கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

“செல்வா… என்னைத் தப்பா நினக்காதே? இன்னைக்கு இருக்கற சுகன்யா நீ நினைக்கற நம்ம பழைய சுகன்யா இல்லே; அவ்வளவுதான் நான் சொல்லுவேன்..” இவ சொல்ற இந்த பாய்ண்ட் மட்டும் ரொம்பவே சரிதான். சாவித்திரி பேசியதும் அவன் மனதில் சட்டென புகுந்து கொண்டது.

“சுகன்யா எனக்கு இண்டர்காம்ல போன் பண்ணாளாம். நல்லத்தம்பி சொன்னான்; அதான் என்ன விஷயம்ன்னு கேட்டுட்டு போவலாம்ன்னு வந்தேன். எப்ப திரும்பி வருவான்னு உங்களுக்கு எதாவது தெரியுமா?” தன் முகவாயை அசிரத்தையாக சொறிந்து கொண்டே செல்வா பேசினான்.

“நம்ம சுகன்யாவை, அந்த ஊர் பேர் தெரியாத வடக்கத்தியான் கூட, இந்த வேவாத வெய்யில்லே, அக்கவுண்ட்ஸ் ஆஃபீசுக்கு அனுப்பவேண்டிய அவசியம் இந்த கோபலனுக்கு என்னன்னு நான் கேக்கறேன்?” சாவித்ரி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க ஆசைப்பட்டாள்.

“ம்ம்ம்…”

“இப்பத்தான் அஞ்சு நிமிஷம் முன்னாடீ சுகன்யா அந்த தடியன் சுனிலோட போனா; எப்ப திரும்பி வருவாளோ? அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். உன் கல்யாணம் எதிர்லே நிக்குது. உன் அம்மா மல்லிகா என்னடான்னா, தன் மாட்டுப்பொண்ணோட அழகை பாத்து பாத்து மனசுக்குள்ளவே பூரிச்சு போய் நிக்கறா? பெத்த மனசு அவளை என்னக்குறை சொல்றது? நீ சந்தோஷமா இருக்கணுமேன்னு அவ நினைக்கறா? அதுல என்னத்தப்பு? பொம்பளைக்கு அழகோட கூடவே கொஞ்சம் குணமும், அடக்கமும் வேணும்டா…”

“க்க்குஹூம்” செல்வாவுக்கு முனகுவதை தவிர வேறென்ன சொல்லுவது என தெரியவில்லை.

“கழுத்துல தாலிகட்டிக்கப் போற இந்த நேரத்துல, சுகன்யா இன்னொருத்தன் கூட தினமும் காண்டீன்லே, மரத்தடிலே, இங்கே அங்கேன்னு நின்னுக்கிட்டு அரைட்டையடிக்கறதும், அவன்கூட பைக்ல இங்கே அங்கேன்னு அலையறதும், பாக்கறதுக்கு நல்லாவா இருக்கு? உன் பின்னாலத்தானே நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க?”

“மேடம்…”

“உன் ஆத்துக்கு மாட்டுப்பொண்ணா வரப்போற சுகன்யாவும், நான் எதையாவது ஜாடை மாடையா சொன்னா புரிஞ்சிக்கிட்டாத்தானே? என் மேல கோவப்படறா.” செல்வாவின் முகம் விளக்கெண்ணைய் குடித்தவனின் முகத்தைப்போல் அஷ்டகோணலாகியது. அவன் தவிப்பைக்கண்டு சாவித்திரி உள்ளுக்குள் மகிழ்ந்தாள்.

அடியே சுகன்யா… மைண்ட் யுவர் லாங்வேஜ்ன்னு என்னையாடீ இங்கிலீஷுல மிரட்டறே? எனக்கு என்ன உரிமை இருக்குன்னா கேட்டே? உன் இடத்துல இருக்கவேண்டியது என் பொண்ணுடீ. உன் கழுத்துல விழப்போற தாலி என் பொண்ணு கழுத்துல விழவேண்டியதுடீ. ஒருவிதத்துல அய்யோ பாவம், ஏதோ சின்னஞ்சிறுசுங்க ஒருத்தரை ஒருத்தர் ஆசைப்பட்டுடீங்களேன்னு, செல்வாவை நான் உனக்கு விட்டுக்குடுத்தேண்டீ? என்னையா நீ சீண்டிப்பாக்கறே?”

“உன் வயசு என்னா? என் வயசு என்னா? எனக்கே இங்கீலிஷ்ல பேசறது எப்படீன்னு நீ கிளாஸ் எடுக்கறியா? நான் அருவாளை எடுத்து வீசினேன்னா, வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான்டீ. என் லாங்வேஜ் என்னான்னு இன்னிக்கு பொழுது சாயறதுக்குள்ளே உனக்குத் தெரிஞ்சு போயிடும்டீ.” சாவித்திரி ஒரு கப்பில் காஃபியை உற்றி செல்வாவின் முன் நகர்த்தினாள். செல்வாவின் கருத்த முகத்தை பார்க்க பார்க்க அவள் மனதில் தெம்பு கிளம்பியது.

“செல்வா.. ஒரு விஷயம் என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா..”

“என்ன மேடம்.?”

“இந்த ரெண்டு நாளாத்தான் பாக்கறேன்…
“அத்தான்… அத்தான்னு’ சுகன்யா உன்னை லஞ்சு டயம்லே ஆசையா கூப்பிட்டு செல்லுல பேசிகிட்டு இருக்காளே… அதைத்தான் சொல்றேன்?”

இது என்ன புதுக்கதை? நான் சுகன்யாகிட்ட பேசியே நாலு நாளாச்சு; இவ எந்த அத்தானை சொல்றா? சாவித்திரி சொல்ல வந்ததை சொல்லி முடிக்கட்டுமென செல்வா குறுக்கில் பேசவில்லை.

“அந்த காலத்துல கல்யாணம் ஆன புதுசுலே நான் கூட என் ஆத்துக்காரரை
“அத்தான்னுதான்’ கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன்.”

சாவித்திரி ஏகத்திற்கு முகம் சிவந்து வெட்கப்பட்டாள். சுகன்யாவும் சம்பத்தும் லஞ்ச் டயமில் தினமும் பேசிக்கொள்ளுகிறார்கள் என்ற விஷயம் செல்வாவுக்கு அப்போதுதான் புரிந்தது. விஷயம் புரிந்ததும், செல்வா தன் மனதுக்குள் கோபம், வெறுப்பு, எரிச்சல், ஏமாற்றம் என பலவித உணர்ச்சிகளால் எரிந்து, தன் முகம் சிவந்து கொண்டிருந்தான்.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.