ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

இடதுகையால் துப்பாக்கியை எடுத்துச் சுட முடிந்த நிலையிலும் தன்னால் இனியும் விஸ்வாவின் அணியை தோற்கடிக்க முடியாது என்று உணர்ந்து தன் இடதுகையை சரணடைவது போல் உயர்த்தினான்.

விஸ்வாவுடன் வந்து இருந்த ஜவான்கள் இருவருக்கும் குண்டடி பட்டு ஒருவன் இறந்து இருந்தான். மற்றவன் செயலற்று இருந்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை. தன் உடன் வந்து இருந்த எஞ்சினியர் சேதன் ராய் மட்டும் சிறு காயத்துடன் தப்பி இருந்தான்.

அந்த பாகிஸ்தான் ஆஃபீஸரை போர்க் கைதியாக அழைத்துச் செல்ல வாய்ப்பு இருந்தும், இறந்த சக வீரனின் சடலத்தையும் குண்டடி பட்டுச் செயலற்று இருந்தவனையும் மட்டுமே எடுத்துச் செல்ல அவர்களது ஜீப்பில் இடம் இருந்தது. சரணடைந்த பாகிஸ்தானிய ஆஃபீசரை அங்கேயே விட்டுச் செல்லலாம் என்று விஸ்வா முதலில் முடிவெடுத்தான்

சேதன் ராய், “If we leave them, and particularly if we leave him alive here then Paki troops will come to know that we came in this route (இறந்து கிடந்த எதிரி வீரர்களின் சடலத்தையும் அந்த ஆஃபீஸரை உயிருடனும் இங்கு விட்டுச் சென்றால் எதிரிகளுக்கு நாம் தேர்ந்து எடுத்து இருக்கும் பாதை தெரிய வரும்)”

விஸ்வா, “சோ, என்ன செய்யலாம்”

சேதன் ராய், “அந்த ஆஃபீஸரையும் போட்டுத் தள்ளிட்டு அவங்க எல்லார் சடலத்தையும் அவங்க ஜீப்பில் ஏத்தி இந்த மலைச் சரிவில் உருட்டி விட்டுடலாம். பாகிஸ்தான் ரோந்துப் படையோ, ஹெலிகாப்டரோ இந்த இடத்தில் இருந்து குறைஞ்சது அஞ்சு கிலோமீட்டர் தள்ளித்தான் அவங்களை கண்டு பிடிப்பாங்க”

அடிபட்டுக் கிடந்த எதிரி ஆஃபீஸரை சுடுவதைக் கோழைத்தனம் என்று நினைத்தாலும் அவனது ராணுவப் பயிற்சி வேறு வழி இல்லை என்று உணர்த்த வீழ்ந்து கிடந்தவனை துப்பாக்கியுடன் நெருங்கினன். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆஃபீஸர் இடது கையால் தன் துப்பாக்கி எடுத்துச் சுட அவனது குண்டு விஸ்வாவின் கால் முட்டியைத் துளைத்தது. மறுகணம் விஸ்வா அவனது இடது கையை தன் குண்டுகளால் செயலிழக்க வைத்தான்.

இரு கைகளும் செயலிழந்து இடுப்பிலும் அடிபட்டு வீழ்ந்து கிடந்த அந்தப் பாகிஸ்தானிய ஆஃபீஸர், “ப்ளீஸ், I heard what you both spoke. நான் எதுவும் சொல்ல மாட்டேன். என் பேரண்ட்ஸுக்கு நான் ஒரே மகன். என் மேல் உயிரையே வெச்சு இருக்கும் என் மனைவி இப்போ கர்பமா இருக்கா. Please don’t kill me”

அதைக் கேட்ட விஸ்வா செயலற்று உறைந்தான் …

சேதன் ராய், “ஸாலா, உனக்குப் பொறக்கப் போற குழந்தையை உன் பேரண்ட்ஸ் பாத்துக்கட்டும். போட்டுத் தள்ளு விஸ்வா”

வேறு வழி இல்லை என்று உணர்ந்து தன் கைத் துப்பாக்கியால் எதிரி ஆஃபீஸரின் நெற்றியைக் குறி பார்த்தான். கெஞ்சிக் கதறும் கண்களோடு அந்த ஆஃபீஸர் உயிரிழந்தான்.

திறந்தபடி இறந்து கிடந்த அந்த ஆஃபீஸரின் கண்கள் விஸ்வாவின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது …
விஸ்வாவின் உடலில் பட்ட காயங்களுக்கான சிகிச்சை முடிந்த பிறகும் அந்த ஆஃபீஸரின் இறுதிக் கெஞ்சலும் அவனது கண்களும் ஏற்படுத்திய மனக் காயம் ஆறவில்லை.

விஸ்வா ராணுவ மனோதத்துவ மருத்துவர் டாக்டர்-கர்னல் மதுசூதனனிடம் சிகிச்சைக்குச் சென்றான்.

பல நாட்கள் கவுன்ஸிலிங்க் மூலம் டாக்டர் மதுசூனனன் விஸ்வாவின் மனக் காயத்தை ஆற்றினார். அவரது அணுகு முறையும் அவர் வாதங்களும் வாழ்வின் எதார்தங்களை அவர் அவனுக்கு உணர்த்திய விதமும் விஸ்வா மிகவும் கவர்ந்தது. சிகிச்சை முடிந்த பிறகு அவருக்கு மிகவும் கடமைப் பட்டு இருப்பதாக உணர்ந்தான்.