கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

செல்வா, சாவித்திரியின் முகத்தைப்பார்க்காமல், தன் தலையை குனிந்தவாறு, அவள் கொடுத்தக் காஃபியை உறிஞ்சிக் கொண்டிருந்தான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அந்த காஃபி அவனுக்கு மிகவும் தேவையாக இருந்தது. சாவித்திரி செல்வாவை பற்றவைத்துவிட்ட திருப்தியில் தன் காஃபியை
“சர்ரென’ ஓசையெழுப்பி ரசித்து குடிக்க ஆரம்பித்தாள்.

“எது எப்படியிருந்தாலும் சரிடா. சும்மா சொல்லக் கூடாதுடாப்பா. நம்ம சுகன்யா எப்பவுமே ஆஃபிஸ் நேரத்துல, ஆஃபீஸ் வேலையில எந்தக்குறையும் வெச்சதே கிடையாது. எப்பவும் உயிரைக் குடுத்து உழைக்கறவ. டில்லிக்கு போற எடத்துலேயும் அவ நல்லபேர் வாங்கிக்கிட்டுத்தான் திரும்புவா.”

“ம்ம்ம்… எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம்தான்.”

“என்னாச்சுன்னு தெரியலே; இன்னைக்குத்தான் மொதல் தரமா எங்கிட்ட மரியாதையே இல்லாமே நடந்துகிட்டா; இப்பக்கூட அவமேல எனக்கு எந்த வருத்தமும் இல்லே; நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்? பை தி வே… உங்க கல்யாணம் எப்போடாப்பா?” சாவித்திரி இனிக்க இனிக்க பேசினாள்.

“இன்னும் முடிவு பண்ணலே மேடம்.”

“என்னை அந்த கோபாலன் பாண்டிச்சேரிக்கு தூக்கி அடிச்சிட்டான். உன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிட மறந்துடாதே. நான் எங்க இருந்தாலும் கண்டிப்பா வந்துடறேன்? சாவித்திரி தன் உதடுகளை துடைத்துக்கொண்டாள்.
செல்வா தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். தன் கால்களில், உடலில், சுத்தமாக வலுவே இல்லாததைப்போல் அவன் உணர்ந்தான். தன் சீட்டில் உட்கார்ந்தவனால், நேராக நிமிர்ந்து உட்க்கார முடியாமல், உடல் தளர்ந்து நாற்காலியில் சரிந்தான். இமைகளும் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல், அவன் கண்களை மூடின.

டாய்லெட்டுக்குள் கேட்ட கட்டைக்குரல் அவன் மனதை குடைந்து கொண்டிருந்தது. இப்போது கட்டைக்குரலுடன் சாவித்ரியின் குரலும் சேர்ந்து அவன் காதில் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. மண்டை வெடித்துவிடும் போலிருந்தது அவனுக்கு

‘சுகன்யா இன்னொருத்தன் கூட தினமும் காண்டீன்லே, மரத்தடிலே, இங்கே அங்கேன்னு நின்னுக்கிட்டு அரைட்டையடிக்கறதும், அவன்கூட பைக்ல சுத்தறதும் பாக்கறதுக்கு நல்லாவா இருக்கு? உன் பின்னாலத்தானே நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க?’ சாவித்திரியின் உருண்டை முகமும், முட்டை விழிகளும், அவன் கண்களில் வந்து நின்றன.

ச்சை… என்னக்கொடுமைடா இது? எந்த அளவுக்கு சுகன்யாவை நான் உரிமையோட நெருங்கணும்ன்னு நினைச்சு அவ கிட்டப் போகிறேனோ, அந்த அளவுக்கு அவ என்னைவிட்டு விலகிப்போறா. இந்தக்கன்றாவி விளையாட்டை தினம் தினம் என்னால ஆடமுடியாது. இன்னைக்கு இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சே ஆகணும். செல்வா மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.

தன் தோள்பையை திறந்தான். சுகன்யாவுக்காக மல்லிகா கொடுத்து அனுப்பியிருந்த வடைகறி நிரம்பியிருந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து தன் காலடியில் இருந்த குப்பைக்கூடையில் விசிறியடித்தான்.

கெடாவை வெட்டறதுங்கற முடிவுக்கு வந்தாச்சு; வெட்டறதுக்கு முன்னாடி, குளிப்பாட்டி, மாலை வேற போடணுமா? என் அம்மாவுக்கு புத்தியே கிடையாது. சொல்றதை புரிஞ்சிக்கிட்டாத்தானே? கல்யாணமே கேள்வியிலே நிக்குது? மருமவளுக்கு வடைகறி பார்சல் பண்ணிட்டாங்க?

“நல்லத்தம்பி… நான் கொஞ்சம் வெளியிலே போறேன். நம்ம டெபுடி சீஃப் கோபாலன் தேடினா மட்டும் என் மொபைல்லே ஒரு மிஸ் கால் குடுடா..” செல்வா தன் அறையை விட்டு வெளியில் வந்தான்.

“ஓ.கே. சார்..” நல்லதம்பியின் மொபைலில் இப்போது ஹன்ஷிகா தன் மார்புகளை மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டிருந்தாள். கண்களில் காமத்துடன், ஜெயம் ரவி அவளை இடவலமாக துரத்தி துரத்தி அவள் மார்புகளை தடவிக்கொண்டிருந்தான்.

