இடை அழகி மேடம் சங்கீதா 10 70

“எம்மா, யாரும்மா சந்கீதாவா?” “ஆமாம் சொல்லுங்க, நீங்க யாரு?” “நான் உங்க தெரு முனை police station ல இருக்குற ஏட்டு மா.. எனக்கு அதிகம் பேச முடியாது, inspector நிறைய வேலை சொல்லி இருக்காரு, சீக்கிரமா கிளம்பி உங்க வீட்டுக்கு வாங்க, இங்கே ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்து இருக்கு. நேருல வாங்க உங்க கிட்ட பேசணும். “ஹலோ என்ன அசம்பாவிதம், சொல்லுங்க ப்ளீஸ் சொல்லுங்க என்ன அசம்பாவிதம் நடந்துது… சொல்லுங்க ப்ளீஸ்…. – பதறினாள் சங்கீதா.” “கி… கி… கி… கி………” – constable phone கட் செய்து விட்டார். சற்று நேரத்தில் ராகவின் BMW வந்து நின்றது. சங்கீதா என்னமோ ஏதோ என்று பதறி அடித்து ஓடினாள். “அய்யோ அம்மா..” என்று. அதற்குள் ஆம்புலன்ஸ் வந்திருந்தது. அதில் குமார் எற்றப்பட்டான்.. “என்ன ஆச்சு என்ன ஆச்சு இவருக்கு…” “ஒன்னும் இல்ல பதறாதீங்க. காப்பதிடலாம்.. ” – ambulance டிரைவர் கூறினார். ராகவ் சங்கீதாவின் தோளுக்கு பக்கத்தில் உறுதுணையாய் நின்றான். inspector ஜீப்பில் விறைப்பாய் வந்து இறங்கினார். “ஒத்து ஒத்து.. ஹ்ம்ம் ஒத்து” – குரல் பலமாக லட்டியுடன் ஒலித்துக் கொண்டே வருவது தெரிந்து கூட்டம் வழி விட்டது. “you are sangeetha right?” – சத்தமாக கேட்டார் inspector. “ஆமாம் சார்..” – இன்னும் அழுகை நிற்க வில்லை. “அவர் யாருமா?” “என் கணவர்..” “யோவ் constable, எண்ணத்த புடிங்கிக்குட்டு இருக்க?… வந்து சொல்லுற பதிலை நோட் பன்னுயா.. constable பதறி அடித்து ஓடி வந்தார். “சார் வீட்டுக்குள்ள ஒருத்தர் தான் இருந்திருக்காரு” “கணவர் பெரு என்னமா?” “குமார்..” “முழு பெரு என்னமா?” நவீன்குமார்! Inspector அனைவரையும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார். கூடி இருந்த கூட்டங்கள் மெதுவாக கலைய ஆரம்பித்தன. கூட்டம் கலையும் தருணத்தில் பல விதமான குரல்கள் எழுந்தன.. “என்ன மனுஷனோயா…… சரியான ஆளு….. எப்போவுமே ஒரு மார்கமாதான்யா திரிவான்….. வெட்டி பய….” என்று கொஞ்சம் கொஞ்சமாக முணுமுணுத்துக் கொண்டே கூட்டம் கலைய, இஸ்திரி பையன் ராமு அங்கேயே நின்றுகொண்டிருந்தான். “ஏய்.. என்னடா பார்க்குற?” – Inspector விறைப்பாக கேட்டார். “அவன்தான் சார் கம்ப்ளைன்ட் குடுத்தான்” – constable பவ்யமாக பேசினார். “என்னடா பார்த்த..” – Inspector முறைத்துக் கேட்டார். “வெளியிலதான் சார் நின்னுகிட்டு இருந்தேன், உள்ளே போய் எதுவும் பார்கல. நிறைய சத்தம் கேட்டுது.” – பயந்து பேசினான். “என்னென்ன கேட்ட?” – கையில் லட்டி சுழன்று கொண்டே இருந்தது. “ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப கத்தினாங்க சார், ஒருத்தன் இன்னொருத்தனை கொல்ல போறேன்னு கத்தினான், ஒருத்தன் உயிர் பயத்துல விட்டுடு விட்டுடு ன்னு கெஞ்சினான்.. சாமானை தூக்கி எறிஞ்ஜாங்க, கத்தி எடுத்து வீசுன சத்தம் கூட கேட்டுது சார்.” “சப்…. ரெண்டுமே ஒருத்தந்தாண்டா.. வேற ஏதாவது கேட்டுச்சா?” – inspector சலித்துக் கொண்டே கூறினார். “அதுக்கப்புறம் ஏதோ துரைன்னு சொன்னான் சார்..” இன்ஸ்பெக்டர் இப்போது கொஞ்சம் உஷாராகி அவனை கூர்ந்து கவனித்தார். “என்ன துரை?” இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், வீட்டினுள் மற்ற constables குமாருக்கு சம்மந்தமான பொருட்களை எடுக்கும்போது அவனது ஆபீஸ் id card எடுத்தார்கள். அதைக் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த ராகவ் கவனிக்க தவறவில்லை. சற்று வீட்டினுள் சென்று நெருங்கி எட்டிப் பார்த்தான். IOFI employee id card தான் அது. “நீயும் துறையும் சேர்ந்து செய்யுற தப்பை நான் வேணும்னா வெளியே சொல்லாம இருக்கேன்டா என்னை விட்டுடு விட்டுடு ன்னு கெஞ்சினான் சார்.” – ராமு போலீசிடம் பயந்து கூரிக் கொண்டிருந்தான். “ராகவ் இந்த வார்த்தைகளை கேட்டு இஸ்திரி பையன் ராமுவிடம் நெருங்கி வந்தான்.” “நீங்க யாரு சார்? உங்களுக்கு என்ன வேணும்?” – ராகவைப் பார்த்து inspector பேசினார். “நான் ராகவ், IOFI CEO” – தனது visitiing card குடுத்து, இன்ஸ்பெக்டரிடம் கண்ணியமாக கை குலுக்கினான். கூடவே தனது சித்தப்பா IG யாக இருப்பதையும் விளக்கினான்.

3 Comments

  1. Next post please…

Comments are closed.