கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 52 8

செல்வா தன் கையிலிருந்த பாதி வடையை வீசி தூரமாக எறிந்தான். வாயில் மென்றுகொண்டிருந்த பாதி வடையையும்
“தூ..” வென துப்பினான். கோபம் விஷத்தைப்போல் அவன் தலைக்கேறிக் கொண்டிருந்தது. அவன் பேச நினைத்ததை பேசமுடியாமல், அவன் சொல்லவந்ததை முழுவதுமாக சொல்ல முடியாமல், விருட்டென எழுந்து வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

சுகன்யாவின் கண்கள் பனித்தன.
சம்பத்… அப்ப நாங்க கிளம்பறோம். ட்ரெய்னுக்கு நேரமாவுதே, எழுந்திருமா ராணீ?” நல்லசிவம் தன் பையை தோளில் மாட்டிக்கொண்டார்.

“அப்பா… ஸ்டேஷன் வரைக்கும் நானும் வர்றேன். உங்களை சீ ஆஃப் அனுப்பிட்டு அங்கேருந்தே என் ஆஃபீசுக்கு போயிடறேன்..” சம்பத் தன் தாயின் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டான்.

ஸ்டேஷனுக்கு போகும் வழியில் ராணி தன் மகனிடம் ஏதும் பேசவில்லை. அவன் இடது கையை தன் கைகளில் எடுத்துக்கொண்டு மெல்ல வருடிக் கொண்டேயிருந்தாள். டாக்ஸியில் மவுனமாகவே அவர்கள் பயணம் செய்தனர். ட்ரெயின் பிளாட்பாரத்துக்குள் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

“ஏண்டா… நேத்து நீ சுகன்யாகிட்ட மன்னிப்பு கேட்டியாமே? என்னடா விஷயம்?”

“அப்பா சொன்னாரா?” சம்பத் மெல்லியக்குரலில் சிரிக்க ஆரம்பித்தான்.

“கண்ணு… என்னடா நடக்குது உங்களுக்குள்ளே?”

“அம்மா… என்னை நம்புமா. நேத்து முதல் தடவையா சுகன்யாவுக்கு நான் போன் பண்ணப்ப செல்வா அங்கே இருந்திருக்கான். நான் சுகன்யாவோட பேசினது அவனுக்கு பிடிக்காம, அவன் ஏதோ அவகிட்ட கடுப்பா சொன்னான்.”

“அவனைப் பொறுத்தவரைக்கும் அவன் பண்ணது சரிதானேடா? நீ ஏண்டா இந்த மாதிரி கண்டவன் முன்னால அவமானப்படறே?” ராணியின் முகம் தொங்கிப்போனது.

“விடும்மா… உன் காதலுக்காக நீ எவ்வளவு அவமானத்தை பொறுத்துக்கிட்டே?” சம்பத் சந்தோஷமாக சிரித்தான்.”

“உன்னோடது ஒருதலைக்காதல்டா. இது எந்தவிதத்துலேயும் சரியில்லே? யாருக்கும் பிரயோசனமில்லே.” நல்லசிவம் பெருமூச்சுவிட்டார்.

“சம்பத்து…”

“சொல்லும்மா…” சம்பத் தன் தாயை நெருங்கி நின்றுகொண்டான்.

“அப்ப இந்த பொண்ணு வீட்டுக்கு நான் என்ன பதில் சொல்றது?”

“அம்மா… என்னை தொந்தரவு பண்ணாதேன்னு உனக்கு நான் எத்தனை தடவை சொல்லணும்?”

“என் மனசு கேக்கலடா ராஜா. நீ சரீன்னு சொல்லுவேன்னு ரொம்ப நம்பிக்கையோட வந்தேன்டா…” ராணி ட்ரெயினில் ஏறி உட்கார்ந்தாள். ட்ரெயின் கிளம்பும் வரை சம்பத் தன் தாயின் அருகில் உட்கார்ந்துகொண்டு அவள் கரத்தை அன்புடன் வருடிக்கொண்டிருந்தான்.
“சுகன்யா… திஸ் இஸ் த எண்ட் ஆஃப் இட்… யூ கோ டு ஹெல்… அயாம் லீஸ்ட் பாதர்ட் அபவுட் யூ அண்ட்… அண்ட்…
“ என தன் வாய் குளற கோபமாக தன் காதலியிடம் உளறிவிட்டு வந்த செல்வா, அன்று இரவு தூக்கம் வராமல், தன் வீட்டு மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக உலவிக்கொண்டிருந்தான்.

டேய் செல்வா… இந்த நிலைமை உனக்கு தேவையாடா? நீயெல்லாம் படிச்சவன். நேத்துதான், மீனாவால, ஒரு வாரத்துக்கு அப்புறம் சுகன்யா மூஞ்சியில சிரிப்பையே பாக்க முடிஞ்சுது. ஒரே நாள்லே இரக்கமேயில்லாமா, அவளை திரும்பவும் அழ வெச்சிட்டியேடா பாவி? நீயும் நிம்மதியா இருக்காதே? உன் பிகரையும் நிம்மதியா இருக்க விடாதே? உனக்கெல்லாம் ஒரு காதல் தேவைதானாடா? அவன் மனது அவனை இரக்கமில்லாமல் நக்கலடித்துக்கொண்டிருந்தது.

சுகன்யா என் வாழ்க்கைத்துணையாக ஆகப்போகிறவள். எனக்கு மனைவியாக வரப்போகும் பெண்ணுடைய மனசு, உடம்பு, அழகு எல்லாமே எனக்குத்தானே சொந்தம். என் ஒருவனுக்குத்தானே அவளிடம் முழுமையான உரிமையும், அதிகாரமும் இருக்கமுடியும்?

5 Comments

  1. சூப்பர்.கதை interesting a இருக்கு.செல்வாவும் சுகன்யாவும் பிரிஞ்சுருவாங்கன்னு தெரியும்.அதை இவ்வளவு சீக்கிரம் முடிப்பீங்கனு எதிர்பார்க்கலை.அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்…

  2. Intha kathai yappa than end agum roomba pottu boor adikuringa pls

  3. What happened for today’s episode?

  4. Intha kadhayoda source enga iruku

Comments are closed.