கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

“உங்க கல்யாணம் முடிஞ்சிட்டா இதெல்லாம் சரியாகிடும் சுகன்யா. நான் என்ன சொல்றேன்னா, இந்த முறை, ப்ளீஸ்… எனக்காக நீங்க கொஞ்சம் விட்டுக்குடுங்க. சும்மா தயங்கிக்கிட்டே இருக்காம, செல்வாவுக்கு நீங்களே ஒரு தரம் போன் பண்ணி
“ஹலோ சொல்லுங்க. ஹவ் ஆர் யூன்னு கேளுங்க.’ எனக்கு நம்பிக்கையிருக்கு, அவர் நிச்சயமா உங்களை அக்கவுண்ட்ஸ் ஆஃபீசுக்கு அழைச்சிட்டுப்போவார்.” நிதானமாக பேசிய சுனில், தன் தலைமுடியை கோதி பின்னால் தள்ளிக்கொண்டான்.

“தேங்க்யூ வெரிமச் சுனில். ஒரு உண்மையான ஃப்ரெண்டா நீங்க என்னை கய்ட் பண்ணியிருகீங்க. லெட் மி சின்சியர்லி டிரை யுவர் அட்வைஸ்.” சுகன்யா எந்த தயக்கமும் இல்லாமல், செல்வாவின் இண்டர்காம் நம்பரை அழுத்த ஆரம்பித்தாள்.

“மேடம், செல்வா சார் இன்னும் ஆஃபிசுக்கு வரலீங்க. அவர் செல்லுல டிரை பண்ணுங்க. ஆமாம். நீங்க யார் பேசறீங்க?” செல்வாவின் அட்டெண்டண்ட் நல்லத்தம்பி பதில் கொடுத்தான்.

“நல்லத்தம்பி… நான் சுகன்யா பேசறேன்…” சுகன்யா போனை கட் பண்ணினாள். சாவித்ரி அறைக்குள் நுழைந்து தன் சீட்டில் உட்கார்ந்தாள்.

“சுகன்யா, உங்களை நான் இன்னைக்கு சிரிச்ச முகத்துல பாக்கணும்ன்னு நினைச்சேன். பட் அயாம் அன்லக்கி.” சுனில் மென்மையாக சிரித்தான்.
சுகன்யா, சுனிலுக்கு பதிலேதும் சொல்லவில்லை. தன் மணிக்கட்டைத் திருப்பி, வாட்சில் நேரத்தைப் பார்த்தாள். மணி பத்தே முக்கால் ஆகிக்கொண்டிருந்தது. சுகன்யா வெள்ளிக்கிழமையன்று பிறந்தவள்.

சுகன்யாவின் ஜாதகத்தில் ராகு தன்னுடைய எதிரியின் கட்டத்தில் உட்கார்ந்திருந்தான். சுகன்யாவுக்கு ராகுவின் புக்தி நடந்துகொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை, காலை பத்தரை மணியிலிருந்து ராகு தன் ஆதிக்கத்தை தொடங்குகிறான். கோச்சாரத்திலும் ராகு சுகன்யாவின், சந்திரனிலிருந்து எட்டாம் வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தான்.

சுகன்யாவுக்கு தான் கற்றுக்கொடுக்க வேண்டிய
“பொறுமை” என்னும் பாடத்தை, நாவடக்கம் என்னும் அரிய உண்மையை, அவளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய நேரம் நெருங்கியதை உணர்ந்து, ராகு தன் வேலையை ஆரம்பித்தான்.

சுகன்யாவின் முகத்தையே மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தான் சுனில். ஒரு அசாதாரணமான அமைதி அவள் முகத்தில் குடியேறியிருந்தது. சாவித்திரியின் முன்னால் சென்று அமர்ந்தாள் அவள்.

“குட்மார்னிங் மேம். கோபாலன் சார், என்னை அக்கவுண்ட்ஸ் ஆஃபிசுக்கு போயிட்டு வர சொன்னார்.”

“ஆமாம்டீயம்மா. நேத்து போன் வந்திச்சி. ஒரு வாய் தண்ணியை குடிச்சுட்டு, நானே சொல்லணும்ன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ரெண்டு அஃபீஷியல் லெட்டர்ஸ் குடுக்கறேன். அதுகளையும் பர்சனலா நீ தியாகராஜன்கிட்டே குடுத்துடறீயா?” சாவித்திரி வாட்டர் பாட்டிலிலிருந்து நேரடியாக தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தாள்.

“ஷ்யூர் மேடம்.”

“அடுத்த வாரம் நான் ரிலீவ் ஆகறேன்.” சுகன்யா தன் கன்னத்தை தடவிக்கொண்டாள்.

“ம்ம்ம்…” சாவித்திரி டவலால் தன் நெற்றி வியர்வையைத் நிதானமாகத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

“அக்கவுண்ட்ஸ் பீப்பிளை மிஸ்டர் சுனிலுக்கு இன்ட்ரொட்யூஸ் பண்ணணும். ஸோ… இவரை என்கூட அழைச்சிட்டுப் போகலாம்ன்னு நினைக்கறேன். நீங்க பர்மிஷன் குடுக்கணும்.” சுகன்யா மெல்லிய குரலில் பேசினாள்.

“பேஷா அழைச்சிண்டு போடீயம்மா. நீ எங்க வேணா போ. யார்கூட வேணா போ. எப்ப வேணா திரும்பி வா. இதுல நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? கோபாலன்தான் இந்த ஆஃபீசுக்கு அடுத்த சீப். அவனோட ஆசீர்வாதம் உனக்கு பூரணமா இருக்கும் போது, நீ என்ன வேணா பண்ணலாம்? இதுக்கெல்லாம் என் பர்மிஷன் உனக்கெதுக்கு?” அவள் குரலில் அளவுக்கு அதிகமான நக்கல் இருந்தது.

சாவித்திரிக்கு கூடியவிரைவில் மாற்றல் உத்திரவு வரப்போகிறது என்ற தகவலை அன்று காலைதான் கோபாலனின் பர்சனல் அஸிஸ்டெண்ட் அவளுக்கு சொல்லியிருந்தான். கோபாலன், தன்னை தன் டிவிஷனில் நிறுத்திக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தெரிந்ததிலிருந்து, அவளுக்கு அவர் மேல், காலையிலிருந்தே, அர்த்தமில்லாமல் ஒரு எரிச்சல் எழுந்து கொண்டிருந்தது. எதையும் யோசிக்காமல், நேரம் காலம் பார்க்காமல், தனக்கு கோபாலன் மீது இருந்த எரிச்சலை, கோபத்தை, வெறுப்பை, அவள் ஏற்கனவே மனஉளைச்சலில் இருந்த சுகன்யாவின் மீது திருப்பிவிட்டாள்.

அடுத்தவர்களின் உணர்வுகளை கொஞ்சமும் புரிந்துகொள்ளாமல், தன் எதிரில் இருப்பவர்களை, கிள்ளுக்கீரையாக எடுத்தெறிந்து பேசும் சாவித்திரியின் வழக்கத்தைப்பற்றி சுகன்யாவுக்கு நன்றாகத்தெரியும். சாவித்திரியின் கிறுக்குத்தனமான, கிண்டல் பேச்சுக்களுக்கு, சுகன்யா எப்போதுமே மதிப்பு கொடுத்ததில்லை. ஆனால் அன்று சுகன்யா இருந்த நிலையில், எரிச்சலும், கோபமும், அவள் அடிவயிற்றிலிருந்து பற்றிக்கொண்டு கிளம்பின. அவள் தன் பொறுமையை சட்டென இழந்தாள்.

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.