ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

தொடர்ந்த சுமதி, “உன் குழந்தைங்க ரெண்டும் எந்த அளவுக்கு வனிதாகிட்டே ஒட்டிட்டு இருக்காங்கன்னு எனக்கு தெரியும். உனக்கும் அது தெரியும். அதே மாதிரி அதுங்க ரெண்டும் எந்த அளவுக்கு க்ளோஸ்-ன்னும் உனக்கு தெரியும். இருந்தாலும் நீ வசியை வனிதாகிட்டே இருந்தும் விக்கிகிட்டே இருந்தும் பிரிச்சுக் கூட்டிட்டு போகலாம்ன்னு யோசிக்க தொடங்கினே. அந்த யோசனைக்கு தொடக்கத்திலேயே ஒரு முற்றுப் புள்ளி வைக்கணும்-ன்னு தான் வனிதாகிட்டே சொன்னேன். ஒரு மனைவியா அவ செஞ்சது ரொம்ப பெரிய தப்பு. ஆனா ஒரு தாயா அவ இதுவரைக்கும் எந்த தப்பும் செய்யலை. அதே மாதிரி அந்த சின்னஞ்சிறுசுக ஒரு தப்பும் செய்யலை. உங்க ரெண்டு பேருக்கு நடுவில் இருக்கும் பிரச்சனையில் அதுங்களை பிரிப்பது சரியா? நீயே சொல்லு”

சுமதியின் வார்த்தைகள் அவனை கணைகளாக தாக்க கண் கலங்கிய விஸ்வா தலை குனிந்தான்.

பல நாட்களுக்குப் பிறகு ….

டாக்டர் அமுதா தொடர்ந்து பல நாட்கள் விஸ்வாவுடன் தொடர்பு கொள்ள முயன்றும் விஸ்வா அவரிடம் பேச மறுத்து இருந்தான்.

ஃபேமிலி கோர்ட் நீதிபதியிடம் தனது கவுன்சிலிங்க் பற்றிய அறிக்கையை கொடுக்க இன்னும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு இருந்தார்.

டாக்டர் ராமை அழைத்து விசாரிக்க ராமிடமும் விஸ்வா பேசுவது இல்லை என்று அறிந்து கொண்டார்.

முதலில் வனிதா-விஸ்வா விவாகரத்தை எப்படியாவுது தடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்த டாக்டர் அமுதாவின் மனத்தில் இப்போது அது முடியுமா என்ற ஐயம் வேரூன்றத் தொடங்கி இருந்தது …

“மேடம் Armed Forced Medical College, Pune (புனே ராணுவ மருத்துவக் கல்லூரியில்) இருந்து உங்களுக்கு கால். கனெக்ட் பண்ணட்டுமா?” என்று அவரது காரியதரிசி சொன்னதும் சற்று துணுக்குற்றார்

“ஓ.கே கனெக்ட் பண்ணும்மா” என்ற சில நொடிகளில் எதிர்முனையில் இருந்து கணீர் என்று ஒரு குரல்

“Am I speaking to Doctor Amutha?”

“எஸ். டாக்டர் அமுதா ஹியர்”

“டாக்டர், நான் கர்னல் மதுசூதன் நானும் ஒரு டாக்டர், சைக்கியாட்ரிஸ்ட்”

“ஓ! உங்களைப் பத்தி நிறைய கேள்விப் பட்டு இருக்கேன் டாக்டர். Please tell me what can I do for you?”

“மெட்ராஸ் ஸாப்பர்ஸ் சைக்கியாட்ரிஸ்ட்கிட்டே இருந்து விஸ்வாவின் கேஸ் ஃபைலை நீங்க கேட்டு வாங்கிட்டுப் போனீங்கன்னு கேள்விப் பட்டேன். அது விஷயமா உங்களை மீட் பண்ணனும்”

“பட், நான் இந்த விஷயமா பூனே வர முடியுமான்னு தெரியலை. என்ன விஷயம்ன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்”