ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

விஸ்வா, “ஓ.கே”

டாக்டர் மதுசூதன், “Now let us list and then analyze your feelings. கோவம், எமாற்றம், துக்கம் இப்படி என்னெல்லாம் உன் மனசில் இருக்கு சொல்லு”

விஸ்வா, “எஸ். கோபம். முதலில் வந்தது, இப்பவும் இன்னும் என் மனத்தில் நெருப்பா எறிஞ்சுட்டு இருப்பது” என்றவன் நீண்ட பெருமூச்சுடன் தொடர்ந்தான், “நான் சின்ன வயசில் இருந்து உயிருக்கு உயிரா காதலிச்ச என் வனிதா, என் வனிதான்னு நான் பெருமையா நினைச்சுட்டு இருந்தவ வேறு ஒருத்தனுடன் அந்தக் கோலத்தில் பார்த்த போது முதலில் அங்கேயே செத்துப் போயிடலாம்ன்னு இருந்தது. கூடவே அவங்க ரெண்டு பேர் மேலேயும் அடக்க முடியாத கோவம். நான் அப்பவே அங்கேயே அவங்க ரெண்டு பேரையும் கொன்னு போட்டு இருப்பேன்”

டாக்டர் மதுசூதன், “Sorry to interrupt” என்ற பிறகு, “நான் இப்படி நடு நடுவே நீ பேசறதை தடுத்தா பரவால்லையா?”

விஸ்வா, “Its Ok. என்ன சொல்ல வந்தீங்க?”

டாக்டர் மதுசூதன், “ஏன் அவங்களை கொன்னு போடலை? அந்த மாதிரி கொன்னு போட்டவங்க நிறையப் பேரை நான் சந்திச்சு இருக்கேன். மேஜர் வர்மாவைப் பத்தி கேள்விப் பட்டு இருப்பியே”

விஸ்வா, “Yes. அவர் மனைவியையும் நண்பரையும் சுட்டுக் கொன்னார்”

டாக்டர் மதுசூதன், “நீ ஏன் அப்படி செய்யலை”

விஸ்வா மௌனம் காத்தான் …

டாக்டர் மதுசூதன், “ஒரு கடமைன்னு வந்தப்போ ஒரு நல்லவனை” என்றவர் விஸ்வாவை கூர்ந்து நோக்கியபடி, “எஸ், எதிரி நாட்டை சேர்ந்தவன் ஆனாலும், அவன் பெற்றோரைப் பொருத்த வரை, அவன் மனைவியைப் பொருத்தவரை அவன் நல்லவன்தான். அவனை கொல்ல நீ தயங்கலை. சந்திரசேகரைப் போல ஒரு நயவஞ்சகனை ஏன் கொல்லலை? உனக்கு நம்பிக்கை துரோகம் செஞ்ச வனிதாவை ஏன் கொல்லலை?”

விஸ்வா, “மனம் வரலை. தப்பு செஞ்சவங்க அவங்க ரெண்டு பேரும். அவங்களை கொன்னுட்டு நான் எதுக்கு ஜெயிலுக்குப் போகணும்ன்னு விட்டுட்டேன்”

டாக்டர் மதுசூதன், “க்ரேட் விஸ்வா, I am really proud of you. மேலே தொடர்ந்து சொல்லு”

விஸ்வா, “ம்ம்ம்ம் … ஆனா இருந்தும் சந்திரசேகரை அவர் அஞ்சு அடி தள்ளிப் போய் விழும் அளவுக்கு ஓங்கி அறைஞ்சேன். He fell like a rag doll. ஒரு கையால் வனிதாவின் கழுத்தைப் பிடிச்சு நெருக்கி அப்படியே சுவத்தோட தூக்கினேன்.”

டாக்டர் மதுசூதன், “ஒரு நிமிஷம் இப்போ நான் மறுபடி இன்டரப்ட் பண்ணட்டுமா?”

விஸ்வா, “ஓ.கே?”

டாக்டர் மதுசூதன், “அவங்களை கொல்லக் கூடாது முடிவு எடுத்தேன்னு சொன்னே. இருந்தாலும் எதுக்கு அப்படி செஞ்சே?”