இடை அழகி மேடம் சங்கீதா 10 70

” “நான் பேசுறதை வெச்சி என்னை நீ பயித்தியம் னு சொல்லாத. நான் நவீனை கொலை செய்யுற காரியத்துக்கு நீதான் எனக்கு உதவ போற. அதுல உனக்கும் பங்கு உண்டு. அதனால நான் பேசும்போது எதுவும் பேசாம நான் சொல்லுறதை கேளு. அதுக்கப்புறம் நான் தீர்மாநிச்சது சரியா தப்பா னு மட்டும் சொல்லு. எனக்கு நாலு வயசு இருக்கும், நான் ஒரு விதத்துல பூச்சியை ப் போல, யாராவது என்னை ஒரு தடவ என்னை உத்துப் பார்த்தால் அப்படியே என்னோட அனைத்து சகல உணர்ச்சிகளையும் உள்ளே இழுத்துக்குட்டு ஒன்னும் பேசாம உள்ளுக்குள்ள கொஞ்சம் அதிகமாவே தனிமைய விரும்பி தனியா எங்கயாவது ஓடிடுவேன். என் வாழ்க்கைல நான் இன்னிக்கி வரைக்கும் அதி பயங்கர ரோஷம் உள்ள ஆளா இருந்ததில்லை, அதே சமயம் மத்தவங்களுக்கு உபத்திரம் தரா மாதிரியும் இருந்ததில்லை. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்திருக்கிறேன். அவ்வளோதான்.”“இந்த நவீன் சமீபமாவே என் வாழ்க்கைல வந்து என்னை ரொம்ப பாடா படுத்துறான். அவனோட தொல்லை தாங்க முடியல. அதனாலதான் நான் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன். ஒரு ஒரு ராத்திரியும் நிம்மதியில் தூக்கம் வந்து எனக்கு வருஷமாகுது. மாறாக மண அழுத்தத்துல தூங்கி எழுந்ததுதான் அதிகம். என்னோட பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் என்னோட சிந்தனைகள் தான். அதில் இருந்து விடு பட எனக்கு ஒரு வழி தேவைப் பட்டது. அப்படி இருக்கும் தருணத்தில் தான் எனக்கு IOFI அலுவலகத்தில் நவீன் எனக்கு அறிமுகம் ஆனான்.” “நானும் நவீனும் ஆரம்பத்தில் இருந்தே நெருங்கிய நல்ல நண்பர்கர்கள் தான்….” “எந்த ஒரு நேரமும் எனக்கு கஷ்டம் என்றால் அவனிடம் தான் நான் அனைத்தையும் பகிர்ந்துகொள்வேன் – வீட்டு விஷயங்கள், குடும்ப விவகாரங்கள். எல்லாத்தையும், ஏன் என்னோட முதல் இரவு எப்படி நடந்துசின்னு கூட நான் அவன் கிட்ட பகிர்ந்து இருக்கேன். அவ்வளோ நெருங்கிய நட்பு எனக்கும் அவனுக்கும்.” “ஒரு நாள் காலை, ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன். அப்போது என்னைப் பார்த்து நெருங்கி வந்து…” “ஹலோ குமார், this is நவீன்” என்று அறிமுகம் செய்து கொண்டான். நானும் அவனிடம் என்னை குமார் என்று அறிமுகம் செய்து கொண்டேன். ஒரு நாள் என்னிடம் “ஏன் எப்போவும் ஒரு மாதிரி இருக்கே? என்ன ஆச்சு உனக்கு?” என்று கேட்டான். “நிறைய எண்ணங்கள் வந்து என் மனசை தாக்குது. என்னால நிம்மதியா தூங்க முடியல, தூங்கினாலும் பயப்புடுற மாதிரி கணவு வந்து தூக்கம் கலையுது. நிம்மதியா தூங்க முடியல என்று சொன்னேன்.” “என்ன மாதிரி கணவு டா” என்றான் அக்கறையாக. “நான் ஒரு பாலத்தின் ஓரத்தில் கைப்பிடி மேலே ஒரு ஒரு அடியாய் என் பாதத்தை வைத்து balance செய்து நடக்கிறேன்.

3 Comments

  1. Next post please…

Comments are closed.