நிஷா அவனுக்குள் புதைந்துகொண்டாள்.
கதிர், கணக்கில்லாமல் அவளுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டிருந்தான்.
மறுநாள் –
நிஷா ரொம்ப லேட்டாகத்தான் எழுந்தாள். அடித்துப் பிடித்துக்கொண்டு ஆட்டோவில் ஸ்கூலுக்குப் போனாள். ரொம்ப ரொம்ப சந்தோஷமாக, சென்னை ஸ்கூலுக்குள் நடந்து திரிந்ததுபோல் பூரிப்போடு நடந்தாள். முடியை அழகாக வாரி, க்ளிப் போட்டிருந்தாள். புடவையை, பழையமாதிரி சிரத்தை எடுத்து நேர்த்தியாகக் கட்டியிருந்தாள்.
புத்தகத்தை மார்பில் வைத்து அணைத்துப் பிடித்துக்கொண்டு வேக வேகமாக ஸ்டைலாக அந்த ஸ்கூல் வராண்டாவில் நடந்தாள். குட் மார்னிங்க் சொன்ன மாணவிகளுக்கு சந்தோஷமாக பதில் சொன்னாள். இது எங்க ஊரு. இது எங்க ஊரு ஸ்கூல். எங்க ஊர் மக்களுக்கு அறிவை போதிக்கிற ஸ்கூல். என் திறமையையும் அறிவையும் கடின உழைப்பையும் உங்களுக்கு கொடுக்கப்போகிறேன் டியர்ஸ்… என்று மனம் நிறையச் சொல்லிக்கொண்டு அவள் வகுப்புக்குள் நுழைந்தாள்.
கதிர், அவளைத் தூங்கவைத்த கையோடு வயலுக்குப் போயிருந்தான். பதினோரு மணிவாக்கில் வீட்டுக்கு வந்தவன், அதிகாலையில் நிஷா தன்னைக் கட்டிப்பிடித்துக்கொண்ட இடத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். ஒரு இனம்புரியாத சந்தோஷம். மழையில் நனைந்ததுபோல் இருந்தது. அவள் தனக்கு உணர்ச்சிப்பூர்வமாக ஐ லவ் யூ சொன்னதை நினைத்து நினைத்து மகிழ்ந்தான். நிஷா… நிஷா…. என்று அவள் பெயரை சொல்லிக்கொண்டே படுத்துக்கிடந்தான். பின் மனசே இல்லாமல் தோட்டக் காட்டுக்குப் போனான். அங்கேயும்கூட…. இரட்டை ஜடையில் அங்கே நிஷா முகம் நிறைய சிரிப்போடு நடந்து சென்ற நாட்களை நினைத்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.
40 next please quick
மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்
Pls stpo the story . Very boring
Great episode i felt like watching a romantic movie scene.
Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..
நிஷா கதிர் காதல் அழகு
கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்
கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ
சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.
சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்
Disappoinment maiuru mathiri erukku
நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..
அழகு… அருமை…
Seenu nisha only best pair