இடை அழகி மேடம் சங்கீதா 10 70

அப்போது கடிகாரத்தின் ஓசை இவர்களின் மனதை வருடியது. சரா அதை ரசித்துப் பார்த்தாள். ராகவ் சாராவின் காதில் “மனசும் மனசும் எவ்வளவு அழகா உரசுது பார்த்தியா?” என்று காற்று கலந்த husky குரலில் காதலுடன் கூறினான். சங்கீதா அதைக் கேட்டபோது அவளின் கரங்கள் ராகவின் தோள்களை இன்னும் சற்று இறுகி பிடித்தது. மீண்டும் சங்கீதாவின் காதோரம் ராகவின் காற்று கலந்த குரலின் சங்கீதம் தொடர்ந்தது.. ” நீ மருதாநியால என் பேரை எழுதி இருக்கே நான் மெடிசின் மூலமா எழுதி இருக்கேன் அவ்லோதான் வித்யாசம். நம்முடைய காதலை தெரிவிச்சதுக்கு அப்புறம் நாம சந்திக்குற முதல் சந்திப்பு இது. எவ்வளவு இனிமையா கவிதையா அமைஞ்சி இருக்கு பார்த்தியா?” “I love you my one and only sara, I love you….. I love you so much.” – சங்கீதாவின் கண்களை உத்து பார்த்து கூறினான். அவனது பார்வையை நேருக்கு நேர் பார்க்க தயங்கி நின்ற சரா இப்போது அவனது அந்த காந்த பார்வையின் ஆழத்தில் விழுந்து கிடக்க ஏங்கி, வைத்த கண் வாங்காமல் ராகவின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். “எ….என் மொத்த வாழ்க்கைலையே இந்த ஒரு நிமிஷம், இந்த ஒரு நொடியை நான் அனுபவிக்குறதுக்காகவே பிறந்திருக்கேன் னு தோணுது டா.” – அளவு மிகுதியான சந்தோஷத்தில் கண்களில் பொங்கும் கண்ணீரை க் கட்டுப் படுத்த முடியாமல் அழுது கொண்டே பேசினாள் சரா. சங்கீதாவின் தலையை தன் பரந்த நெஞ்சோடு அனைத்து அவளது தலையில் முத்தம் குடுத்து, “நான் உனக்கு ஒன்னு தரப் போறேன், சாதாரணமான பொருள் தான் ஆனால் அதுல உனக்கு ரொம்ப பெரிய சந்தோஷம் கிடைக்கும்.” என்று சொல்லி ஒரு கவரைக் குடுத்தான் ராகவ். சரா அதைப் பிரித்துப் பார்த்தாள், அதில் IOFI function நடக்கும்போது மேடையில் சங்கீதா award வாங்கியபோது ராகவின் அருகில் நெருங்கி நிற்கும் புகைப்படம் ஒன்றை பெரியதாய் develop செய்து அதில் கீழே “for my one and only sweet heart” என்று எழுதி கை எழுத்து போட்டிருந்தான். உண்மையில் அதை பார்த்த ஒரு நிமிடம் சங்கீதாவுக்கு தன் கழுத்தில் தொங்கும் தாலிக்கு இணையாக மதிப்பு குடுத்து அதை பதிரமாக தன் handbag உள்ளே மடியாமல் கசங்காமல் வைத்துக் கொண்டாள். “உண்மையிலேயே இது எனக்கு ரொம்ப பெரிய பொக்கிஷம் டா” என்று ராகவின் முகம் பார்த்து சிரித்து சொல்லிக்கொண்டே உள்ளே வைத்தாள். “நான் உனக்கு குடுக்க ஒண்ணுமே செய்யலடா… சாரி” – என்று ஏக்கத்தில் சங்கீதா பேசும்போது குறுக்கிட்டு “நீ ஏற்கனவே எனக்கு குடுத்துட்ட சரா….” என்று சொல்லி சுவரின் மேல போர்த்தப் பட்டிருக்கும் silk துணியை சடாரென உருவினான் ராகவ், அதில் சங்கீதா ராகவ்க்கு தன் காதலை எழுதி தெரிவித்த கடிதத்தை மிக பிரம்மாண்டமாக பெரிய frame போட்டு நடுவினில் சிறியதாக இருக்கும் அவன் தேவதையின் கடிதத்தை க் காட்டினான்.

3 Comments

  1. Next post please…

Comments are closed.