28 வயது அழகுப் புயல் – பாகம் 39 112

அவள் அடக்கமாக, புடவையை நடுவில் பிடித்துக்கொண்டு, அவனை நினைத்து சிரித்துக்கொண்டே படியேறினாள். மேலே போய் நின்றுகொண்டு, போய்யா… போய் படு… என்பதுபோல் கையை காட்டினாள்.

நீ கீழே வா… என்றான்.

ம்ஹூம். என்று குறும்பாகச் சொல்லிவிட்டுக் கதவை அடைத்தாள். கதவுக்குப் பின் சாய்ந்துகொண்டு… சந்தோஷமாக நின்றாள்.

நேரா அப்பாவுக்கே போன் போட்டுட்டான். ராஸ்கலுக்கு ரொம்பத்தான் ஆசை!

கதிர்… சீக்கிரமே உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்ன மாதிரி ஒரு குழந்தை பெத்துக்க ஆசையா இருக்குடா… என்று ஆசையோடு உதட்டுக்குள் சொல்லிக்கொண்டே முகத்தை நிமிர்த்தி உச்சந்தலையை கதவில் சாய்த்துக்கொண்டு… சந்தோஷமும் வெட்கமும் கலந்த முகத்துடன்… தனக்குள் முளைவிட்டுக்கொண்டிருக்கும் அந்த அழகான உணர்வை அனுபவித்து ரசித்துக்கொண்டு… கண்மூடி நின்றாள்.

மறுநாள் –

நிஷா, மார்பில் புத்தகத்தை வைத்துக்கொண்டு அடக்கமாக இறங்கி வர, அவள் எப்போது வருவாள் என்று காத்திருந்த இவன், அம்மா… நிஷாவுக்கு சுத்திப் போடும்மா… என்றான்.

இனிமேல் அடிக்கடி நிஷாவுக்கு சுத்திப்போடவேண்டும் என்று அவன் ஆர்டர் போட்டிருந்தான். ஷேவ் பண்ணியிருந்தான். அவள், புத்தகங்களை அவனிடம் கொடுத்துவிட்டு, அத்தையின்முன் நின்றாள். கதிர், உச்சி முதல் உள்ளங்கால்வரை… அவளை ரசித்துப்பார்த்துக்கொண்டு நின்றான். அவளை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும், தாங்கு தாங்கு என்று தாங்கவேண்டும் என்பது எல்லாம் எத்தனை வருட ஆசைகள்! எல்லாம் நிறைவேறப்போகிறது.

உன்ன கொண்டுபோய் விடுறதுக்கு கார் வாங்கப்போறானாம். இதுக்கு முன்னாடி கார் வாங்கச்சொன்னதுக்கு போய் டிராக்டரை வாங்கிட்டு வந்து நின்னான்

லஷ்மி பொய்யான கோபத்தோடு சொல்ல, நிஷா அவனை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக்கொண்டே அத்தையிடம் சொன்னாள்.

நான் கார்ல போய்ட்டு வந்தேன்னா ஸ்டூடண்ட்ஸ், ஊர்க்காரங்க.. எல்லாரையும் விட்டு விலகி.. தனிச்சு நிக்குறமாதிரி தெரியும். அதனால்தான் அப்பாகிட்ட கார் வேணாம்னு சொல்லிட்டு வந்தேன். கொஞ்ச நாள் போகட்டுமே அத்தை… என்றாள்.

12 Comments

  1. மறுபடியும் ஜோடி மாறாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  2. Pls stpo the story . Very boring

  3. Great episode i felt like watching a romantic movie scene.

  4. Sema bro, superb, villagela oru sex scene nadantha eppadi irukkumnu next partla sollunga bro, addicted to read this story & waiting for the next part..

  5. நிஷா கதிர் காதல் அழகு
    கதை ஆசிரியர் இந்த காதலை யாவது சேர்த்து வைக்கணும்

  6. கதிருக்கும் நிஷாவும் திருமணமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. இனி சீனு கதையை இன்னும் நன்றாக தொடருங்க ப்ரோ

  7. சார் சீனுவை எப்படியாவது நிஷா அல்லது காமினியோடு சேர்த்து வையுங்கள் கதை ரொம்ப நல்லா போகுது. அகல்யா சீனு பாகம் சூப்பர். கதிர் பாகம் ஒன்றும் இல்லை.

  8. சார் சூப்பர் கதை எப்போ விடியும் அப்டேட் வரும் என்று yengaவைக்கிரீர்கள் சீக்கிரம் தொடரை முடித்துவிடாதீர்கள் பாகம் 38பத்து முறை படித்தேன். சீனுவை ராஜ் லெவெலுக்கு உயர்வாக தொழிலில் கொண்டுவருங்கள் சார்

    1. Disappoinment maiuru mathiri erukku

  9. நான்தான் சொன்னேன்ல்ல… வாத்தியார் காமத்திப் மட்டுமில்லை…. காதலிலும் கொடியேத்துவார் என்று… பொன்னின் செல்வனை படித்தவர்களுக்கு சொல்லனுமா என்ன?!!..

    அழகு… அருமை…

  10. Seenu nisha only best pair

Comments are closed.