கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

சுகன்யாவோட அழகை, இனிமையான பேச்சை, நட்பை அடுத்தவர்களுடன் எதற்காக நான் பகிர்ந்து கொள்ள வேண்டும்? அவளை எனக்கென நிச்சயம் செய்தபின், அவள் என் விருப்பப்படி நடக்க வேண்டுமென நான் நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்? இந்த மிகச்சிறிய விஷயத்தை சுகன்யா ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாள். உன்னாலும் இதை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? செல்வா இலக்கண சுத்தமாக தன் மனதிடம் வாதிட்டுக் கொண்டிருந்தான்.

மனசுக்கு ஏது இலக்கணம். அது அதன் போக்கில் அவனுக்கு பதில் கொடுத்தது.

டேய்… செல்வா… நீ நினைக்கறதெல்லாம் சரிதான்டா. ஒரு சின்ன விஷயத்தை புரிஞ்சுக்கோ? சுனில் யாருடா? சுகன்யாவோட கலீக். வேலை நேரத்துல அவ அவன் பேசித்தானே ஆகணும்? சுனிலோட, சுகன்யா சிரிச்சி பேசிட்டா, உன்னைவிட அவன் சுகன்யாவுக்கு முக்கியமாயிடுவானா? எதுக்குடா நீ கேனத்தனமா காலையில சுகன்யாகிட்ட கன்னாபின்னான்னு உளறினே?

“சுகன்யாவுக்கு என் மேல உண்மையான ஆசையிருக்குன்னா, அவ நான் சொல்றதை ஏன் கேக்கக்கூடாது? எனக்கு பிடிக்காதவங்ககிட்ட அவ ஏன் பேசணும்? பழகணும்? நான் அவளை எவ்வள லவ் பண்றேன்னு உனக்குத் தெரியாதா? இருபத்து நாலு மணி நேரமும் நான் அவளைத்தான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன்.”

“நிறுத்துடா உன் பீலீங்கை. அந்த பொண்ணுகிட்ட நீ இப்படியெல்லாம் பூச்சிக்காட்டலாம்; ஆனா உன் பருப்பு எங்கிட்ட வேவாது. உன் பேச்சைக் கேக்கற ஒரு அடிமைதான் உனக்கு வேணும்ன்னா, வேலைக்குப்போற ஒரு பொண்ணை நீ ஏண்டா காதலிச்சே?” அவன் மனம் அவனை கூறு போட ஆரம்பித்தது.

“ரெண்டு பேரு சம்பாதிச்சாத்தான் இப்ப காலத்தை தள்ளமுடியும்?”

“நீ ஆம்பிளைதானே? உன்னை நம்பி வர்றவளுக்கு நீதானேடா சோறு போடணும்? உங்கப்பனுக்கு இருந்த தைரியம் உனக்கு இருக்காடா? உங்கம்மாவை சவுகரியமா வீட்டுல உக்காரவெச்சி அவரு குடும்பம் நடத்தலே? உன்னைப்படிக்க வெக்கலே, உன் தங்கச்சியைப் படிக்க வெக்கலே; வீடு கட்டலே; கார் வாங்கலே; வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே ஏண்டா இப்படி இன்செக்யூர்டா ஃபீல் பண்றீங்க…?”

“அவரு காலம் வேற; இப்ப இருக்கற காலம் வேற; சுகன்யாவை சந்தோஷமா என்னால வெச்சுக்கமுடியாதுன்னுல்லாம் ஒண்ணும் இல்லே; நாட்டுல எல்லாப்பயலும் வேலை செய்யற பொண்ணைத்தான் சைட் அடிக்கறான். கல்யாணம் பண்ணிக்கறான். எல்லாத்துக்கும் மேல பொண்ணுங்களுக்கு வீட்டுல உக்கார புடிக்கலை. ஊரோட நானும் ஒத்து வாழவேணமா?”

‘அப்ப வேலைக்கு போற பொம்பளைங்க, தங்களோட வாய்க்கு பூட்டு போட்டுகிட்டு சாவியை புருஷன் கிட்டவா குடுத்துட்டுப் போறாளுங்க?”

“ஓ.கே. ஓ.கே… இந்த லாஜிக்கெல்லாம் எங்களுக்கும் தெரியும்…”

செல்வா தன் மனதிடம் சிணுங்கினான். இங்கும் அங்கும் நழுவிக்கொண்டிருந்தான். சரிடா.. உன்னைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும். கொஞ்சம் பொத்திகிட்டு நான் சொல்றதை கேளு. அவனுடைய மனம் அடுத்த அம்பை அவன் மேல் எறிந்தது.

சம்பத்தோட சுகன்யா பேசறப்ப, அவ மொகத்துல ஒரு மலர்ச்சி, சந்தோஷம் வருது. இதை உன்னால சகிச்சிக்க முடியலே? நான் சொல்றது சரியா?”

“ம்ம்ம்..”

“சம்பத் கருப்புதான்; ஆனா அவன் மூஞ்சியில ஒரு கவர்ச்சியும், வசீகரமும் இருக்கு…”
“நீ என்ன சொல்றே? எனக்குப்புரியலே.”
“சம்பத்து… உன்னைவிட செமை பர்சானாலிட்டின்னு சொல்றேன்; சூப்பரா பாடியை வெச்சிருக்கான்; நல்ல வேலையில இருக்கான்; உன்னைவிட அதிகம் சம்பாதிக்கறான்; இத்தல்லாம் பாக்கும்போது உனக்கு உன் மனசுக்குள்ள ஒரு பயம். ஒரு கலக்கம்.”
“அந்த நாய்கிட்ட எனக்கென்ன மசுரு பயம். கலக்கம்?”
“சம்பத்தோட அப்பன் பெரிய போஸ்ட்லேருந்து ரிட்டயர் ஆன ஆளு. அவன் குடும்பத்துக்கு சுவாமி மலைல நல்ல செல்வாக்கு. ஏன்? உன் சுகன்யாவோட அப்பாவே அந்தாளுக்கிட்ட கையைகட்டிக்கிட்டு மரியாதையா பேசினதை நிச்சயதார்த்த பங்கஷன்லே உன் கண்ணால நீ பாக்கலையா?”

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.