கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

ஆண் மகனான செல்வாவிடம் வரட்டு கவுரவம் அதிகமாக இருந்ததென்றால், சுகன்யாவை, சிறிது காலமாக, பிடிவாதம் என்னும் கொடிய நோய் பிடித்தாட்டிக்கொண்டிருந்தது. அவர்கள் இருவருமே நேருக்கு நேர் ஒருவரையொருவர் பார்த்துவிடக்கூடாது என்ற விஷயத்தில், மிகவும் கவனமாக இருந்தார்கள்.

எனக்கு பிடிக்காததை செய்தது நீதானே என செல்வாவும், தப்பாக பேசியது நீதானே? நானில்லையே? என சுகன்யாவும், இருவருமே ஒருவர் அடுத்தவரை குறை சொல்லிக்கொண்டு தேவையே இல்லாமல், தங்கள் மனதை உளைச்சலில் ஆழ்த்திக் கொண்டிருந்தனர்.

சுகன்யா அலுவலகத்தில் எப்போதும் மாடிப்படிக்கட்டுகள் வழியாகத்தான் தன் ரூமுக்குப்போவாள். வருவாள். செல்வா மாடிப்படிக்கட்டுகளை உபயோகிப்பதைத் தவிர்த்தான்.

சுகன்யா, செல்வாவின் ஐடி டிவிஷன் இருக்கும் ஐந்தாவது தளத்தின் பக்கமே தலைவைத்து படுக்கவில்லை. ஐ.டி டிவிஷனில் டிஸ்கஷன் என்றால், சுனிலை விரட்டிக்கொண்டிருந்தாள். காலையில், மாலையில் காண்டீனுக்கு போவதையும் அடியோடு தவிர்த்துவிட்டாள்.

சுனில் மட்டும், எப்போதும் போல், தன்னுடைய இயல்பின்படி, எதுவுமே நடக்காதது போல், சுகன்யாவிடம் கலகலப்பாக சிரித்து பேசிக் கொண்டிருந்தான். அவள் அவன் சொல்லுவதைக் முகத்தில் புன்னகையுடன் கேட்டுக்கொண்டாளே தவிர, தான் பேசுவதை முடிந்தவரை குறைத்துக்கொண்டு இருந்தாள்.

அன்று வெள்ளிகிழமை. வாரத்தின் கடைசி வேலை நாள். சுகன்யா கணிணியில் மும்முரமாக எதையோ டைப் செய்துகொண்டிருந்தாள். வழக்கம்போல் சுனில் ஏதோ ஒரு சினிமாப்பாட்டை வாய்க்குள் முனகிக்கொண்டே, தன் காரியத்தில் கண்ணாயிருந்தான்.

“ஹலோ… குட் மார்னிங் டு யூ ஆல்” கோபாலன் அறைக்குள் நுழைந்தார்.

“அயாம் சாரிம்மா சுகன்யா. நேத்து ஈவினிங் அக்கவுண்ட்ஸ்லேருந்து உன்னை உடனடியா வரசொல்லி ஒரு கால் வந்திச்சி. அப்ப நீ சீட்டுலே இல்லே. அதனால மிஸிஸ் சாவித்திரி கிட்டே சொன்னேன்.

“என்ன விஷயம் சார்? அவங்க எதுவும் என்கிட்ட சொல்லலையே.” சுகன்யா மரியாதையாக எழுந்து நின்று வினவினாள்.

“அப்படியா? சரிம்ம்மா. சாவித்திரி கதையை விட்டுத் தள்ளு; உன் சர்வீஸ் புக்ல ஏதோ என்ட்ரி விட்டுப் போயிருக்காம். அவங்க கேட்டதை நான் டெலிபோன்ல கிளாரிபை பண்ணிட்டேன். அடுத்த வெள்ளிக்கிழமை நீ இங்கேருந்து ரிலீவ் ஆகறதுக்கு முன்னாடி இந்த குளறுபடியை சரி பண்ணிட சொல்லிட்டேன். இருந்தாலும் நீ ஒரு தரம், இன் பெர்சன், அந்த ஆஃபிசுக்கு போயிட்டு வந்துட்டீன்னா நல்லாயிருக்கும்.”

“உங்க உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் சார். இன்னைக்கு இன்வென்ட்ரீசை முடிச்சுடலாமேன்னு பாக்கறேன்.” சுகன்யா சற்றே தயங்கியவாறு தன் மணிக்கட்டைப் பார்த்தாள். மணி பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது.

“தியாகராஜனை புடிக்கறது ரொம்பக் கஷ்டம்மா. இன்னைக்கு அவன் ஆஃபிசுலத்தான் இருக்கான். நீ ஒரு கையெழுத்து போடணும். அதுக்கு கீழே அவன் தன் கையெழுத்தைக் கிறுக்கி சீல் அடிக்கணும்; சட்டுன்னு உன் பர்சனல் வேலையை முடிச்சுக்கோ.”

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.