28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

நிஷா கையிலிருந்த மாங்காயைப் போட்டுவிட்டு வேகம் வேகமாக திரும்பி நடந்தாள். கிழவியிடம் அடிவாங்கியது அவமானமாக இருந்தது. அழுகை வந்தது.

வம்புக்குன்னேதான் என்ன மாட்டிவிட்டுட்டான்ன்ன்! என்று கதிர் மேல் ஆத்திரம் பொங்கியது. இவனை நம்பி வந்தது தப்பு ச்சே…. என்று கையை உதறிக்கொண்டு வேகம் வேகமாக நடந்தாள்.

அப்பாகூட என்ன இப்படி அடிச்சது கிடையாது. யாரோ ஒரு கிழவி திரும்பத் திரும்ப அடிச்சிட்டாளே… ச்சே நான் அடிவாங்கினது வெளில தெரிஞ்சா….

நிஷா கசங்கிய முகத்தோடு, கலங்கிய கண்களோடு, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு, புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு கஷ்டப்பட்டு நடந்தாள். ஹைஹீல்ஸ் செருப்பு வேறு மணலுக்குள் புதைந்து புதைந்து அவளை நடக்கவிடாமல் செய்தது. செருப்பை கையில் எடுத்துக்கொண்டு நடந்தாள். காலில் முள் குத்தியது.

ஆஆ….

ஆத்திரத்தோடு முள்ளை பிடுங்கி வீசினாள். ரத்தம் வந்தது. தாங்க முடியாத அளவுக்கு வலித்தது. ச்சே…ச்சே… என்று எரிச்சல்பட்டுக்கொண்டு அழுகையோடு நடந்துவந்தபோது கதிர் சிரித்துக்கொண்டே ஒரு மரத்துக்குப் பின்னாலிருந்து வந்தான்.

என்ன டீச்சர், திருட்டு மாங்கா டேஸ்ட்டா இருந்துச்சா?

நிஷாவால் அதற்குமேல் கோபத்தை அடக்கமுடியவில்லை. செருப்பு இரண்டும் அவன்மேல் வந்து விழுந்தன. என்ன அங்க விட்டுட்டு ஓடி வந்துட்டேல்ல? என் மூஞ்சிலயே முழிக்காத…. என்று கத்திவிட்டு அவனைக் கடந்து வெடுக் வெடுக்கென்று நடந்துபோனாள்.

நிஷா… நிஷா… ஏய்….

அவள் ஆத்திரத்தோடு நடந்துகொண்டேயிருந்தாள்.

ஏய்.. திருட்டுக் கழுத… நில்லுடி…

நிஷா கோபத்தோடு திரும்பினாள். எரிக்கும் கண்களால் அவனைப் பார்த்தாள். யார்ரா திருட்டுக் கழுத… யார்ரா திருட்டுக் கழுத… என்று சொல்லிக்கொண்டே அவன் கைகளிலும் நெஞ்சிலும் தோளிலும் மாறி மாறி அடிக்க…. கதிர் அவளைக் கட்டிப்பிடித்து சட்டென்று அவள் உதடுகளைக் கவ்வினான்.

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.