ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

டாக்டர் அமுதா, “வாவ், நான் அந்தக் கோணத்தில் யோசிக்கலை. நான் அவளோடு பேசறேன். But, ஜாயிண்ட் கவுன்ஸிலிங்க் … ” என்று இழுத்தார்

டாக்டர் மதுசூதன், “என் வேலை அனேகமா முழுக்க முழுக்க விஸ்வாவுடன் தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் நீங்க ஹாண்டில் பண்ணி இருக்கீங்க. They both are comfortable meeting you together. அதனால ஜாயிண்ட் கவுன்ஸிலிங்கை நீங்களே ஹாண்டில் பண்ணிட்டு எனக்கு அப்டேட் கொடுங்க. ஓ.கே?”

டாக்டர் அமுதா, “ஓ.கே டாக்டர். இது என் கேஸ் ஃபைல். நீங்க கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணினா ஒரு ஃபுல் காப்பி எடுத்துக் கொடுக்கறேன்”

டாக்டர் மதுசூதன், “ஃபுல் காப்பி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போ எனக்கு அதைக் கொடுங்க. நான் படிச்சுட்டு அவசியமான பகுதிகளை மட்டும் காப்பி எடுத்துட்டு உங்களுக்கு நாளை காலை அனுப்பறேன்.”

இருவரும் விடை பெற்றனர்.

PMLஇன் CEO ஆக பதவி ஏற்று இருந்த விஸ்வாவின் மேஜையில் அவனுக்கு என்று ஒதுக்கப் பட்டு இருந்த தனித் தொலைபேசி சிணுங்கியது …

விஸ்வா, “ஹெல்லோ, விஸ்வா ஹியர்” என்றவனுக்கு எதிர்முனையில் இருந்து அவன் தன் வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாத குரல், “ஹாய் விஸ்வா! எப்படி இருக்கே?” பதிலளிக்க அவன் மனம் பல வருடங்கள் பின்னோக்கிச் சென்றது …

மே-1999இல் சிறிதாகத் தொடங்கிய சண்டை கார்கில் போராக மாறும் தருணம். காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையின் பதாலிக் பகுதியை பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளுடன் ஆக்கிரமித்து இருந்தது.

இந்திய ராணுவம் கார்கில் செக்டருக்கு பல பகுதிகளில் இருந்தும் துருப்புக்களை சேர்த்து ஒரு ஆர்மி கமாண்ட் செண்டர் அமைத்து இருந்தது. விஸ்வா அந்தக் கமாண்ட் செண்டரில் சேர்ந்து சில நாட்களே அகி இருந்தன.

அந்த இடத்தில் இருந்து பல இந்தியப் படைகள் செல்லக் கூடிய பாதையை ஹெலிகாப்டர் மூலம் வேவு பார்த்த பிறகு அப்பாதை பீரங்கிகளை எடுத்துச் செல்ல ஏற்றதா எனக் கணிக்கும் படி விஸ்வாவுக்கு ஆணை வந்தது.

பாம்பே சாப்பர்ஸ்ஸில் எஞ்சினியரான சேத்தன் ராய் மற்றும் இரு வீரர்களுடன் பின் பகுதியில் மெஷின் கன் பொருத்தப் பட்ட ஜீப்பில் அவன் சென்ற போது அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு இடத்தில் ஒரு ஆஃபீஸர் மற்றும் மூன்று வீரர்கள் கொண்ட ஒரு பாகிஸ்தானிய ராணுவ அணியை அவர்கள் நேருக்கு நேர் எதிர்கொண்டனர்.

அடுத்து நடந்த பத்து நிமிடத் துப்பாக்கிச் சூட்டில் விஸ்வாவின் துரிதச் செயலாலும் அவன் ஆணைகளுக்கு ஏற்ப செயல் பட்ட உடன் வந்து இருந்த இந்திய வீரர்களாலும் பாகிஸ்தானிய வீரர்கள் மூவரும் உயிரிழந்து வீழ்ந்து கிடந்தனர். அந்த ஆஃபீஸர் வலது கையிலும் இடுப்பிலும் குண்டு துளைத்து வீழ்ந்தான்.