கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

இவனும் தவிக்கறான்? இவளையும் தவிக்கவுடறான்? சுனிலின் மனதில் அவர்கள் இருவரின் பேரிலும் பரிதாபம் எழுந்தது. காதலிக்கறவன் அத்தனை பேரும் உருப்படப்போறது இல்லே; அவன் உதடுகளில் ஒரு மந்தகாச புன்னகை மலர்ந்தது.

சுனில் மெல்ல தன் தொண்டையை செருமினான். சுகன்யா தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள். சுகன்யா தன் தலையை நிமிர்த்தி தன்னைப்பார்ப்பாள் என ஒரு பத்து வினாடிகள் அவன் பொறுமையாக இருந்தான். அவள் தன் தலையை உயர்த்தவில்லை.

“சுகன்யா…” தன் மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தவனாக சுனில் சுகன்யாவிடம் நேராகவே பேசத்தொடங்கினான்.

சுனில் அவளை பொதுவாக
“மேம்’ என்றுதான் விளிப்பான். தங்கள் அறையை விட்டு கேண்டீனிலோ, அல்லது மற்ற இடங்களில் பேசும்போது,
“சுகன்யாஜீ’ என அவள் பெயருடன்
“ஜீ” யைச்சேர்த்து ஒரு புன்னகையுடன் அழைப்பான். இன்னைக்கு என்னாச்சு இவனுக்கு? ரொம்ப அன்பா, உரிமையா என் பேரைச் சொல்லி கூப்பிடறானே?

“ம்ம்ம்… சொல்லுங்க சுனீல்.” சுகன்யா ஒரு நொடி தன் புருவங்களை சுருக்கி விரித்தாள்.

“ஓ மை காட்” இன்னைக்கு சுகன்யாதான் எவ்வளவு அழகா இருக்கா? சுனில் தன் மனதுக்குள் வியந்து போனான்.

“சுகன்யா… உங்க பர்சனல் விஷயத்துல அனாவசியமா தலையிடறனேன்னு என்னைத் தப்பா நினைக்காதீங்க.” சொல்லிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தான். சாவித்திரி ஆஃபீசுக்கு இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

“சுகன்யா… உங்களை என்னோட நல்ல ஃப்ரெண்டா நினைச்சிக்கிட்டு இருக்கேன். அந்த உரிமையிலேதான் இப்ப நான் பேசறேன். நாலு நாளைக்கு முன்னாடி நீங்க விளையாட்ட என் தோள்லே தட்டினீங்க. திரும்பவும் நீங்க தட்டப்போறீங்களோன்னு, சட்டுன்னு நானும் விளையாட்டாத்தான் உங்கக்கையை புடிச்சிட்டேன். அந்த நேரத்துல என் மனசுக்குள்ள வேற எந்த தவறான எண்ணமும் இல்லே. அதை செல்வா வேறவிதமா புரிஞ்சிக்கிட்டாருன்னு நினைக்கிறேன். அதனால உங்க நடுவுல ஏற்கனவே இருந்த பிரச்சனை இன்னும் அதிகமாயிடுச்சுன்னு எனக்கு தோணுது.”

“ஆமாம் சுனில்…” சுகன்யா முணுமுணுத்தாள்.

“நம்ம வாழ்க்கையில நாம எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருந்தாலும், சிலநேரங்கள்லே, எதிர்பாராமல், சில விரும்பதகாத நிகழ்ச்சிகளும் நடந்துடுது. இந்த மாதிரி விஷயங்கள் சுத்தமா நம்ம கட்டுப்பாட்டுலேயே இல்லைன்னு எனக்குத்தோணுது.”

“உண்மைதான் சுனீல்..” அவன் கண்களை நேராக பார்த்து பேசினாள் சுகன்யா.

“செல்வா உங்களை ரொம்ப டீப்பா லவ் பண்றார். உங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சி. கூடிய சீக்கிரத்துல உங்க கல்யாணம் நடக்கபோவுதுன்னும் எனக்குத்தெரியும்.”

“ப்ப்ச்ச்ச்… ஐ டோண்ட் நோ… சுனில். என்ன நடக்குமோ? எனக்கு மனசுக்குள்ள ஒரே பயமா இருக்கு.”

“கவலைப்படாதீங்க சுகன்யா. உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும். நான் ஒரு ஆண். ஒரு சராசரி ஆணோட மனசைப்பத்தி எனக்கும் தெரியும்லே?”

“சுனில்… நீங்க என்ன சொல்ல நினைக்கறீங்க?”

“உங்க செல்வா… உங்கக்கிட்ட, தன்னோட உரிமையை, அக்கறையை, அன்பை அவர் மட்டும்தான் காட்டணும்ன்னு நினைக்கறார். இதை நீங்க தயவு செய்து புரிஞ்சிக்கணும்.”

“நீங்க சொல்றது எனக்கு நல்லாப்புரியுது சுனில். ஆனா செல்வாகிட்ட ரொம்பவே அதிகமா இந்த பொஸஸிவ்னெஸ் இருக்கு. ஆனா, எதுவுமே அளவுக்கு அதிகமா போனா விஷமாயிடும் இல்லையா? இப்ப அதுதான் எங்க நடுவுல நடந்துகிட்டு இருக்கு.” சுகன்யாவின் குரல் கிசுகிசுப்பாக வந்தது.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.