ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

டாக்டர் மதுசூதன், “ஹோட்டலுக்குப் போய் சாப்பிடறதை உதாரணமா எடுத்துக்கலாம். வீட்டில் சமைப்பதை விட ருசியா இருக்குன்னும் ஹோட்டலுக்குப் போகலாம். வீட்டில் அன்னைக்கு சமையல் இல்லைங்கறதுக்காகவும் ஹோட்டலுக்குப் போகலாம் இல்லையா?”

விஸ்வா மௌனம் காத்தான்.

டாக்டர் மதுசூதன், “ஹோட்டலுக்குப் போய் சாப்பிடறது தப்புன்னு வெச்சுட்டாலும். எதுக்காக ஹோட்டலுக்குப் போனான்னு எதற்கு நாமே ஒண்ணை அனுமானம் பண்ணிட்டு அந்த அனுமானத்தினால் நம்மை நாமே வருத்திக்கணும்?”

சில நிமிடங்கள் விஸ்வா மௌனம் காத்தான் …

டாக்டர் மதுசூதன், “உன் மனசில் என்னவோ இருக்கு. உனக்கு சொல்ல விருப்பம்ன்னா சொல்லு”

விஸ்வா, “ஆனா, அவளுக்கு விட்டில் சரியான சாப்பாடு கிடைக்கலைன்னு நான் இப்போ புரிஞ்சுட்டேன். I ignored her needs. I am ashamed of myself” என்று தலை குனிந்தான்.

டாக்டர் மதுசூதன் மறுபடி அவன் தொளைப் பிடித்து அணைத்தபடி, “அதனாலதான் டைவர்ஸ் கேஸை மூவ் பண்ணாம இருக்கியா?”

விஸ்வா கண்களில் நீர் வழிய மௌனமாகத் தலையசைத்தான் ….

டாக்டர் மதுசூதன், “விஸ்வா, நீயே I have ignored her needs, அவளது தேவைகளை பொருட்படுத்தாமல் இருந்ததா சொன்னே. Needs, தேவைகள், முக்கியமா பெண்களின் தேவைகளைப் பத்தி முக்கியமா புரிஞ்சுக்க வேண்டிய விஷயம் ஒண்ணு” என்றவர் தொடர்ந்து

“செக்ஸில் மன மாற காதலிக்கறவனுடன் வரும் சுகம் வேறு யாருடனும் வராது. மனமார்ந்த காதல் வரும் போது மட்டும்தான் செக்ஸ் உணர்வு வரும்ன்னு சொல்றது, அப்படித்தான் வரணும்ன்னு எதிர்பார்ப்பது பத்தாம் பசலித்தனம். We have been brought up like that. செக்ஸ் உணர்வு உடலைச் சார்ந்தது. அது எப்போ வேணும்ன்னா வரலாம். ஆனா, அதே செக்ஸில் காதலும் அன்னியோன்னியமும் கலக்கும் போது வரும் சுகம். அதுக்கு எதுவும் ஈடாகாது.”

விஸ்வா மௌனம் சாதிக்க சில நிமிடங்கள் அந்த அறையில் மௌனம் நிலவியது …

டாக்டர் மதுசூதன், “சரி, உனக்கு கோவம் எதுக்கு வந்ததுன்னு பார்க்கலாமா?”

விஸ்வா, “அவங்க செஞ்ச நம்பிக்கை துரோகத்தினால்”

டாக்டர் மதுசூதன், “நம்பிக்கை துரோகம். அது சந்திரசேகருக்கு நிச்சயம் பொறுந்தும். But Vanitha?”

விஸ்வா, “அவ செஞ்சதும் நம்பிக்கை துரோகம் தான். God, I feel betrayed. In fact அதுக்கும் மேல. எனக்கு மட்டும்ன்னு இருந்த உடம்பை அவ வேற ஒருத்தனுக்குக் கொடுத்தா. எங்க மேரேஜின் புனிதத்தையும் நான் அவ மேல வெச்சு இருந்த லவ்வையும் அசிங்கப் படுத்திட்டா.”

டாக்டர் மதுசூதன், “உன் பொருளை மற்றவன் எடுத்துட்டானேன்னு கோவம். உன்னுடையதை மத்தவனுக்குக் கொடுத்துட்டாளேன்னு கோவம் இல்லையா?”