ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

விஸ்வா, “அப்ப நீங்க தனியா இருக்கீங்களா?”

டாக்டர் மதுசூதன், “ம்ம் ஹூம், வருஷத்தில் ஆறு மாசம் யூ.எஸ்ஸில் இருக்கும் என் மகன் வீட்டிலும் மகள் வீட்டிலும். மீதி ஆறு மாசம் இந்தியாவில். முக்காவாசி நாட்கள் பெங்களூர். சில நாட்கள் புனே”

விஸ்வா, “ஐ வெரி சாரி சார். You must be missing her a lot”

டாக்டர் மதுசூதன், “Of course I miss her” என்றவர் சில கணங்கள் தன் சோகத்தில் மௌனம் சாதித்த பிறகு, “மிஸ் பண்ணறதுன்னா என்ன விஸ்வா?”

விஸ்வா, “You know, அவங்க கூட இருப்பதை. எப்பவும் ரொம்ப ஃப்ரென்ட்லியா இருப்பாங்க. உங்ககூட ஜாலியா பழகறதைப் பார்த்து இருக்கேன். உங்களுக்கு நல்ல மனைவியா இருந்த அளவுக்கு நல்ல சினேகிதியாவும் இருந்து இருப்பாங்கன்னு நினைக்கறேன்”

டாக்டர் மதுசூதன், “நல்ல மனைவின்னா என்ன? எப்படி பாருவை நல்ல மனைவின்னு சொல்லறே?”

விஸ்வா என்ன சொல்வது என்று அறியாமல் விழித்தான் …

டாக்டர் மதுசூதன், “நான் அவளை நல்ல மனைவி இல்லைன்னு சொல்லலை. எங்க ரெண்டு பேருக்கு இடையே நிறைய கருத்து வேறு பாடுகள் இருந்தது. என் தேவைகள் … ” என்று இழுத்தவர் தொடர்ந்து, “வெளியில். நான் வெளியில் சொல்ல வெட்கப் படும் ஒரு விஷயத்தை சொல்லறேன். During one phase of our marriage she was an ice queen”

விஸ்வா, “What do you mean?”

டாக்டர் மதுசூதன், “She was frigid. செக்ஸில் அவளுக்கு சுத்தமா இன்டரெஸ்ட் போயிடுச்சு. ஆனா, அதே கால கட்டத்தில் எனக்கு நிறைய தேவைப் பட்டது. ரொம்ப வெறுப்பா இருக்கும். நல்ல வேளையா நான் செய்யும் வேலையில் இந்த மாதிரி பல கேஸ்களைப் பார்க்கும் அனுபவம். நானே என் நிலமையை அவளுக்கு எடுத்துச் சொன்னேன். அப்பத்தான் அவளும் தன் நிலமையை எடுத்துச் சொன்னா. அவளோட உணர்வுகளை நானும் என் உணர்வுகளை அவளும் புரிஞ்சுட்ட பிறகுதான் எங்க மண வாழ்க்கை மறுபடி ஒரு அளவுக்கு சரியாச்சு. ஆனா அது முழுசா சரியாகும் போது எங்க ரெண்டு பேருக்கும் ஐம்பதுக்கும் மேல் வயசாயிடுச்சு! சோ, நல்ல மனைவி, நல்ல கணவன் அப்படிங்கறது எல்லாம் நாமே வரையறுத்துக்கறது”

விஸ்வா மௌனம் காத்தான்.

டாக்டர் மதுசூதன், “Sorry for the digression. சரி, நான் பாருவுக்கு உனக்கு மன வேதனை எதுவும் இல்லாமல் பார்த்துக்கறேன்னு வாக்குக் கொடுத்து இருக்கேன். சோ, உன் நீடித்த சந்தோஷம் தான் என் முக்கியக் குறிக்கோள். அதைப் புரிஞ்சுக்கோ. என்ன? என்னை உனக்கு ஹெல்ப் பண்ண அனுமதி கொடுப்பியா?”