கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

“உண்மைதான்.”
“சம்பத்துக்கு அவன் அப்பன் சைட்ல ஏகப்பட்ட சொத்து இருக்கு; ஆத்தா சைடுல அதைவிட அதிகமா இருக்கு; வூட்டுக்கு ஒரே புள்ளை அவன்; எல்லாத்துலேயும் உன்னைவிட ஒரு படி அவன் உசரத்துல இருக்கான்; இதான் உன் மனசுல இருக்கற கலக்கம். கரெக்டா நயினா?”
“ம்ம்ம்…” முனகினான் செல்வா.
“அவன் உனக்கு வெச்ச ஆப்புக்கு உங்கிட்ட மன்னிப்பு கேட்டான். சுகன்யாகிட்டவும் மன்னிப்பு கேட்டு, தான் ஒரு ஜெண்டில்மேன்னு காமிச்சுட்டான். உன் லவ்வர் மனசுலே நட்புங்கற பேர்ல ஒரு பர்மெனண்ட் எடத்தைப் புடிச்சுட்டான்? அவன் இண்டேரக்டா உனக்கு இரண்டாவது தரமா ஒரு ஆப்பை திருப்பியும் வெச்சிட்டான்ங்கறதுதான் இப்ப உனக்குள்ள இருக்கற எரிச்சல்? ஆம் ஐ ரைட்?”
“ஓரளவுக்கு நீ சொல்றது சரிதான்..” செல்வா மீண்டும் முணுமுணுத்தான்.
“சுகன்யா ஒரு அழகான பொண்ணு; பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு அவவீட்டுக்கு சம்பந்தம் பண்ண போவத்தான் செய்வாங்க; சம்பத் குடும்பம் அவளுக்கு நெருங்கின சொந்தம். அவங்களும் பொண்ணு கேக்கப் போனாங்க; அவங்க ஒண்ணுக்குள்ள ஓண்ணு; ஒறவுகாரங்க இன்னைக்கு உன் கல்யாண விஷயத்துக்காக சண்டை போட்டுக்குவாங்க. நாளைக்கு கூடிப்பாங்க. சுகன்யாவே இந்த விஷயத்துல ஒண்ணும் பண்ணமுடியாதப்ப, இந்த விஷயத்துல நீ ஏண்டா காண்டாவறே?”
“சுகன்யாவும்
“ஹீ ஹீன்னு’ என் மனசைப்புரிஞ்சுக்காம, என் எதிர்லேயே சம்பத்கிட்ட இளிச்சா எனக்கு எரிச்சல் வராதா?” செல்வா சட்டென தன் மனதிடம் எகிறினான்.
“டேய்… சம்பத் அவளுக்கு அத்தான்டா. அவளுக்கு உறவுடா. அவ அவன்கிட்ட பேசறதை நீ எப்படி தடுக்கமுடியும்? உனக்குப்பிடிக்கலேன்னா நீ அவன்கிட்ட பேசாம பொத்திகிட்டு கிட, அதைவிட்டுட்டு அவ உயிரை ஏண்டா எடுக்கறே?”
“புரியுது… நானும் அதைத்தான் சுகன்யாகிட்ட சொன்னேன். சம்பத்கிட்ட என்னைப்பத்தி பேசாதே; என் தங்கச்சியைப்பத்தி பேசாதே; என் குடும்பத்தைப்பத்தி பேசாதேன்னு சொன்னேன்; நான் சொல்றதை அவ கேட்டாதானே?”
“சுகன்யா, சம்பத்கிட்ட பேசி முடிச்சதும், நீ சொல்ல விரும்பறதை, கொஞ்சம் பொறுமையா, அவளுக்குப் புரியமாதிரி சொல்லியிருக்கலாம்லே?”
“சொல்லியிருக்கலாம்”
“அறிவுகெட்டத்தனமா இந்த பிரச்சனையில அவளை இரண்டு தரம் அழவெச்சிருக்கியே, கொஞ்சமாவது மண்டையில எதாவது இருக்காடா உனக்கு?”
“….”
“இப்ப என்னப்பண்றதா உத்தேசம்?’

“வேற என்னப்பண்றது? அவ டெல்லிக்கு போறதுக்கு முன்னாடீ அவகிட்ட, சாரிடீ சுகு. ப்ளீஸ்… எங்கிட்ட பேசுடீச் செல்லம். ஐ லவ் யூ வெரிமச்ன்னு சொல்லுவேன்.”
ஏன் இப்ப சுகன்யாவுக்கு போன் பண்ணி
“சாரி’ சொன்னா நீ கொறைஞ்சு போயிடுவியா? இன்னும் ஒரு பத்து நாளைக்கு அவ டெல்லிக்கு போறவரைக்கும் அழுதுகிட்டு இருக்கணுமா? நீங்கள்ல்லாம் உருப்படமாட்டீங்கடா; தலைக்கு மேல ஈகோடா உங்களுக்கெல்லாம்.
சுகன்யா லட்டு மாதிரி இருக்கா; உன்னை மாதிரி சம்பாதிக்கறா; ஒரே பொண்ணு; கை நிறைய சொத்தோட உன் வீட்டுக்கு வர்றாளே; அந்த அதுப்புதாண்டா உங்களுக்கு – மனம் அவனை புரட்டி புரட்டி, அடித்து துவைத்து, அலசி அலசி, உதறி கொடியில் போட்டு கிளிப்பையும் மாட்டியது.
இப்ப மணி பன்னண்டு ஆச்சு; என் சுகன்யா தூங்கிட்டு இருப்பா. அவளை நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பலே. காலையில ஆஃபீசுல மொதல் வேலையா அவ கிட்ட மன்னிப்பு கேட்டுடறேன். மனதிடம் வாதிட்டுக் கொண்டிருந்த செல்வா தன்னையும் அறியாமல் தன் கண்களை துடைத்துக்கொண்டான்.
சராசரி மனிதர்கள், தாங்கள் தனிமையில் இருக்கும் சமயங்களில், தங்கள் மனதோடு பட்சபாதமில்லாமல் வாதம் செய்து, தங்களை விமர்சனம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். சிலர் அதில் வெற்றியும் பெறுகிறார்கள். சிலர் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், தாங்கள் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க உள்ளத்தில் உறுதி கொள்ளுகிறார்கள். நடந்த தவற்றை சரி செய்ய முடியுமானால் அதற்கான வழியையும் நிதானமாக தேடுகிறார்கள்.

ஏனோ தெரியவில்லை, இரவுகளில், இருட்டின் மடியில், தாங்கள் எடுக்கும் நியாயமான முடிவுகளைகூட, பகலில், வெளிச்சத்தில் சிலரால் சட்டென அமுலுக்கு கொண்டுவர முடிவதில்லை. செல்வாவும் இதற்கு விதிவிலக்கானவன் இல்லை. மறுநாள் அலுவலகத்தில், முதல் வேலையாக சுகன்யாவை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முதல்நாள் இரவு தான் எடுத்த முடிவை உடனடியாக செயல்படுத்த தயங்கினான் அவன். அவன் தயங்கினானா? அவன் தன் செயலுக்கு வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறானா? அது அவனுக்குமட்டும்தான் தெரியும்.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.