ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

தர்ம சங்கடத்துடன் நெளிந்த விஸ்வா ஆதங்கம் ததும்பும் குரலில், “என்ன நியூஸ்?”

டாக்டர் மதுசூதன், “அவன் செத்துப் போன விவரம் கேட்டதும் அவனோட மனைவி ஓன்னு கதிறி மயங்கி விழுந்தவதான். அதுக்குப் பிறகு ஒரு வார்த்தை பேசலை. மெண்டல் ஷாக். ஒரு மெண்டல் ஹாஸ்பிடலில் ட்ரீட் மெண்ட் கொடுத்தாங்க. அந்த அதிர்ச்சியில் வயித்தில் இருந்த குழந்தை நிக்கலை. ஆறு மாசத்தில் அபார்ஷன். அடுத்த ரெண்டு மூணு மாசத்தில் ஒரு நாள் அந்த க்ளினிக் மொட்டை மாடியில் இருந்து குதிச்சுத் தற்கொலை பண்ணிட்டளாம். அவனோட அம்மாவும் இப்போ ஒரு மெண்டல் பேஷண்ட். நடைப் பிணமா இருக்காங்களாம்”

அவர் சொல்லச் சொல்ல அந்த ஆஃபீஸர் தன் இறுதி நிமிடங்களில் விஸ்வாவிடம் கதறியது மனத்தில் தோன்ற விஸ்வாவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. சில மணி நேரங்களுக்கு முன்னர் இருந்ததை விட பல மடங்கு அதிகமாக மனதைப் பிசைந்து பிழியும் வலி அவனை தலை தெறிக்க வைத்தது.

மூச்சிரைக்க விஸ்வா, “இதைச் சொல்லத்தான் என்னை இன்னைக்கு வரச் சொன்னீங்களா? உங்களை நான் ஒரு ஃப்ரெண்ட்டா நினைச்சுட்டு இருக்கேன். Why do you want to torture me like this? இதை என் கிட்டே சொல்றதில் உங்களுக்கு என்ன அப்படி ஒரு ஆர்வம்?” என்று சொல்லி முடிக்கும் போது அவன் குரல் உடைந்து இருந்தது.

டாக்டர் மதுசூதன், “ஆர்வம் எதுவும் இல்லை. சரின்னு நினைச்சு நாம் செய்யும் செயல்களுக்கு பின் விளைவுகள் எப்பவும் சரியா இருக்காதுன்னு சொல்ல வந்தேன்”

விஸ்வா, “What do you mean?”

டாக்டர் மதுசூதன், “Just what I said”

விஸ்வா, “சரி, இப்போ எதுக்கு அது?”

டாக்டர் மதுசூதன், “இப்பவும் நீ சரின்னு நினைச்சு ஒரு காரியத்தை செஞ்சுட்டு இருக்கே. அதன் பின் விளைவுகளை யோசிச்சியான்னு தெரியலை. அதான் ஒரு சின்ன ரிமைண்டர் .. ”

விஸ்வா, “என் குழந்தைகள் பாதிக்கப் படுவாங்க. They will have to grown up in a broken home. அதைத் தவிற வேற எந்தப் பின் விளைவும் இல்லை”

டாக்டர் மதுசூதன், “ம்ம்ஹூம் …. நீ எதையும் யோசிக்கும் மன நிலையில் இல்லை. அது நல்லா தெரியுது”

விஸ்வா, “உங்களுக்கு ஏன் இப்போ என் மேல் திடீர் அக்கறை?”

டாக்டர் மதுசூதன், “விஸ்வா, என்னோட பேஷண்ட்ஸ் ஒவ்வருவர் மேலும் எனக்கு அக்கறை இருக்கு. அதற்கும் மேல் இண்டியன் ஆர்மிக்கு உன் மேல் அக்கறை இருக்கு”