கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

“உன் செல்வாவை கூப்பிட்டுக்கோயேன். ரெண்டு பேருமா பைக்லே போனீங்கன்னா ஒரு மணி நேரத்துல திரும்பி வந்துடலாம்.” முகத்தில் புன்னகையுடன் பேசியவர் வந்த வேகத்தில் தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் அவர்.
சுகன்யா ஒரு நிமிடம் யோசிக்க ஆரம்பித்தாள்.
“திஸ் இஸ் த எண்ட் ஆஃப் இட்’ ன்னு அவன் என்னைப்பாத்து காறிதுப்பிட்டு போய் நாலு நாளாச்சே? உண்மையிலேயே இன்னும் என்னை அவன் காதலிச்சுக்கிட்டு இருந்தா, அட்லீஸ்ட், சுகும்மா… நான் பேசினது தப்புடீன்னு ஒரு
“சாரி’ யாவது சொல்லியிருப்பான்லே? ஏண்டா இவனை காதலிக்க ஆரம்பிச்சோம்ன்னு எனக்கு வெறுத்து போயிடிச்சி.

எங்க காதலை சக்ஸஸ்புல்லா ஆக்கறதுல நான் மட்டும்தான் எப்பவும் ஒரு கமிட்மெண்ட்டோட இருக்கணுமா? எங்க லவ்வுல, எங்க கல்யாணத்துல இவனுக்கு எந்த ரோலும் இல்லையா? ஒவ்வொரு தரமும் நான்தான் நாய் மாதிரி, என் சுயமரியாதையை காத்துல பறக்கவிட்டுட்டு, என் வாலை குழைச்சுக்கிட்டு இவன் எதிர்ல போய் நிக்கணுமா? ஆம்பிளைங்க திமிரு இவன் கிட்ட நிறையவே இருக்கு; இவன் மேல எனக்கு வந்த ஆசையில, ஆரம்பத்துல என் கண்ணு அவிஞ்சிப்போயிடிச்சி. எனக்கு நல்லா வேணும். இப்ப எல்லாத்துக்குமா சேர்ந்து இவன்கிட்ட அனுபவிக்கறேன்.

அக்கவுண்ட்ஸ் ஆஃபீஸ் வரைக்கும் என்னை நீ அழைச்சிட்டுப்போறியான்னு இவன்கிட்ட எதுக்காக நான் கெஞ்சணும்? செல்வா இப்பல்லாம் எல்லாத்துக்கும் ரொம்பவே அல்டிக்கிறான்? சென்னையில இவன் இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டா நான் வேலையில வந்து சேர்ந்தேன்? நூறு ரூபாயை விசிறி அடிச்சா எவனாவது ஒரு ஆட்டோக்காரன் கூப்பிட்ட இடத்துக்கு வந்துட்டுப்போறான்.

சுகன்யா… ஒரு செகண்ட் பொறுடீ. எக்குத்தப்பா எமோஷனாவதடீ. இது நல்லதுக்கு இல்லே. செல்வா பண்ணது தப்பாவே இருக்கட்டும்? அவனை நீ இன்னும் காதலிச்சுக்கிட்டுத்தானே இருக்கே? அதனாலத்தானே நாலு நாளா மனசுக்குள்ளவே நீ முகாரி ராகத்தைப் பாடிகிட்டு இருக்கே?

அவனை டெஸ்ட் பண்றதுக்கு இது உனக்கு கிடைச்சிருக்கற ஒரு சான்சை நீ தவறவிட்டுடாதே. நீயா… நானான்னு போட்டி போடாதடீ. உன் பிடிவாதத்தை கொறைச்சுக்கோ. காதல்லே யாரு விட்டுக் கொடுத்தாலும், சந்தோஷம் உங்க ரெண்டுபேருக்கும்தானேடீ?

சுகன்யா நீ இன்னொரு விஷயத்தையும் நல்லாப்புரிஞ்சுக்கோ.
“உன் அத்தான் சம்பத் குடுத்த டார்ச்சரை தாங்கமுடியாம, எங்க அண்ணன் செல்வா அசந்து போய் உக்காந்துட்டான். அன்னைக்கு ராத்திரி சீனுதான் அவன் தலைமேல ரெண்டு அடி போட்டு, சுவாமிமலைக்கு இழுத்துக்கிட்டு வந்தான்னு’ ஏற்கனவே மீனா உங்கிட்ட சொல்லியிருக்காளா இல்லையா?

இப்படி செல்வா ஆரம்பத்துலேருந்தே எதையாவது நினைச்சுக்கிட்டு தனக்குள்ள தடுமாறிகிட்டுத்தான் இருக்கான். இது அவன் கூடப்பிறந்த குணம்; ஆனாலும் அவன் உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கறாங்கறதும் உனக்கு நல்லாத்தெரியும். நீ இல்லாம அவனால இருக்கமுடியாது. உங்கப்பிரச்சனையை நீங்கதாண்டீ தீத்துக்கணும். ஒவ்வொரு தரமும் உன் மாமாவோ, சீனுவோ, மீனாவோ, உங்க நடுவுல வந்து நிக்கமாட்டாங்க?

அவனுக்கு இன்னொரு சான்ஸ் குடுடீ. அவன் கிட்ட போய் பேசுடீ; இதுதான் கடைசி தரம்ன்னு நெனைச்சிக்கோ. சுகன்யாவின் மனதுக்குள் எழுந்த வேறுபட்ட உணர்ச்சிகள் அவள் முகத்திலும் தங்கள் தாக்குதலை படமாக வரைந்து கொண்டிருந்தன.

சுனில், தன் ஓரக்கண்ணால் சுகன்யாவைப்பார்த்தான். சுகன்யாவின் முகத்தில் ஓடும் வலியை, அவள் முகத்தின் பாவனைகளை, சட் சட்டென அவள் முகத்தில் தோன்றும் மாறுதல்களை, எட்டு பெண்களிடம் காதலுக்கு அப்ளிகேஷன் போட்டவனால் நன்றாகப் படிக்க முடிந்தது. செல்வாவுக்கும், சுகன்யாவுக்கும் நடுவில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது.

நாலு நாளா செல்வாவையும் நான் நோட் பண்ணிக்கிட்டு இருக்கேன். நிஜமாவே அவன் டெக்னிகல் வேலையில இன்டெலிஜண்ட் பெலோதான். ஆனா இவங்களுக்குள்ள இருக்கற பிரச்சனையினால, ஆஃபீஸ்ல முட்டாளா பிஹேவ் பண்றான்.

டேட்டா அப்டேஷனைப்பத்தி தினமும் ஈவினிங்ல அவன் கூட டிஸ்கஸ் பண்ணும்போது, நான் ஒண்ணு சொன்னா, பைத்தியக்காரன் மாதிரி அவன் எதையாவது உளர்றான். அப்புறம் விஷயம் புரிஞ்சதும், நாலுதரம் எங்கிட்ட
“சாரி ப்ரதர்’ங்கறான்.

சுகன்யா கேண்டீனுக்கு போற வழக்கமான நேரத்துல, தினமும், தவறாம, தனியா மூலையில உக்காந்துகிட்டு, இவ வர்றாளான்னு திருட்டுப்பார்வை பாத்துகிட்டு தேவுடு காக்கறான்.

கம்மினாட்டி பய…! இவ்வளவு தூரம் சுகன்யாவை டீப்பா லவ் பண்ற முண்டம், எதுக்காக இந்தமாதிரி ஒரு நல்லப்பொண்ணுகிட்ட அறிவுகெட்டத்தனமா சண்டை போட்டுக்கிட்டு இவளை அழவிடணும்?

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.