கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

“செல்வா… சம்பத் தான் பண்ணத்தப்புக்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்டதும் எனக்குத் தெரியும். நீ அதை இவ்வளவு சீக்கிரம் மறந்துட்டியே?” அவள் முகத்தில் சட்டென ஒரு புன்னகை எழுந்து மறைந்தது.

“ஓ… அந்த பொறுக்கி நாய்… என்கிட்ட மன்னிப்பு கேட்டதை உன்கிட்ட சொல்லி, உன் பார்வையில, உன் மதிப்புல அவன் பெரிய மனுஷனாயிட்டானா? அவன் உன்கிட்டவும் மன்னிப்பு கேட்டிருக்கலாம். அதனால அவன் உனக்கு என்னை விட முக்கியமா போயிட்டானா? என் உணர்வுகளை விட அவன் உன் கிட்ட சொன்ன கதையும், உன் கிட்ட கேட்ட மன்னிப்பும் உனக்கு பெரிசா தெரியுதா?”

“எனக்கும் உணர்வுகள் இருக்கு செல்வா… அதை நீயும் மதிக்க வேணாமா?”

“என் உணர்வுகளுக்கு நீ முதல்லே மதிப்பு குடு… உனக்கு மதிப்பு தன்னாலே கிடைக்கும்…” செல்வாவின் குரலில் ஆண் எனும் ஆணவம் தெறித்தது.

“செல்வா… சம்பத்தைப்பத்தி உனக்கு தெரிஞ்சதை விட எனக்கு அதிகமாத் தெரியும். யார்தான் தப்பு பண்ணலே? நீ தப்பு பண்ணதேயில்லையா? இனிமே என் அத்தானைப்பத்தி பேசும் போது நீ கொஞ்சம் மரியாதையா பேசினா நல்லாருக்கும்.”

“அயாம் சாரீ மேடம்… நான் என்னத் தப்பு பண்ணேன்? இல்லே பண்றேன்?”

“உன்னை உயிருக்கு உயிரா நேசிக்கற என்னை நீ சந்தேகப்படறியே? என் நடத்தையை நீ சந்தேகப்படறியே? இதுக்கு மேல வேற எந்த தப்பை நீ பண்ணணும்?”

“சுகன்யா… தன் லவ்வருக்குன்னு ஒருத்தன் ஆசை ஆசையா வாங்கிக்கொடுத்த கைக்குட்டையை இன்னொருத்தன் மோந்து பாக்கறது அவனுக்கு சுத்தமா பிடிக்காது? உன் காதலனோட மனஉணர்வை நீ முதல்லே புரிஞ்சுக்கோ…”

“செல்வா..”

“தன் காதலி இன்னொருத்தன் தோள்லே கையை போட்டுக்கிட்ட நிக்கறதை எந்த மானமுள்ள ஆம்பிளையாலும் பொறுத்துக்க முடியாது.” செல்வாவின் முகம் சிவந்து போயிருந்தது.

“செல்வா… அங்கே என்ன நடந்திச்சின்னு முழுசா தெரிஞ்சுக்காம கன்னாபின்னான்னு பேசாதே… சுனில் ஒரு பக்கா ஜெண்டில்மேன். உன் காதலியை, என்னை நீ மட்டமா எடை போடாதே?”

“நீயும் சம்பத்தும் பேசினதை என் காதாலே கேட்டேன். நீயும் சுனிலும் கொஞ்சி விளையாடிக்கிட்டு இருந்ததை என் கண்ணாலப் பாத்தேன்…”

சுகன்யாவின் செல் ஒலித்தது. சம்பத் லைனில் வந்து கொண்டிருந்தான். சுகன்யாவும் தன் மனதுக்குள் ஒரு முடிவு எடுத்துவிட்டாள். பதட்டமில்லாமல் செல்லை ஆன் செய்தாள்.

“சொல்லுங்க அத்தான்… நேத்தே உங்களுக்கு போன் பண்ண நினைச்சேன். முடியலே. நேத்து ராத்திரியெல்லாம் தூங்கவேயில்லை நான்.

“நானும்தான் தூங்கலே சுகன்யா” சம்பத்தின் குரலில் இருந்த துக்கம் அவள் காதில் இடியாக இறங்கியது.

“அத்தான்… ஃப்ர்ஸ்ட் ஆஃப் ஆல், அக்சஃப்ட் மை அன் கண்டீஷனல் அப்பாலஜீஸ். நேத்து செல்வா எக்குத்தப்பா பேசினது உங்க காதுல விழுந்திருக்கலாம். அதுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.”

“சுகன்யா… திரும்பவும் சொல்றேன்… என்னைப்பத்தி எவன் கிட்டவும் நீ பேசவேண்டிய அவசியமில்லே.” செல்வா அடித்தொண்டையில் கூவினான்.

“அத்தான்… நான் ரெண்டு செகண்ட்ல உங்களை நான் கூப்பிடறேன்.. பிளீஸ்…” சுகன்யா லைனை கட் செய்தாள்.

“செல்வா இது ஆஃபீஸ். ஒரு பொது இடத்துல நாம உக்காந்து இருக்கோம். நான் ஒரு கண்ணியமான பொம்பளை. இது உன் வீடு இல்லே. நாகரீகமில்லாமே நாலு பேரு என்னைத் திரும்பி பாக்கற கத்தாதே? பிஹேவ் லைக் எ ஜெண்டில்மேன்.”

சுகன்யாவின் கண்களில் பெண்மைக்கே உரிய பிடிவாதம் அவள் முகத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. குரல் தீர்க்கமாக வந்தது. இதுவரை இல்லாத ஒரு வெறுப்பு அவள் கண்களில் குடியேறியிருந்தது.

“சுகன்யா… திஸ் இஸ் த எண்ட் ஆஃப் இட்… யூ கோ டு ஹெல்… அயாம் லீஸ்ட் பாதர்ட் அபவுட் யூ அண்ட்… அண்ட்…

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.