இடை அழகி மேடம் சங்கீதா 10 70

நேரம் காலை 10 மணி சங்கீதா டிங்….டிங்…. என்று சத்தம் கேட்டு வந்தது யாரென்று பார்க்க குமார் உள்ளே வந்தான். சங்கீதாவின் கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாமல் கதவை அழுத்தமாக சாத்திக்கொண்டான் குமார். பிறகு சங்கீதா IOFI Benz ல் கிளம்பினாள். வெளியில் கார் கிளம்பும் சத்தம் கேட்டது. வீட்டில் நிசப்தம். வெளியே வந்தான், வீட்டுக்கு பின் பக்க கதவு, படுக்கை அறை கதவு அனைத்தையும் சாத்தினான். வாசல் கதவை அழுத்தமாக சாத்தி தாழ்ப்பாள் போடாமல் வைத்திருந்தான். ஒரு காரணத்திற்காகத் தான் அதை செய்தான். ஆடைகளை அகற்றி, குளியல் அறைக்கு சென்று ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து தலையில் ஊத்திக் கொண்டு துடைத்த ஈரத் துண்டுடன் பூஜை அறைக்கு முன் சென்று அமர்ந்தான். ஜன்னல்கள் கதவுகள் அனைத்தும் அடைக்கப் பட்டிருந்ததால் வீட்டினுள் வெளிச்சம் மிகவும் கம்மியாக இருந்தது, கிட்டத்தட்ட இருட்டுதான். ஓடி க் கொண்டிருந்த fanஐ நிறுத்தினான்.

காரணம் சில்லென்று உடல் மீது காற்று படுவதை விரும்பவில்லை. அடி வயிற்றினில் இருந்து ஒரு விதமான பயம். உடல் முழுதும் ஒரு விதமான கிறக்கம், உஷ்ணம், வெறி பரவி இருந்தது. பூஜை அறையின் முன் குமார் பேச ஆரம்பித்தான். “என்ன பார்க்குறீங்க? எல்லாரும் காலைல என் பொண்டாட்டி வெச்ச பூவுல ரொம்ப அழகாத்தான் இருக்கீங்க… ஆனா நான் மனசளவுல ரொம்ப நொந்திருக்கேன். ஆனா எனக்கு இன்னைக்கி நிம்மதி கிடைக்க ஒரு வழி கிடைச்சி இருக்கு. ஆமா… காரணம்.. இன்னைக்கி வரைக்கும் என் வாழ்க்கைல நான் செய்ய பயந்த ஒரு விஷயத்தை இன்னைக்கி நான் செய்ய துனிஞ்சிட்டேன். Yes, நான் நவீனை இன்னைக்கி சாயும்காலம் கொலை பண்ண போறேன். அவன் செத்தாதான் எனக்கு நிம்மதி. அவன் இருக்குற வரைக்கும் எனக்கு நிம்மதி கிடையாது. இது நான் ஏதோ திடீர்னு எடுத்த முடிவு கிடையாது, கடந்த ஒரு வாரமா தினமும் 20 ல் இருந்து 30 பாக்கெட் சிகரட் பிடிச்சி பிடிச்சி ஆழ்ந்து சிந்திச்சி உறுதியா எடுத்த முடிவு. இப்போ உங்களுக்கு சந்தோஷமா? சொல்லுங்க சந்தோஷமா?” ஆனா நான் செய்யத்தான் போறேன். அது ஒண்ணுதான் எனக்கு நிம்மதி தரப் போகுது. ஏன் எதுக்குன்னு என்னை கேள்வி கேட்க்குறீங்களா? சொல்லுறேன்.. ஆனா என் முடிவை நான் மாத்திக்க மாட்டேன். குமார் பேசிக் கொண்டிருக்க, மேலே ஒரு பள்ளி சாமிப் படத்தின் பின்னால் நகர, படத்தின் மீதிருக்கும் பூ ஒன்று தரையில் விழுந்தது. “ஆஹா, நீயே சம்மதிச்சிட்ட இனி எனக்கு தடை இல்ல.. ஆனா நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன்னு நீ தெரிஞ்சிக்க ஆசை படல? எனக்கு தெரியும் நீ தெரிஞ்சிக்க ஆசை படுறன்னு, சொல்லுறேன் கேளு, இந்த உலகத்துல நீ மட்டும்தான் இப்போதிக்கு நான் எது சொன்னாலும் பதில் பேசாம கேட்கக்கூடிய ஜீவன்.

3 Comments

  1. Next post please…

Comments are closed.