இடை அழகி மேடம் சங்கீதா 10 70

ஒரு வழியாய் அவசரமாக கிளம்பி, இறங்கும்போது கூட தலையில் உள்ள gel கச்சிதமாக இருக்கிறதா என்று வாரி பார்த்து மீண்டும் சரி செய்து விலை உயர்ந்த perfume அடித்துக் கொண்டு தனது benz காரின் சாவியை எடுத்துக் கொண்டு இவ்வளவு நேரம் உல்லாசமாய் இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் reception ல் சென்று ரூமுக்கான காசைக் கட்டிவிட்டு “ரூரூரூம்ம்” என்று சத்தம் காற்றை கிழிக்க காரின் வேகம் அதிகரித்து கிளம்பினான் மிதுன். என்னதான் அவள் இவனை புறக்கணித்தாலும் சஞ்சனாவின் சுண்டி இழுக்கும் கூர்மையான பார்வையிலும், வளைவு நெளிவுகளைக் கொண்ட அவளது மேனி அழகினில் இருந்தும் இன்னும் அவன் மீளவில்லை. அந்த போதைதான் அவனை இன்னும் அவள் பின் அலைய வைக்கிறது. மெசேஜ் வந்து கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் ஆகி இருக்கும். அதற்குள் IOFI வளாகத்துக்குள் நுழைந்து சஞ்சனா இருக்கும் இடத்துக்கு வந்தடைந்தான். மிகுந்த எதிர்பார்ப்புடன் அவள் முகத்தைக் காண calling bell அழுத்தினான். “கதவு சாத்தல, கம் இன் ஹணி” என்று அவள் கூறிய வார்த்தைகள் மிதுன் காதுக்கு விழுந்தது. மெதுவாகக் கதவைத் திறந்தான். ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் பளிச்சென அடிக்கும் வெளிச்சத்தில் பள பளக்கும் தோள்கள் தெரிந்தது, silky கருப்பு நிறத்தில் ஒரு long sleeveless gown அணிந்து, இடுப்பின் அருகில் artificial diamond stone வைத்த செயின் ஒன்றை மிக கவர்ச்சியாக அணிந்து, இடுப்பின் வலது புறம் ஆரம்பித்து பாதம் வரை அந்த gown விரிவடைந்து கவர்ச்சிகரமாக அவளது வலது கால்களை முக்கால்வாசி காண்பித்தது. தலையில் மிக அழகாக curls செய்திருந்தாள். எழுந்து மெதுவாக திரும்பி நின்று மித்துனைப் பார்த்தாள் சஞ்சனா. சொக்கி இழுக்கும் அந்த விழிகளையும், உதடுகளையும், பளபளக்கும் அவளது மேணியையும் கண்டு மூச்சு பேச்சிலாமல் அப்படியே நின்றிருந்தான் மிதுன். “இப்படியே பார்துக்கிட்டே இருந்தா போதுமா? எங்கயும் போக வேண்டாமா?” என்று மித்துனின் வாயின் கீழ் தனது பளபளக்கும் nail polish விரல்களால் தடவி கேட்டாள். “ஆங்….ஹாஹ்” – அவள் பேசியதும் மயக்கத்தில் இருந்து சுதாரித்துக் கொண்டான், இருந்தாலும் அவளது அழகைப் பார்த்து அவனால் பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. “எங்க போகணும் ஹணி?” – பேசும்போதே அவளை மெதுவாக நெருங்கினான். “hey stop…. இப்படியே விட்டா நீ என்னையே பார்த்துகிட்டு இருப்ப. ஹா ஹா.. naughty..” – அழகாக சிரிப்பது வேறு, சொக்கும் விழிகளுடன் சிரிப்பது வேறு. சஞ்சனா இரண்டாவது வகை சிரிப்பைக் குடுத்தாள். அதில் அவள் எதிர்பார்த்த விதம் லாவகமாக விழுந்தான் மிதுன். இருவரும் வண்டியில் எரி அமர்ந்தார்கள். “எங்கே?” – என்று மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு க் கேட்டான் மிதுன். “The famous Dark Don midnight club honey….” – என்று அலை போன்ற முடிகள் முன்னும் பின்னும் அசைய செக்ஸியாய் சொன்னாள் சஞ்சனா.

3 Comments

  1. Next post please…

Comments are closed.