கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

நானும் ரொம்பப் பொறுமையா இருக்கேன். இந்த நாய் தன் மனசுக்குள்ள என்ன நினைச்சுக்கிட்டு இந்த மாதிரி என்னை தப்பு தப்பா பேசறா? இவளும் ரெண்டு பொண்ணைப் பெத்தவதானே? இவ பொண்ணுங்களை யாராவது இப்படி இழிவா பேசினா, இவ சும்மா இருப்பாளா? சுகன்யா மனதுக்குள் குமைந்தாள். ராகு தன் வேலை சுலபமாக முடிந்துவிட்ட மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டிருந்தான்.
எதைச்செய்யவேண்டாமோ, எதைச்செய்யக்கூடாதோ, அதை செய்ய உற்சாகப்படுத்துவதே ராகுவின் வேலை. கிரகங்கள் மனிதனின் இயல்பான குணங்களை நேரான, அல்லது தவறான வழியில் தூண்டி அவர்களை ஒரு இக்கட்டான நிலையில் தள்ளி சோதிக்கின்றன. புத்தியுள்ளவன் இந்த சோதனையில் வெற்றி பெறுகிறான். பொறுமையில்லாதவன், துன்பத்தை அனுபவிக்கிறான். கிரகங்கள் துன்பத்தையோ, இன்பத்தையோ தாங்களாக தருவதில்லை. மனிதனே, இன்பத்தையும், துன்பத்தையும் நோக்கி, தான் செய்யும் காரியங்களால், அதன் பலன்களை அடைவதற்கு ஓடுகிறான்.

கண்ணு… சுகன்யா… கொஞ்சநாளைக்கு, வெள்ளிக்கிழமையிலே, ராகு காலத்துலே, யார்கிட்டவும் தவறா எதையும் பேசிடாதே. யாராவது உன்னை தப்பாவே பேசினாலும், வேணும்னே சண்டைக்கு இழுத்தாலும், உன் பொறுமையை நீ இழந்துடாதே – தாத்தா சிவதாணு அவளிடம் சொல்லியிருந்தார். சுகன்யாவுக்கு அன்று வெள்ளிகிழமை என்பது மறந்து போயிருந்தது.

“நீ எங்க வேணா போ… யார்கூட வேணா போ…” இதுக்கு என்ன அர்த்தம்..? இவ எனக்கு ஆஃபிசுல சீனியர்… இவ என்னை விட வயசுல மூத்தவ… அதுக்காக நாக்குல நரம்பில்லாம எதை வேணா என் கிட்ட பேசிடலாமா? சுகன்யாவால், அன்று தனக்கு எழுந்த கடுமையான எரிச்சலை அடக்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் மேலும் பேசுவதற்கு ராகு அவளை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான்.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.