ஐ வில் ட்ரை மை பெஸ்ட் டாக்டர் 6 45

டாக்டர் அமுதா, “முடிந்த வரை விவாகரத்தை தவிற்பது என் முதல் குறிக்கோள். அது முடியாதுன்னா தம்பதியினர் ஒருத்தரை ஒருத்தர் வெறுக்காமல் முடிந்த வரை நல்ல நட்புறவுடன் விலக வைப்பது. முக்கியமா குழந்தைகள் இருக்கும் போது கணவன்-மனைவி ஒருத்தரோடு ஒருத்தர் மனம் விட்டுப் பேசும் நிலையில் இல்லைன்னா விவாகரத்து கொடுக்க நான் ஒப்புதல் கொடுக்க மாட்டேன்”

டாக்டர் மதுசூதன், “எங்க அணுகு முறை ரொம்ப மாறுபட்டது. எங்க அகராதியில் விவாகரத்து என்ற வார்த்தைக்கே இடம் இல்லைன்னு சொல்லலாம். கணவன் ஆயிரம் மைலுக்கு அப்பால் எல்லையில் இருக்கும் போது, எந்த நிமிஷமும் ஆபத்தான ஆபரேஷனுக்குப் போக தயாரக இருக்கும் போது மனைவி விவாகரத்து வாங்கிட்டுப் போனா, அந்தக் கணவனால எந்தக் காரியத்திலும் முழு மனதோடு ஈடு பட முடியாது. அப்படியே ஈடு பட்டாலும் அவங்களுக்கு சூசைடல் டெண்டன்ஸி இருக்கும் அவங்கனால மத்தவங்களுக்கு ஆபத்து. சோ, எப்படியாவுது கணவன் மனைவி ஒண்ணு சேர வைப்போம்”

முகம் மலர்ந்த டாக்டர் அமுதா, “இந்தக் கேஸில் அப்படி நடந்தா நான் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டு இருப்பேன் டாக்டர். ஆனா விஸ்வாவுக்கு வனிதா மேல் இருக்கும் கோவம், வெறுப்பு இதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் போயிடுமான்னு தெரியலை”

டாக்டர் மதுசூதன், “டாக்டர், அவனை பார்த்து பேசாதவரை என்னால் திடமா சொல்ல முடியாது. இருந்தாலும் என் அனுபவத்தை வெச்சு சொல்றேன் அவன் நிச்சயம் வனிதாவை வெறுக்கலை, கோவமும் வனிதா மேல் மட்டும் அப்ப்டின்னு சொல்ல முடியாது.”

டாக்டர் அமுதா, “அவன் வனிதாவை வெறுக்கலைன்னு அவனே என் கிட்டே சொல்லி இருக்கான்”

டாக்டர் மதுசூதன், “சரி, முதலில் இந்தக் கேஸ் தொடங்கினதில் இருந்து நீங்க தெரிஞ்சுட்ட விஷயங்களை சுருக்கமா சொல்லுங்க”

தொடக்கத்தில் இருந்து அந்த விவாகரத்துக் கவுன்சிலிங்கில் தான் தெரிந்து கொண்டவற்றை டாக்டர் அமுதா விளக்கினார்

டாக்டர் மதுசூதன், “சோ, கடைசியா வனிதா குழந்தைகளைப் பிரிக்க ஒப்புதல் இல்லைன்னு சொன்னதுக்குப் பிறகு அவன் இந்தக் கவுன்ஸிலிங்கில் ஈடு படலை. இல்லையா? What about Vanitha?”

டாக்டர் அமுதா, “அதற்குப் பிறகு அவளை ஒரு தரம் மீட் பண்ணினேன். விஸ்வா சைன் பண்ணிய மாற்று விவாகரத்து விண்ணப்பத்தை வனிதாவின் லாயர் கோர்டில் தாக்கல் செஞ்சு இருக்காங்க. ஜட்ஜ் கவுன்ஸிலிங்க் முடிஞ்ச பிறகு விவாகரத்துதான் ஒரே வழின்னு வரும் போது அதை தாக்கல் செய்யச் சொல்லி இருக்கார். நான் இன்னும் ஒரு மாசம் டைம் வேணும்ன்னு ஜட்ஜ்கிட்டே கேட்டு இருக்கேன். ஆனா விஸ்வா அதற்குப் பிறகு கவுன்சிலிங்க் தனக்குப் போதும் அப்படின்னோ, இதில் விருப்பம் இல்லை அப்படின்னோ எந்தத் தாக்கலும் செய்யலை. Neither has he asked his lawyer to proceed on the grounds of adultery”

டாக்டர் மதுசூதன், “He is hurt, angry and confused”