கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

“வாட் யூ மீன் மேம்? வாட் நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங் டு மீ?” சுகன்யா விருட்டென சீறினாள்.

சாவித்திரி சற்று அதிர்ந்துதான் போனாள். சுகன்யாவின் அந்த திடீர் சீறலை, கோபத்தை சாவித்திரி எள்ளளவும் எதிர்பார்க்கவேயில்லை. தான் பேசிய வார்த்தைகளில் இருந்த எகத்தாளம், கடுப்பு, எரிச்சல், எல்லாமே அவளுக்கு புரிந்திருந்தது. ஆனால் தன் காரியத்துக்கான பலனை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை என்பதுதான் இங்கு பரிதாபமான உண்மை.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற தன்னுடைய வழக்கப்படி, எல்லோரிடமும் கிண்டலாக பேசுவது போல், தன் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாத, அடக்க ஒடுக்கமான சுகன்யாவிடம், உண்மையான ஒரு அரசு ஊழியரிடம், அலுவலகத்துக்குள், அன்று அனாவசியமாக பேசிவிட்டதை நினைத்து ஒரு கணம் அவள் தன் மனதுக்குள் வருந்தினாள். அவள் முழுமையாக தன் தவறை உணர்ந்துகொள்வதற்குள், சுகன்யா தன் ஆயுதத்தை அவள் மேல் எய்துவிட்டாள். ஆயுதமும் சாவித்ரியை அவளுடைய பலவீனமான இடத்தில் தாக்கி காயப்படுத்திவிட்டது.

“ஏண்டீ சுகன்யா நீ நல்லப்பொண்ணாச்சே? நீ எதுக்குடீ இப்ப எரிச்சல் படறே? உடம்பு கிடம்பு சரியில்லையா உனக்கு? ஆத்துலேருந்து பில்டர் காஃபி கொண்டு வந்திருக்கேன். நீ வேணா ஒரு முழுங்கு குடிக்கறீயா?” தன் அதிர்ச்சியை சமாளித்துக்கொண்டு, குரலில் சிறிது கரிசனத்தைப் பூசிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

“எனக்கு உடம்பெல்லாம் சரியாத்தான் இருக்கு; உங்க பிளட் பிரஷரை நீங்க கொஞ்சம் கன்ட்ரோல்ல வெச்சிக்குங்க. இல்லேன்னா எல்லாருக்கும் கஷ்டமாப் போயிடும். வார்த்தைக்கு வார்த்தை என்னை உங்க பொண்ணுன்னு சொல்லிக்கறீங்களே?” சுகன்யாவுக்கு லேசாக மூச்சிறைக்க ஆரம்பித்தது.

“ஆமாம்டீ… இப்பவும் சொல்றேன். உன்னை நான் என் பொண்ணாத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.” சாவித்திரிக்கு மெல்ல பிரஷர் ஏறிக்கொண்டிருந்தது. தலை சுற்ற ஆரம்பித்தது.

“நீ எங்கே வேணா போ… யார் கூட வேணா போ, எப்ப வேணா திரும்பி வான்னு”, வெள்ளிக்கிழமை அதுவுமா நாக்குல நரம்பில்லாம, வாய்க்கு வந்தபடி என்னைப் பாத்து பேசறீங்களே, இப்படி பேசறதுக்கு உங்களுக்கு வெக்கமாயில்லே? ஒரு அம்மா ஒரு பொண்ணுகிட்ட இப்படித்தான் பேசுவாங்களா?”

சுகன்யாவின் முகம் கோபத்தில் அடியோடு சிவந்து போயிருந்தது. தன்னுடைய உடல் நடுங்குவதை அவள் உணர்ந்த போதிலும், சாவித்திரியை இன்று ஒரு பிடி பிடித்துவிட வேண்டும் என அவள் முடிவெடுத்து விட்டாள். அவளா முடிவெடுத்தாள்? முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்தது. அவள் செய்த ஒரே தவறு; அவள் தன் நிதானத்தை இழந்ததுதான்.

“சுகன்யா… நிறுத்துடி. அப்டீ நான் என்னடீ சொல்லிட்டேன் இப்ப? சும்மா நீ பாட்டுக்கு மேல மேல பேசிகிட்டே போறே? நான் பேசினது உனக்குத் தப்புன்னு பட்டா, அயாம் சாரீ” சாவித்திரி பதிலுக்கு பேசவேண்டுமென நினைத்து பேசினாளேத் தவிர அவள் மனசுக்குள் சிறிய பயம் முளைத்திருந்தது.

காரிடாரில் போய்க்கொண்டிருந்த கோபாலன் காதில், சுகன்யாவின் கோபமான குரல் விழுந்தது. சாவித்திரியின் நைச்சியமான பேச்சும் அவர் காதில் விழுந்தது. சுகன்யாவா இப்படி கூச்சல் போடறா? அவரால் தன் காதுகளை நம்பவே முடியவில்லை. சட்டென அந்த அறைக்குள் நுழைந்த தன் மேலதிகாரியை சுகன்யா கவனிக்கவில்லை.

“மேடம்.. மைண்ட் யூர் லேங்வேஜ். இனிமே எங்கிட்ட நீங்க கொஞ்சம் மரியாதையா பேசினா நல்லாயிருக்கும். என்னை போடீ.. வாடீன்னு பேசறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லே? உங்களுக்கும் உங்க ஆஃபிசருக்கும் நடுவுல ஆயிரம் பிரச்சனை இருக்கலாம்; அந்த எரிச்சலையெல்லாம் நீங்க என்கிட்ட காட்டவேண்டிய அவசியமில்லே.” சுகன்யா உறுமிகொண்டே தான் உட்கார்ந்திருந்த சேரை வேகமாக பின்புறம் உதறிவிட்டு எழுந்தாள்.

“ப்ளீஸ்… சுகன்யா… கூல்டவுன்… கூல்டவுன்… யூ ப்ளீஸ் கேரி ஆன் வாட் ஐ டோல்ட் யூ… மிஸ்டர் சுனில் யூ ப்ளீஸ் கோ வித் சுகன்யா. மிஸஸ் சாவித்ரி யூ கம் டு மை ரூம்.” கோபலான் மிடுக்காக திரும்பி நடந்தார்.

செல்வா காலையில் எழுந்தபோது மணி ஒன்பதரை ஆகியிருந்தது. அவனும் கடந்த ஒரு வாரமாக இரவில் சரியாக தூங்கியிருக்கவில்லை. அரையும் குறையுமாக குளித்தேன் என பெயர் பண்ணிவிட்டு, கையில் கிடைத்த பேண்ட் சட்டையை உடம்பில் மாட்டிக்கொண்டு, மல்லிகா கொடுத்த இட்லியையும், வடைகறியையும் கிச்சனில் நின்றவாறே அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, ஆஃபிசுக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.