அலுவலகத்தின் நுழைவாயிலிலிருந்து பார்க்கிங்குக்கு பிரியும் கிளைப்பாதையின் வலது புறத்தில் இருக்கும் வேப்பமரத்தின் கீழ் போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்தான் செல்வா. அங்கிருந்து பார்த்தபோது ஆஃபீசுக்குள் நுழையும் இருசக்கர வாகனங்கள் மிகத்தெளிவாக தெரிந்தன. நிமிடங்கள் உருண்டன.

“ச்சே… எவனுக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரவே கூடாது. காலையில தின்னது செரிக்கல. வயிறு கலங்கிப்போயிருக்குது. உயிருக்கு உயிரா என்னைக் காதலிக்கறேன்னு சொல்றவ இன்னொருத்தன் கூட ஜாலியா பைக்லே சுத்தப்போயிருக்கா.

காயற வெயில்லே, வேப்ப மரத்தடியில, மனசுல திருட்டுத்தனத்தோட, என்னை காதலிக்கறேன்னு சொல்றவ எப்பத்திரும்பி வருவான்னு நான் ஒரு பைத்தியக்காரன் மாதிரி தேவுடு காத்துக்கிட்டு இருக்கேன். சுகன்யா அவனை வெகு நேரம் வெய்யிலில் காயவிடவில்லை.

செல்வா மரத்தடிக்கு வந்த பத்தே நிமிடங்களில், கருமை நிறத்தில் பளபளக்கும் புதிய பைக் ஒன்று ஆஃபீசுக்குள் நுழைந்தது. கண்ணில் கருப்புக் கண்ணாடியுடன், சுனில் கம்பீரமாக வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். சுகன்யா அவன் முதுகில் தன்னுடல் இலேசாக உரச அவன் பின்னால் உட்கார்ந்திருந்தாள்.

மரத்தடியில், சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்த செல்வா சட்டென எழுந்து மரத்தின் பின்னால் நகர்ந்தான். தான் உட்கார்ந்த இடத்திலிருந்து வேகமாக எழுந்து மரத்தின் பின்னால் நகரும் செல்வாவை, சுகன்யாவின் கூரிய கண்கள் கவனிக்கத் தவறவில்லை.

செல்வாவின் செயலைக்கண்டதும், சுகன்யாவின் முழு உடலும் நடுங்க ஆரம்பித்தது. சுகன்யாவுக்கு சட்டென குமட்டிக்கொண்டு வந்தது. வாந்தி எடுக்கவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

“சுனீல்… வண்டியை ஒரு செகண்ட் இங்கேயே நிறுத்துங்களேன்.”

“சுகன்யாஜீ… என்னாச்சு..?” பைக் நின்றது.

“நீங்க வண்டியைப் பார்க் பண்ணிட்டு செக்ஷ்னுக்கு போங்க. எனக்கொரு ஒரு சின்ன வேலை பாக்கி இருக்கு. அதை முடிச்சுட்டு நான் வர்றேன்.” சுகன்யா தான் இறங்கிய இடத்திலேயே வெய்யிலில் நின்று கொண்டிருந்தாள்.

“ஓ.கே மேம்.”

சுனில் தன் பைக்கை பார்க் செய்துவிட்டு இங்குமங்கும் பார்க்காமல், நேராக லிஃப்டை நோக்கி நடந்தான். செல்வா மறைவாக நின்றிருந்த அந்த மரத்தடியை நோக்கினாள் சுகன்யா. செல்வா இப்போது தான் முதலில் உட்கார்ந்திருந்த கல் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தான். சுகன்யா விறுவிறுவென அவனை நோக்கி நடந்தாள்.

“செல்வா… இந்த வேகாத வெயில்லே நீங்க இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க?”

தன் முதுகுக்குப் பின்னாலிருந்து வந்த சுகன்யாவின் குரலைக் கேட்டதும், செல்வா திடுக்கிட்டான். காய்ந்து போயிருந்த உதடுகளை தன் நாவால் ஈரப்படுத்திக் கொண்டான். தன்னைச் சுதாரித்துக் கொண்டவனாக, அவள் முகத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தான்.

“யெஸ்… மிஸ் சுகன்யா… என்ன வேணும் உங்களுக்கு?” அவன் குரல் பிசிரடித்தது.

“நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலே?”

“மேடம்… நான் என் மனசுக்குள்ள எரிஞ்சு, வெந்து, சாம்பலா ஆயிருக்கேன். இங்க கொஞ்சம் கூலா காத்து வருதுன்னு யாரோ சொன்னாங்க. அதான் இங்கே உக்காந்துகிட்டு, புது பைக்ல போறவங்க, வர்றவங்களை வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கேன்.” செல்வாவின் குரலில் நக்கல் குடியேறியிருந்தது.

“காத்தாட உக்காறதுலே தப்பில்லே. போறவங்க வர்றவங்களை வேடிக்கைப் பாக்கறதுலயும் தப்புல்லே. ஆனா நான் உக்காந்து வந்த பைக்கைப் பாத்ததும், நீங்க உக்காந்திருந்த இடத்தை விட்டுட்டு எழுந்து ஓடி ஒளியறதுக்கு என்ன அவசியம்ன்னுதான் எனக்கு புரியலே? அதைத்தான் தெரிஞ்சுகிட்டு போவலாம்ன்னு நான் வந்திருக்கேன்.” சுகன்யாவின் குரலிலும் நக்கலுக்கு குறைவில்லை.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.