கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

“மிஸ் சுகன்யா… நீங்க புது பைக்ல, புது ஃப்ரெண்ட்டோட, ஜாலி ரைட் போயிட்டு வர்றீங்க. இந்த நேரத்துல, உங்களையோ, உங்க புது நண்பரையோ நான் அனாவசியமா சங்கடப்படுத்த விரும்பலை. அதனாலதான் சட்டுன்னு எழுந்து ஓடி ஒளிஞ்சிக்கிட்டேன்.”

“யார் மனசுல திருட்டுத்தனம் இருக்கோ அவங்கதான் சங்கடப்படணும்… என் மனசுல திருட்டுத்தனம் எதுவும் இல்லே.” சுகன்யாவின் உதடுகள் முறுக்கிகொண்டன.

“சரி… என் மனசுல திருட்டுத்தனம் இருக்கு… நான் ஒத்துக்கறேன். இப்ப என்னப் பண்றது அதுக்கு?”

“உங்க காதலியை வேவு பாக்கற அளவுக்கு உங்க தரம் தாழ்ந்து போச்சா?” சுகன்யாவின் கண்களில் வெறுப்பு, அதிர்ச்சி, ஏமாற்றம் என பலவிதமான உணர்ச்சிகள் குவிந்திருந்தன.

“காதலியோட தரம் தாழ்ந்தா, அவ காதலனோட தரமும் தாழ்ந்துதானே போகும்?”

“செல்வா… நீங்க என்னை உங்க வார்த்தையாலேயே கொன்னு போட்டுடணும்ன்னு நினைக்கறீங்களா? அப்படி உங்க மனசுல என்னதான் இருக்கு? வெளிப்படையா சொல்லித் தொலைச்சுடுங்களேன்.”

“மிஸ் சுகன்யா… உங்க கிட்ட ஒரு பத்து நிமிஷம் நான் பேசணும்.. உங்களால என்கூட வரமுடியுமா?”

“இப்ப எதுக்கு மிஸ் சுகன்யா.. மிஸ் சுகன்யான்னு பேசி என்னை அன்னியப்படுத்தறீங்க?”

“எங்கிட்ட மரியாதையா பேசுடீன்னு இன்னைக்கு காலையிலத்தான் நீங்க ஒரு ஆஃபிசருக்கு நோட்டீஸ் குடுத்ததா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடீ எனக்குத் தெரிய வந்தது. அதனால நான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கேன். அவ்வளவுதான்.” செல்வாவின் வார்த்தைகளில் விஷம் வழிந்து கொண்டிருந்தது.

“Recap of the story”.

“மிஸ் சுகன்யா… உங்க கிட்ட ஒரு பத்து நிமிஷம் நான் பேசணும்.. உங்களால என்கூட வரமுடியுமா?”

“இப்ப எதுக்கு மிஸ் சுகன்யா.. மிஸ் சுகன்யான்னு பேசி என்னை அன்னியப்படுத்தறீங்க?”

“எங்கிட்ட மரியாதையா பேசுடீன்னு இன்னைக்கு காலையிலத்தான் நீங்க ஒரு ஆஃபிசருக்கு நோட்டீஸ் குடுத்ததா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடீ எனக்குத் தெரிய வந்தது. அதனால நான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருக்கேன். அவ்வளவுதான்.” செல்வாவின் வார்த்தைகளில் விஷம் வழிந்து கொண்டிருந்தது.

மூன்று மாத பயிற்சிக்காக சுகன்யா டெல்லிக்கு வந்து பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. எப்போதும் தன்னிடம் சிடுசிடுத்துக் கொண்டிருந்த சாவித்திரியின் முகத்தையும், சென்னை அலுவலகத்தில் பார்த்த மனிதர்களையே திரும்ப திரும்ப பார்க்க வேண்டியிராமல், எதற்கும் உதவாத பைல்களை கட்டிக்கொண்டு மாரடிக்காமல், வந்த இடத்தில் புது முகங்களைப் பார்ப்பதில், புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதில், இறுகிப்போயிருந்த சுகன்யாவின் மனம் மெல்ல மெல்ல இலேசாகத் தொடங்கியது.

காலை பத்து மணிக்கு பயிற்சி வகுப்புக்குள் நுழைந்தால், மூச்சுவிட நேரமில்லாமல் தொடர்ந்து அடுத்த ஆறு மணி நேரத்துக்கு ஒருவர் மாறி ஒருவர் கொடுத்த லெக்சர்களை கேட்டு குறிப்பெடுப்பதில் அவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை.

மாலை ஆறு மணியளவில் விடுதியறைக்கு திரும்பி, முகம் கழுவிக்கொண்டு, தினமும் முனீர்கா, ராமகிருஷ்ணபுரம், சரோஜினி நகர், ஐ.என்.ஏ. என ஜாலியாக புது இடங்களில் அனுராதாவுடன் சுத்துவது வித்தியாசமான அனுபவமாக அவளுக்கு இருந்தது.

ஜாலியாக சுற்றிவிட்டு வந்ததும், பல மாநிலங்களிலிருந்து அவளைப்போல பயிற்சிக்கு வந்திருப்பவர்களுடன், ஆண் பெண் என்ற வித்தியாசமில்லாமல், கேலிச்சிரிப்புடன், கிண்டல் பேச்சுடன், அரட்டையடித்துக்கொண்டு, விடுதியில் பரிமாறப்படும் சூடான, ரொட்டி, தால், சாவல் என இரவு உணவை, உண்டுவிட்டு, ஹாயாக படுக்கையில் படுத்து உருள்வதும் அவளுக்கு வெகு சுகமாக இருந்தது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு சமையல் செய்யும் வேலையும், பாத்திரங்களை துலக்கி கழுவும் வேலையும் சுத்தமாக இல்லை என்று நினைக்கும் போதே அவள் மனம் உற்சாகத்தில் சிறகடித்து பறந்தது.

டெல்லி ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் மிக மிக அருமையான நூலகம் இருந்தது. அவள் வெகு நாட்களாக படிக்கவேண்டும் என்று நினைத்திருந்த புத்தகங்கள் அழகான கண்ணாடி அலமாரிகளில் நிரம்பி வழிந்தன. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, இரவு உணவுக்குப்பின், தனக்கு கிடைக்கும் நேரத்தை சுகன்யா மீண்டும் படிப்பதில் செலவிட ஆரம்பித்தாள்.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.