்த்தாலும் தலை முதல் பாதம் வரை கிறங்க வைக்கும் powerful மன்மதனின் பார்வை அது. “ஹாஹ் ஹா.” – என்று கண்களை மூடி வெட்கத்தில் சிரித்து வாயில் கை வைத்து மூடி வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். “என்னோட surprise ல நான் உனக்கு ஒரு விஷயம் சொல்ல போறேன்.” – என்று கேசாக குனிந்து சங்கீதாவின் காதருகே சொன்னான் ராகவ். “என்ன?” – காற்று கலந்த குரலில் அழகாக கேட்டாள் சரா. “எனக்கு வாழ்க்கைல இனிமே என்ன காயம் ஏற்பட்டாலும் அதோட வலி எனக்கு தெரியாது.” “ஏன்?” – தலை திரும்பி இருந்தாலும் ஓரக்கண்ணால் ராகவை பார்த்து சிரித்து கேட்டாள் சரா. ராகவ் தனது சட்டை மேல் button ஒன்றை கழட்ட “ராகவ் ப்ளீஸ், என்ன பண்ணுற?” – சந்கோஜத்தில் நெளிந்தாள் சரா. “ஒரு நிமிஷம் இரு… ஹ்ம்ம் இப்போ என் சட்டையை நெஞ்சின் பக்கம் லேசா தள்ளிட்டு பாரு” என்றான். “தனது மென்மையான கரங்களால் அவனது சட்டையை நெஞ்சின் ஓரம் லேசாக விளக்கி பார்த்தாள் சங்கீதா.. சாவியால் கீறி ஏற்பட்ட தழும்பின் மீது “சரா” என்று பச்சை குத்தி இருந்தான் ராகவ்.” பார்த்த அடுத்த கணமே சங்கீதாவின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. “இதுக்குதான் நேத்து நீ உன் நெஞ்சுல பிளாஸ்டர் போட்டு இருந்தியா?” “இல்ல.. இல்ல, என் நெஞ்சுல உன் பேருக்கு ஏற்கனவே கார் சாவியால underline போட்டுட்டேன், சோ அந்த லைன் மேல உன் பேரை பச்சை குத்திகுட்டேன். ஏன்னா என்னதான் வலிகள் என் வாழ்க்கைல வந்து என்னை கீறினாலும் அதுக்கு மேல என் சரா இருக்கா னு நான் ஒரு ஒரு தடவையும் கண்ணாடியில பார்த்துப்பேன். அது எனக்கு எந்த காயத்தையும் மனசளவுல நெருங்க விடாது..” – என்று ராகவ் சொல்லும்போது எந்த தயக்கமும் இல்லாமல் எதையும் யோசிக்காமல் ஒரு நொடி கூட காத்திராமல் அப்படியே ராகவை தன் நெஞ்சோடு இறுக்கி கட்டி அணைத்தாள் அவனுடைய சரா. சற்று நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களது இதய துடிப்பை உணர்ந்தார்கள். அந்த நிசப்தமான மௌன சந்தோஷத்தை அழகு படுத்தும் விதம் சுவரில் உள்ள கடிகாரம் மாலை 5 மணியை நெருங்க கடிகாரத்தின் உள்ளே இரண்டு ஹார்ட்டின் வடிவம் கொண்ட பொம்மைகள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டது.

3 Comments

  1. Next post please…

Comments are closed.