இடை அழகி மேடம் சங்கீதா 10 70

இன்ஸ்பெக்டர் இப்போது ராகவிடம் எழுந்து நின்று பேச ஆரம்பித்தார். “சொல்லுங்க சார் உங்களுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” – மென்மையாக சிரித்து தன்மையாக பேசினார். “சம்மந்தம் இல்லை, ஆனா என் கம்பெனி IOFI சம்மந்தம் ஆகி இருக்கு. இந்த குமார் என் கம்பனியில் வேலை செய்றவன். இந்த பையன் ராமு சொல்லுறதை வெச்சி பார்க்கும்போது யாரோ துரைன்னு ஒருத்தன் இவன் கூட சேர்ந்து, ஏதோ என் கம்பெனில தப்பு பண்ணி இருக்கான். (சில நொடி மௌனத்துக்கு பிறகு ராகவ் inspector தோளில் கை போட்டு மெதுவாக பேச ஆரம்பித்தான்) இந்த விஷயம் வெளியில மீடியா க்கு தெரியக் கூடாது. இது என்னுடைய personal request. ஆனா அதே சமயம் நீங்க உங்க விசாரணைய சத்தம் இல்லாம மெதுவா செய்யுங்க, ஏதாவது துரை பத்தின விஷயம் தெரிய வந்தா உடனடியா சொல்லுங்க. I hope you understand my position in this issue” – என்று சொல்லி inspectorஐ கூர்ந்து பார்த்தான். “எனக்கு புரியுது சார், நான் பார்த்துக்குறேன். நீங்க போயிட்டு வாங்க. ( சில நொடி மௌனத்துக்கு பிறகு) சார் இது என்னோட கார்டு.. உங்க சித்தப்பா கிட்ட குடுத்து வையுங்க.. ஹா ஹா..” – என்று கழுத்தில் செயின் மினுக்க கொஞ்சம் போலியாக சிரித்தார். ராகவ், ஒன்றுமே புரியாமல் நிற்கும் சங்கீதாவை, குமார் அட்மிட் ஆகி இருக்கும் hospital லில் இறக்கி விட அழைத்து செல்லும்போது நிர்மலா அவளது பசங்களை தன் வீட்டினில் தங்க வைத்துக் கொண்டாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் யாவரும் கலைந்து சென்றுவிட்டார்கள். ராகவ் inspector ரிடம் எடுத்து கூறி சங்கீதாவின் வீட்டிற்கு ஒரு constable ஐ காவலாக போடுமாறு தெரிவித்திருந்தான். hospital வராந்தாவில் emergency unit முன்பாக சங்கீதா ஈர விழிகளுடன் நின்று கொண்டிருந்தாள். ராகவ் அவள் அருகினில் சென்றான். “ராகவ்… ஸ்ஹாஆ” – என்று வாயில் கை வைத்து அழுது கொண்டே ராகவின் தோள்களில் ஆறுதலைத் தேடி சாய்ந்தாள் சங்கீதா. “சரி…. சரி…. come on, என்னது இது, சின்ன குழந்தை மாதிரி.. ஒன்னும் ஆகல, எல்லாம் சரி ஆகிடும், கவலைப் படாத சரா.” – என்று ராகவின் குரலில் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது அவளுக்கு உண்மையில் மனதுக்கு பலம் தென்பட்டது. “உன்னைப் பார்க்க பார்க்க தான் எனக்குள்ள கொஞ்சம் தெம்பு வருது ராகவ்.” – இன்னும் அழுத குரலில் பேசினாள்.

“patient க்கு நீங்க என்ன வேணும்?” – டாக்டர் வெளியே வந்து கேட்டார். “நான் அவரோட மனைவிங்க, My name is Sangeetha.” “தலைல பலமா அடி, உள்காயம் கொஞ்சம் அதிகம் ஆகி இருக்கு, operation பண்ண வேண்டிய நிர்பந்தம் இருக்கு, கொஞ்சம் நிறைய செலவு ஆகும்.” – என்று தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டு இயந்திரமாக பேசினார் டாக்டர். “எவ்வளவு ஆனாலும் சரி, குணப் படுத்த முடிஞ்சா போதும், காசைப் பத்தி கவல படாதீங்க” – என்று சற்றும் யோசிக்காமல் கூறினான் ராகவ். “Alright, அப்போ நான் நாளைக்கே அவருக்கு treatment ஆரம்பிச்சிடுறேன் & அடுத்த 48 மணி நேரம் நீங்க மட்டும் வேணும்னா அவர் கூட இருக்கலாம். மத்தவங்க allowed கிடையாது.” – என்று டாக்டர் சந்கீதாவைப் பார்த்து கூறிவிட்டு அங்கிருந்து விலகினார். “நீ ஏன் இந்த காசு விஷயத்துல commit ஆகுற? நான் கேட்டேனா?” “நீ ஏன் இவ்வளோ நாளா என் கிட்ட ஒரு விஷயத்தை மறைச்ச?” “எது டா?” “குமார் IOFI ல வேலை பார்க்குறார்னு சொல்லி இருக்கலாம் இல்ல?” சங்கீதாவிடம் இருந்து மௌனம்…. “நிஜத்தை சொல்லனும்னா எனக்கு இப்போதான் உன் மேல அவ்வளோ மரியாதையும் அதிகமான காதலும் வருது.

3 Comments

  1. Next post please…

Comments are closed.