28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

முகம் கழுவிவிட்டு, தலையிழுத்து பொட்டு வைத்து லேசாக அலங்கரித்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். லேசான புன்முறுவலோடு ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தாள். எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது. சந்தோஷத்தோடு, ட்யூஷன் எடுக்க கீழே இறங்கி வந்தாள்.

கதிர் எப்போதுடா வருவான் அவனோடு பேசிக்கொண்டிருக்கலாம் என்றிருந்தது. மனம்விட்டு அவனோடு நிறைய பேசவேண்டும்போல் இருந்தது.

லக்ஷ்மி கொடுத்த காபி… இன்று சுவையாயிருந்தது. நீ சென்னைல இந்த காபிதான் குடிப்பியாமே… வாங்கிட்டு வந்து கொடுத்திருக்கான்… என்று லக்ஷ்மி சொல்ல… மனதுக்கு இதமாக.. சுகமாக இருந்தது. ட்யூசன் எடுத்துக்கொண்டிருக்கும்போதே… அவன் வீட்டுக்குள் நுழைய, அவனைக் கண்டும் காணாததுபோல் பாடம் நடத்திக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து அவள் கண்கள் தானாகவே அவனைத் தேட.. அவன், வீட்டுக்குள் தூணில் சாய்ந்து நின்றுகொண்டு இவளையே ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.

நாட்கள் இனிமையாய் கழிந்தன.

லக்ஷ்மிக்கு, இப்போது ரெஸ்ட் கிடைத்தது. சாப்பாடு பரிமாறுவதெல்லாம்.. நிஷாதான் பார்த்துக்கொண்டாள். அத்தை கஷ்டப்படுறாங்களே என்று மற்ற சிறு சிறு வேலைகளிலும் அவளுக்கு ஒத்தாசையாக இருந்தாள்.

அன்று இரவு –

அவன் வர லேட்டாகுதே…. என்னம்மா நீ சாப்பிட்டுட்டு படுக்குறியா?

அப்புறம் சாப்பிட்டுக்கறேன் அத்தை… அவர் வரட்டும்

லக்ஷ்மி லக்ஷ்மியாக இல்லை. ச்சே.. இந்தப் புள்ளையை பேசி முடிக்காம விட்டுட்டோமே

அத்தை படுக்கப்போய்விட… நிஷா காத்துக்கொண்டிருந்தாள். இன்று கதிர் வரும்போது அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தால் என்ன? என்று விரலைக் கடித்துக்கொண்டு… நாணத்தோடு யோசித்துக்கொண்டிருந்தாள்.

நிலவு வெளிச்சம் வீட்டு முற்றத்தை பகல்போல் காட்டிக்கொண்டிருந்தது.

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.