இடை அழகி மேடம் சங்கீதா 10 70

அப்போ கீழே தண்ணீர் அடித்துக் கொண்டு ஓடுகிறது. ஒரு புறம் balance இல்லாமல் கீழே விழுந்து விடுவேனோ என்று பயம் வந்து என்னை தாக்குகிறது. திடீரென கால் தவறி விழுகிறேன், உடனே தூக்கம் கலைகிறது, உடல் முழுதும் வியர்க்கிறது. எழுந்து கண்ணாடியின் முன்னாடி என் முகத்தைப் பார்ப்பேன். எனக்கே என் வியர்த்த முகம் பார்க்கும்போது நிஜமாவே அந்த தாநீரில் இருந்து எழுந்து வந்திருக்கிறேனோ என்றும் தோன்றும். சில நேரத்துல அது என்னோட முகம்தானா னு கூட தோணும். “நண்பா, நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டியே?” “சொல்லுடா…” “நீ ஏன் ஒரு நல்ல மனோதத்துவ மருத்துவரைப் பார்க்கக் கூடாது?” “நான் ஒன்னும் பைத்தியம் இல்லை டா, எனக்கு பிரச்சினையே எனது எண்ணங்கள்தான், அதால எந்த விஷயத்துலயும் ஈடுபாடு வராம போயிடுது, எந்த விஷயத்துலயும் பற்று இல்லாம இருக்கு. கிட்டத்தட்ட என்னுடைய எண்ணங்கள் என்னை கொல்லுது. “சரி என்னென்ன எண்ணங்கள் னு சொல்லு..”

“அவனிடம் சொன்னேன், எல்லா எண்ணங்களையும் சொன்னேன். பிறந்தது, வளர்ந்தது, சிறு வயதில் இருந்தே பயத்துடன் வாழ்ந்தது, சிறு வயதில் செய்யாத தவறுகளுக்கு சில நேரங்களில் வீட்டில் திட்டு வாங்கி அசிங்க பட்டது. எந்த ஒரு விஷயத்திலும் மற்றவர்கள் முடிவு அதிகம் பேசப்படும் ஆனால் என்னுடைய முடிவு நிராகரிக்கப் படுவது, கிட்டத்தட்ட என்னை ஒரு பூச்சி போல மற்றவர்கள் பார்ப்பது. கல்யாணத்துக்கு பிறகு அழகான மனைவி ஒருவள் வருகிறாள்.. அவள் எதிரிலும் என்னை என் பெற்றோர்கள் என்னை அசிங்கப் படுத்துவது. மேலும் வேலை செய்யும் இடங்களில் என் சிந்தனைக்கு மாறாக எது நடந்தாலும் உடனடியாக நான் அங்கே உணர்ச்சி வசப் பட்டு அவர்களின் சட்டையைப் பிடித்து சண்டை போடுவது என்று சகலத்தையும் சொன்னேன். ஒவ்வொரு இரவும் அன்று நாள் முடிவதை தூங்குவதற்கு முன்பு எண்ணிப் பார்க்கையில் என் மனதுக்கு சிறிதளவு கூட நிம்மதி கிடைத்ததில்லை என்று மனதில் உள்ள கொந்தளிக்கும் உணர்வுகள் அனைத்தையும் கொட்டி தீர்த்தேன்.” “நிச்சயம் நீ ஒரு மனோதத்துவ நிபுனரை சந்திக்க வேண்டும். நான் சொல்லுறது உன் நல்லதுக்கு தான், புரிஞ்சிக்கோ ப்ளீஸ்.” என்று வலியுறுத்தினான் நவீன். “டேய், எனக்கு எந்த மனோதத்துவ நிபுணரும் தேவை இல்லை டா. நான் கடவுள் கிட்டே நேரடியா பேசி இருக்கேன் தெரியுமா? எனக்கு இந்த உலகில் கடவுள் ஒருவர் மீது மட்டும்தான் நம்பிக்கை உள்ளது. அதுக்கு ஆதாரமும் இருக்குது.” “இதோ பார் நான் கடவுளுக்கு எழுதின கடிதம்” பெயர்: கடவுள். விலாசம்: எங்கும். “கடவுளே, எந்த ஒரு விஷயத்துலயும் சந்தேகம், நாட்டம் இல்லாமல் இருப்பது, எதிலும் விரக்தி, பயம் உள்ள கனவுகள், மனதை பிசையும் எண்ணங்கள் என்று பல ரூபத்தில் வந்து தாக்குகிறது. நீங்கள் இருப்பது நிஜம்தானே? உண்மை என்றால் எனக்கு பதில் கடிதம் போடுங்கள் ப்ளீஸ்.” விலாசம்: குமார். ஜே.ந. 4வது பிரதான சாலை, சாஹிப் காலனி, வெஸ்ட் ஸ்ட்ரீட், சென்னை.. இப்படி நான் எழுதியதுக்கு எனக்கு கடவுளிடம் இருந்து பதிலும் வந்தது, அதைத் தான் இன்று வரை ஆதாரமாக வைத்திருக்கிறேன். என்னை யாரும் நிஜமாக பைத்தியம் என்று சொல்லி விடக் கூடாது இல்லையா? “இஸ்ஹ்ம்ம்….” ஒன்றும் பேசாமல் பெரு மூச்சு விட்டான் நவீன். “பார்…. இந்த கடிதத்தைப் பார். எவ்வளவு அழகான கையெழுத்தில் வந்திருக்கிறதென்று பார்.” அன்புள்ள குமார். ஜே.ந, உன் கடிதம் கிடைக்கப் பெற்றது, உன் மனக் குழப்பங்களுக்கும் எண்ணங்களுக்கும் காரணம் அனைத்தையும் படைத்த நான்தான்.

3 Comments

  1. Next post please…

Comments are closed.