கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

“எனக்கு நஷ்டமா; இல்லே உனக்கு நஷ்டமா… செல்வாவுக்கு நஷ்டம்; அந்த வடக்கத்தியான் அவனுக்கு வெள்ளையா நீட்டா ஆப்பு வெச்சிட்டான்.”

டாய்லெட்டில் கேட்ட கட்டைக்குரல் செல்வாவை இரக்கமில்லாமல் சீண்ட ஆரம்பித்தது. கட்டைக் குரலுடன் வாதாடிக்கொண்டிருந்த குரலில் இருந்த நியாயங்கள் அவன் நினைவுக்கு வரவில்லை. செல்வாவின் மனதில் கோபம் மெல்ல மெல்ல தலையெடுக்க ஆரம்பித்தது.

“குட்மார்னிங் மேடம்.”

“வாடாப்பா… நீ குட்மார்னிங்ன்னு சொல்றே. ஆனா இந்த காலைப்பொழுது எனக்கு பேட்மார்னிங் ஆயிடிச்சிடாப்பா..”

சாவித்திரி புலம்ப ஆரம்பித்தாள். தன் மனபாரத்தை இறக்குவதற்கு மிகச்சரியான ஒரு ஆள் தனக்கு கிடைத்துவிட்டானானெ அவள் உள்ளூர மகிழ்ந்தாள்.

“ஏன் டல்லா பேசறீங்க மேடம்? சுகன்யா ஆஃபிசுக்கு வரலியா?” செல்வா தன் காரியத்தில் குறியாக இருந்தான்.

“என்னை எதுவும் கேக்காதடாப்பா. நீ எனக்கு வேண்டப்பட்ட பையனாச்சேன்னு நான் சாதாரணமா எதையாவது சொல்லுவேன். சுகன்யாவுக்கு கோவம் வந்த மாதிரி, உனக்கும் என் மேல எரிச்சல் வரலாம்.
“மரியாதையா பேசுடீ நாயேன்னு என் பல்லு மேலேயே நீயும் போடுவே…’ இந்த வம்பெல்லாம் நேக்கெதுக்கு? சாவித்திரி தன் முகத்தை நொடித்துக்கொண்டாள்.

“நீங்க எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்… வயசுல பெரியவங்க. நீங்க சொல்றதை கேட்டு நான் எதுக்கு கோவப்படப்போறேன்?” செல்வா தலையெழுத்தேயென சாவித்திரியின் எதிரில் உட்கார்ந்தான்.

“செல்வா… என் அருமை உனக்குத் தெரியுதுடா. உன்னை நான்
“டா’ போட்டு பேசறேன். உனக்கு கோவம் வரலே. நம்ம குடும்பங்களுக்கு நடுவுல இருக்கற நெருக்கம் உங்காத்துக்கு வரப்போற அந்த சுகன்யாவுக்கு தெரியலியே?”

“ஹூம்…” செல்வா ஒரு வரட்டுப்புன்னகையை அவளுக்கு வீசினான்.

‘நீ இப்ப உக்காந்துகிட்டு இருக்கற இதே சேர்லதான் பத்து நிமிஷம் முன்னாடி சுகன்யா உக்காந்து இருந்தா. என் வயசுக்காவது அவ கொஞ்சம் மரியாதை குடுத்திருக்கலாம்; ஆனா அவ என்னடான்னா, கால் மேல காலை போட்டுக்கிட்டு, எங்கிட்ட மரியாதையா பேசுடீன்னு தன் குரலை உயர்த்தி கத்தினா…”

“சாரீ… இதை என்னால நம்ப முடியலியே மேடம்?”

“நானும் உன்னை மாதிரி அசந்து போயிட்டேன். ஆடிப்போன நான், உனக்கு என்னடீ ஆச்சுன்னு கேட்டேன்… இவ்வளவுதாண்டாப்பா நடந்திச்சி. என்னை
“டீ” போட்டு பேசாதேன்னு தன் கண்ணை உருட்டிக்கிட்டு ஒரு கூச்சப்போட்டாப்பாரு; இந்த காரிடாரே ஆடிப்போச்சு. ரெண்டு ரூம் தள்ளி உக்காந்து இருக்கற கோபலன் எழுந்து இந்த ரூமுக்கு வந்துட்டாருன்னா பாத்துக்கோயேன்.”

“அப்படியா?”

“அதோட விட்டாளா,
“மைண்ட் யுவர் லாங்வேஜ்ன்னு இங்கிலீஷ்ல என்னை மிரட்டிட்டு, இப்பத்தான் அந்த சுனிலோட எங்கேயோ கிளம்பி நகர்வலம் போயிருக்கா.” கட்டைக்குரல் சொன்னது உண்மைதான். சுகன்யா, சுனிலுடன் ஆஃபீசை விட்டு வெளியில் போயிருக்கிறாள் என்பது உறுதியானதும், செல்வாவின் சுதி மொத்தமாக இறங்கியது.

“சுகன்யா எனக்குத்தெரிஞ்சு அப்டீல்லாம் யாரையும் மரியாதை இல்லாம பேசமாட்டாளே மேடம்?” சுகன்யாவின் மேல் அவனுக்கு நான்கு நாட்களாக கோபம் இருந்தபோதிலும், அவளை சாவித்திரியிடம் விட்டுக்கொடுக்க அவன் மனதின் ஒரு மூலை தயங்கியது.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.